இடுகைகள்

நெசவு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கையூட்டும் நெசவாளர் கிராமம்

படம்
ஜவுளி கிராமம் ! குஜராத்தைச் சேர்ந்த புஜோடி கிராமம் ( கட்ச் மாவட்டம் ) ஜவுளிகளுக்கு புகழ்பெற்றது . இங்குள்ள 250 குடும்பங்களும் நெசவாளர்கள்தான் . வால்ஜி என்பவரே இங்குள்ள நெசவுத்தொழிலில் முன்னணி வகிக்கிறார் . ஏறத்தாழ 150 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார் இவர் . 1974 ஆம் ஆண்டு சிறந்த நெசவாளர் விருதை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கரங்களில் பெற்றவர் வால்ஜி . தற்போது வால்ஜியின் மகன்கள் ஐவரும் தொழிலை தளராமல் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றனர் . நெசவில் உருவாகும் துணிகளும் பரபரவென விற்பதோடு இவரது நெசவுத்தொழிற்சாலையை பார்க்கவென ஆண்டுதோறும் நவம்பர் - பிப்ரவரி வரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்து வியக்க வைக்கின்றனர் . சால்வைகள் , போர்வைகள் , படுக்கை விரிப்புகள் அனைத்தையும் இயற்கையான நிறங்களைக் கொண்டே தயாரிக்கின்றனர் . 2001 ஆம் ஆண்டு இயற்கை பேரழிவிலிருந்து மீண்ட புஜோடி கிராமம் , பல்வேறு கண்காட்சிகளில் பங்கேற்று தொழிலாளர்கள் மாதத்திற்கு 15 ஆயிரம் -20 ஆயிரம் சம்பாதிக்கின்றனர் .