இடுகைகள்

தூக்கமின்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மெல்ல தற்கொலைக்கு தூண்டும் குறைபாடு - மேஜர் டிப்ரசிவ் டிஸார்டர் -எம்டிடி

படம்
  மேஜர் டிப்ரசிவ் டிஸார்டர் வேலை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, எண்டோவ்மென்ட் பாலிசி கட்ட வேண்டிய காலம் என சம்பாதிப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கல்கள் உருவாகலாம். பொறுப்புகள் மனதிற்கு சுமையாகத் தோன்றும்போது மனச்சோர்வு உருவாகிறது. இதனை ஒருவர் எளிதில் கையாள முடிந்தால் வெளியே வந்துவிடலாம். ஆனால் மனச்சோர்வு புதிர்ப்பாதையாக தோன்றும்போது, அவர்களுக்கு திகைப்பாகிவிடும்.  மேஜர் டிப்ரசிவ் டிஸார்டரைப் பொறுத்தவரை ஒருவருக்கு முதலில் ஏற்படும் மனச்சோர்வுக்கு மட்டுமே காரணம் இருக்கு்ம். அதாவது சில வகை தூண்டுதல். அதற்குப் பிறகு ஏற்படும் மனச்சோர்வுக்கு எந்த காரணமும் இருக்காது. இந்த மனநல குறைபாடு உள்ளவர்களுக்கு சோகம் என்பதை விட அனைத்திலும் எரிச்சல் இருக்கும். தினசரி செய்யும் செயல்களிலும் அது தீவிரமாக வெளிப்படத் தொடங்கும்.  பொதுவான சமூக நிகழ்ச்சிகளில் மனச்சோர்வு குறைபாடு உள்ளவர்கள் பங்கேற்க மாட்டார்கள். சாப்பிடுவதைக் கூட ரசிக்க முடியாது. செய்கிமா 2 மெட்டல் இசையைக் கூட ரசிக்க மாட்டார்கள். சரியாக தூங்க முடியாது. உடலில் வலி இருப்பது போல தோன்றும். அவர்களுக்கு இந்த பிரச்னையிலிருந்து வெளிய

ரத்தத்தில் காஃபீன் எவ்வளவு நேரம் இருக்கும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி  காபி, கோலா ஆகியவற்றிலுள்ள காஃபீன் நம் உடலில் எவ்வளவு நேரம் ஆக்டிவாக இருக்கும்? லியோ காபியில் சுரத்தே இல்லாத காபியை ஆஹா பேஷ் பேஷ் என சொல்லி குடித்தால் பிரமாதமாக காலை விடியும். குடித்தவுடனே ரத்தத்தில் 45 நிமிடங்கள் கழித்து வித்தியாசத்தை உணர்வீர்கள். ஆனால் இதே காஃபீனை மாத்திரையாக எடுத்துக்கொண்டீர்கள் என்றால், காஃபீன் ரத்தத்தில் பரவ 60 அல்லது 75 நிமிடங்கள் ஆகும். ஆறுமணிநேரங்களுக்குப் பிறகு காபீன் அளவு பாதியாக குறைந்துவிடும் என்பதே உண்மை. இதன் அர்த்தம், மாலை ஏழுமணிக்கு மாமி மெஸ்ஸில் காபி குடித்தால், இரவு பதினொரு மணிக்கு படுக்கும்போதும் ரத்தத்தில் காபீன் அழுத்தம் இருக்கும். நன்றி: பிபிசி படம் -டெம்போ இங்க்லீஸ்