இடுகைகள்

பாதன்கோட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவுடன் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனை தவிர்க்கமுடியாது! - வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

படம்
    வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்     வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முந்தைய அரசு கடைபிடித்த வெளிநாட்டு கொள்கைகளுக்கும் இப்போதையை அரசு கடைபிடிக்கும் கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இன்று உலகம் நிலையில்லாது மாறிவிட்டது. அதனால் அதற்கேற்ப நாம் வெளியுறவுக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டியதிருக்கிறது. அமெரிக்கா தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது. சீனாவின் ஆதிக்கம் வளர்ந்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளின் செயல்பாடுகளிலும் மாறுதல்கள் தொடங்கிவிட்டன. மிகவும் ஊக்கம் கொண்ட நாடாக ரஷ்யா, ஜப்பான் ஆகியவை உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளி்ன் அதிகாரம் மாறி வருகிறது. இதற்கேற்ப இந்திய வழியில் நாம் நடைபோட்டால்தான் நெ.1 அந்தஸ்தை நாம் அடைய முடியும். உள்நாட்டு தீவிரவாதம், வறுமை, பொருளாதார வளர்ச்சி என பல்வேறு அம்சங்களோடு போராட வேண்டியுள்ளது. கடல் பாதுகாப்பு, எல்லைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை இலங்கை, மொசாம்பிக், நேபாளம், ஏமன் ஆகிய நாடுகள் முக்கியமானவை. நாம் பல்வேறு நாடுகளுக்கு கோ்விட் -19 நோய்த்தொற்றுக்கு மருந்துகளை அனுப்பி உதவியுள்ளோம். இந்தியா தேசிய அளவிலும், உலக அளவிலும் தெற்காசியாவில் முக்கியமான நாடு எ