பற்பசையைத் தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி? - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு
அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி பற்பசைகளில் மூலிகை, உப்பு, கிராம்பு, கரி என பல்வேறு பொருட்களை பயன்படுத்துகிறார்கள். எதை வாங்குவது? வேப்பிலை, புதினா, கிராம்பு ஆகிய சுவை கொண்ட பற்பசைகள் சுவை சற்று மாறுபட்டதாக இருக்கும். எனவே,அதற்காகவே அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால், இவற்றால் பற்களுக்கு பெரிய நன்மை இல்லை. அப்படி இருப்பதற்கான அறிவியல் ஆதாரங்களும் இல்லை. புதிதாக வரும் சில நிறுவனங்கள் பிரியாணி செய்யத் தேவைப்படும் மசாலாக்களை வைத்தே பற்பசை தயாரித்து ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு பின் சென்று ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சி செய்யச் சொல்கிறார்கள். அவையெல்லாம் உண்மை கிடையாது. பற்பசையின் சுவை சற்று மாறுபட்டதாக இருக்கும். அவ்வளவுதான். ஒரே பற்பசை என சலிப்பு தந்தால், இப்படியான மூலிகை, உப்பு, கரி என டிரெண்டிங் கொண்ட பற்பசைகளை வாங்கி பயன்படுத்தலாம். மற்றபடி பற்பசையில் ஃப்ளூரைடு அவசியம். இந்த வேதிப்பொருள் பற்சிதைவிலிருந்து பற்களைக் காக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு பெருநிறுவனங்கள், சுதேசி நிறுவனங்கள் இரண்டுமே ஏராளமான பொருட்களை ...