இடுகைகள்

விளையாட்டு- ஃபிபா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரஷ்யாவில் கால்பந்து திருவிழா!

படம்
ஃபிபா 2018: ரஷ்யாவில் கால்பந்து திருவிழா ! மெஸ்ஸி , நெய்மர் , ரொனால்டோ என ஃபுட்பால் சூப்பர்ஸ்டார்கள் காம்போ ரகளையாக களமிறங்கும் 21 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் விரைவில் ஆரம்பம் . இப்போட்டியை ரஷ்யா ஏற்று நடத்துகிறது . 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பிய நாடொன்றில் நடைபெறும் உலகப்கோப்பை போட்டி இதுதான் . வரும் ஆண்டில் ஜூன் 14 - ஜூலை 15 வரை பதினொரு நகரங்களில் நடைபெறும் மெகா வேர்ல்ட்கப் போட்டியில் 32 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன . நவம்பர் மத்தியில் நடைபெறும் தகுதிச்சுற்றுகளில் போட்டியிட்டு வெல்லும் நாடுகள் , டிசம்பரில் குரூப்களாக வகைப்படுத்தப்பட்டு மேட்ச் விசில் ஊதப்படும் . \ ரசனைக்கேற்ப மேட்ச் ! எந்த அணி உங்களுக்கு பிடிக்குமோ , அந்த மேட்ச்சுகளுக்கு மட்டும் டிக்கெட் வாங்கிக்கொள்ளும் வசதி வேர்ல்ட்கப் ஸ்பெஷல் . ஒருவேளை உங்கள் அபிமான அணி மண்ணைக்கவ்வினாலும் அந்த குரூப்பிலுள்ள வின்னர் அணி எது என அறிய மூன்று மேட்சுகள் பார்க்க முடியும் . அந்த அணியும் கோவிந்தா சொன்னால் அதே டிக்கெட்டில் உங்கள் எதிரணியின் நான்கு மேட்சுகளை முகாரி ராகம் இசைத்