இடுகைகள்

மூக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடலை நேர்த்தியாக்கிக்கொள்ள முயலும் இளைஞர்கள்! பாடி டிஸ்மார்பிக் டிஸார்டர் அதிகரிக்கிறதா?

படம்
  கண் இமை திருத்த சிகிச்சை வஜினா மறுகட்டமைப்பு சிகிச்சை ஹைமெனோ பிளாஸ்டி  காஸ்மெட்டிக் மேக் ஓவர்- உடலை அறுவை சிகிச்சை மூலம் திருத்திக்கொள்ள அலைபாயும் இளைஞர்கள்.   இன்று ஒருவர் வேலைக்கு சேர வேண்டுமெனில் நிறுவனங்களில் சில அவர்களின் சமூக வலைத்தள கணக்குகளையும் கேட்கிறார்கள். இந்த வகையில், தங்களின் புகைப்படத்தை பிறர் பார்க்கும்போது கண் புருவம் சரியாக இருக்கவேண்டும். டிஷர்ட் அணிந்தால் மார்பகங்கள் நல்ல பருத்த வடிவத்தில் தெரியவேண்டும். எந்த போஸிலும் மூக்கு அழகாக இருக்கவேண்டும். பேண்ட் அணிந்தால் பெண்குறி புடைப்பாக அதன் வடிவம் வெளியே தெரிவது போல இருக்க கூடாது என பெண்களும், ஆண்கள் தங்கள் வயிற்றை பாளம் பாளமாக வெடித்த வயல்போல கட்டாக இருக்கவேண்டுமென மெனக்கெடுகிறார்கள். தங்களது உடல், மனம் பற்றி நிறுவனத்தினர் தவறாக ஏதும் சொல்லிவிடக்கூடாது என்ன இன்று அதிகம் கவலைப்படுகிறவர்கள் உருவாகிவிட்டனர். மூக்கின் வளர்ச்சி பெண்களுக்கு பதினாறு வயதிலும் ஆண்களுக்கு பதினெட்டு வயதிலும் முழுமை பெறுகிறது. இந்த வயதிற்குள் மூக்கின் அமைப்பை மாற்றி அமைத்தால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படும். இதைப்பற்றி மருத்துவர்கள் எடுத

நத்தையின் உணர்கொம்புகள், கோல்ப் பந்துகளிலுள்ள பள்ளங்கள்! - உண்மையா? உடான்ஸா?

படம்
  நத்தையின் உணர்கொம்புகளே அதன் மூக்கு! உண்மை. நத்தையின் (Slug)  உணர்கொம்புகளை (Tentacles) மனிதர்களின் மூக்கு போல என்று கூறலாம். நத்தையின் உடலில் இரண்டு ஜோடி உணர்கொம்புகள் உள்ளன. முதல் ஜோடி உணர்கொம்புகள் தலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளன. இவை சூழலில் உள்ள ஒளி, ஒலியை உணர உதவுகின்றன. தலையின் கீழ்ப்பகுதியில் உள்ள  இரண்டாவது ஜோடி உணர்கொம்புகள், வேதிப்பொருட்களை அறியவும், மனிதர்களின் மூக்கைப் போல சுவாசிக்கவும் உதவுகின்றன.  கோல்ஃப் பந்துகளில் உள்ள பள்ளங்கள் அழகுக்கானவை! உண்மையல்ல. கோல்ஃப் பந்துகளில் அதன் வடிவத்தைப் பொறுத்து 300 முதல் 500 வரையிலான  பள்ளங்கள் உருவாக்கப்படுகின்றன. பள்ளங்களின் வடிவமைப்பு, மட்டையால் அடிக்கப்பட்டவுடன் பந்து செல்லும் தொலைவை அதிகரிக்க உதவுகிறது. தொடக்கத்தில் கோல்ஃப் பந்து, பள்ளங்கள் இல்லாமல் தான் உருவாக்கப்பட்டது. ஆனால், இப்பந்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது செல்லும் தொலைவு குறைந்தது.எனவே, இதற்கான தீர்வாக காற்றில் அதிக உராய்வின்றி பயணிக்க ஏதுவாக பந்தில் பள்ளங்களை உருவாக்கினர்.  https://www.womansday.com/life/entertainment/a37170576/fun-facts/ https://www.thedodo.

வாசனையை அறியமுடியாத குறைபாடு! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  அனோஸ்மியா ஆங்கில திரைப்படத்தின் பெயரை கூறவில்லை. இது ஒரு குறைபாடு. இந்த குறைபாடு வந்தவர்களுக்கு மணம் தெரியாது. வாழ்க்கை முழுக்க வாசனையை, துர்நாற்றத்தை எதையும் இவர்களால் உணர முடியாது.இதற்கு காப்பீடு கூட கிடைப்பதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கொரோனா காலத்தில்  பலருக்கும் நோய் வந்ததன் முதல் அறிகுறியாக மணத்து முகரும் தன்மை காணாமல் போயிருக்கும். பிறகு அதிலிருந்து மீண்டு வந்திருப்பார்கள்.  வாசனையை முகரும் ரிசெப்டர்கள் மனிதர்களுக்கு 6 மில்லியன் உண்டு. நாய்களுக்கு 300 மில்லியன் உண்டு.  ஒரு டிரில்லியன் வரையிலான வாசனைகளை மனிதர்களால்  அறிய முடியும்.  3.2 சதவீத அமெரிக்கர்களுக்கு அனோஸ்மியா குறைபாடு உள்ளது.  உலக மக்கள்தொகையில் ஐந்து சதவீதம் பேருக்கு அனோஸ்மியா குறைபாடு உள்ளது.  கொரோனா பாதிப்பில் பத்து சதவீத பேருக்கு அனோஸ்மியா பாதிப்பு ஏற்பட்டு ஆறு மாதத்திற்கு பிறகு நீங்கியிருக்கிறது.  பார்க்கின்சன், நீரிழிவு நோய், புற்றுநோய் காரணமாகவும் ஒருவருக்கு அனோஸ்மியா தோன்றலாம். மூக்கில் உள்ளே வரும் காற்றுதான், என்ன வாசனை என்பதை மூளைக்கு கொண்டு செல்கிறது. காற்று ஊடகத்தின் வழியாக நோய்க்கிருமிகள் பரவுவதால

மூக்கைச் சுரண்டி தின்னுவது சரியா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  மியூகோபேஜி - மூக்கைச் சுரண்டி தின்னுவது பதில் சொல்லுங்க ப்ரோ? பட்டாம்பூச்சி தான் புழுவாக இருந்ததை நினைவுகொண்டிருக்குமா? இது அறிவியலாளர்களுக்கே புரியாத புதிர்தான். புழுவாக இருந்து வண்ணத்துப்பூச்சியாக மாறும் நிகழ்ச்சியே வினோதமானது. புழுவை வைத்து செய்த அண்மைய ஆய்வில் வண்ணத்துப்பூச்சியாக ஆனாலும் கூட தான் புழுவாக இருந்த நிலையை மனதில் கொண்டிருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  மூக்கிலுள்ள சளியை எடுத்து தின்பதை நான் ரசித்து செய்கிறேன். இது என் ஆரோக்கியத்தை கெடுக்குமா? மூக்கின் உள்ளே வரும் திரவம், காற்றிலிருந்து மூக்கினுள் செல்லும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை பிற நுண்ணுயிரிகளைத் தடுக்கிறது. அந்த திரட்டை எடுத்து சாப்பிட்டால் அவை உடலுக்குள் சென்றால் ஆபத்துதானே? குழந்தைகள் அறியாமல் செய்யலாம் ஆனால் வயது வந்தவர்கள் இதனை அறியாமலும் செய்யக்கூடாது. சளித்திரட்டை தின்பதை அறிவியல் ரீதியாக மியூகோபேஜி என்பார்கள். இதனை ஒரு பழக்கமாக கைக்கொண்டால் ரைனோடிலேஎக்ஸோமேனியா என்று கூறலாம்.  பிபிசி சயின்ஸ்போகஸ்

மூக்கின் அமைப்பு மனிதர்களுக்கு மாறுபட்டிருப்பது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நமது மூக்கு முன்னோர்களான குரங்குகளை வேறுபட்டிருக்கிறது. கூடுதலாக இரு துளைகள் இருப்பது ஏன்? பரிணாம வளர்ச்சியில் சிம்பன்சி, கொரில்லா, மனிதக்குரங்கு ஆகியவற்றிலிருந்து நாம் வந்ததாக கூறுவார்கள். ஆனால் நாம் அந்தப்பயணத்திலிருந்து கிளை பிரிந்து வந்தவர்கள். இந்த வகையில் அவர்கள் நீங்கள் பரிணாம வளர்ச்சியில் பங்காளிகள் என்று சொல்லலாம். ஆனால் அவர்களுக்கு மூக்கு பெரும்பாலும் பிளாட்டாக இருக்கும்.  நமக்கு அப்படியில்லை. காரணம் நமது மூக்கு வாசனையை நுகர்வதோடு, உடலின் வெப்பத்தை சரியாக வைத்திருக்கும் பணியையும் செய்கிறது. இதன் விளைவாக, மூக்கில் நீர் தேங்க கூடாது. சளி, நீர் என எதுவந்தாலும் குற்றால அருவி போல கொட்டி விடும். ரிசர்வ் வங்கி போல உபரிநிதியை சேமிப்பது போல, நீரைச் சேர்த்தால் உடலில் அதுவே பெரிய நோய் பாதிப்பு ஆகிவிடும்.  நன்றி: பிபிசி

மூக்கு தினந்தோறும் வளருகிறதா? - அறிவியல் என்ன சொல்லுகிறது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எனக்கு என் பெரிய மூக்கைப் பிடிக்கவேயில்லை. அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்குமா? உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதுதான். மூக்கும், காதும் தொடர்ந்து நம் வாழ்நாள் முழுக்க வளர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அனிமேஷன் படங்களில் வருவது போல, படுவேகமாக அல்ல; நிதானமாகத்தான். மிலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 65 வயதுடையவர்களையும், இளைஞர்களையும் ஆராய்ச்சி செய்தார்கள். இதன் விளைவாக, வயதானவர்களுக்கு இளைஞர்களை விட 20 சதவீதம் மூக்கு நீளமாக வளர்ந்துள்ளது தெரிய வந்தது. மூக்கின் அமைப்பு வயதாகும்போது நிறையவே மாறும். ஆனால் என்ன பெரிய குடைமிளகாய் மூக்குள்ளவர்கள் புத்திசாலிகள் என்று வதந்தியைக் கிளப்பிவிடுங்கள். அவ்வளவுதான். துப்பறியும் சாம்பு போல தானாகவே விஷயங்கள் அனுகூலமாக நடக்கும் பார்த்துக்கொள்ளலாம். நன்றி: பிபிசி

வாசனைத்திறனின் வரலாறு!

படம்
வாசனை நுகர்வுத்திறன் நுகர்வுத்திறன் என்பது ஐம்புலன்களின் வரம். உணவுப்பொருள் உப்பிருக்கிறதா, வெந்திருக்கிறதா என்பது வரை வாசனை மூலமே கண்டுபிடிக்க முடியும். மோப்பம் பிடிப்பது என்ற வார்த்தை இல்லாமல் துப்பறியும் நாவல்களும், கௌபாய் காமிக்ஸ்களும் கிடையாது. காரணம், கற்காலத்தில் வேட்டைக்குச் செல்லும்போது உடலின் அத்தனை உறுப்புகளும் விழித்திருந்தால்தான் உயிர் பிழைக்க முடியும். அதில் முக்கியமானது, காதும், மூக்கும். இவை சரியாக வேலை செய்யாவிட்டால் காட்டில் வேட்டையாட வந்த விலங்குக்கே நீங்கள் இரையாகவேண்டியதுதான். அதுபற்றி தகவல்களைப் பார்ப்போம். நமது உடலிலுள்ள 2 சதவீத மரபணுக்கள் வாசனைகளைக் கண்டறிய உதவுகின்றன.  1756 ஆம் ஆண்டு  ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர் கார்ல் லினாஸ் வாசனை நுகர்வை ஏழு வகைப் பிரிவாக பிரித்துள்ளார்.  அமெரிக்க மக்களில் 17 சதவீதம் பேர்களுக்கு வாசனைகளை நுகர்ந்து கண்டறிவதில் பிரச்னை உள்ளது.  மனிதனின் மூளையில் உள்ள நியூரான்கள் மூலம் 1 ட்ரில்லியன் வாசனைகளை கண்டறிய முடியும்.  வாசனைகளைக் கண்டறிவதில் மனிதர்களுக்கு ஒரு சதவீதமும், நாய்களுக்கு 12.5 சதவீதமும் மூளையில் உள்ள அ