இடுகைகள்

வரலாறு- ராணுவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போரில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்ட கதை!

படம்
உலகப்போரில் பெண்கள் ! உலகப்போர் சமயத்தில் அமெரிக்க அரசு , ஆயிரம் பெண்களுக்கு விமானி பயிற்சிகளை அளித்து ஏர்ஃபோர்ஸ் அமைப்பில் அவர்களை இணைத்துக்கொண்டது . பெண்களை போர் அல்லாத பணிகளுக்கு அரசு பயன்படுத்தியது . விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவது , படகுகளை தயாரிப்பது ஆகியவற்றை பெண்கள் செய்தனர் . இவர்களுக்கு Wasp( Women Airforce Service Pilots ) என்று பெயர் . பேர்ல் துறைமுகம் தாக்கப்பட்டபின் இரண்டாம் உலகப்போர் தொடங்க , பெண்களும் போரில் களமிறக்கப்பட்டனர் . உற்பத்தி செய்யப்பட்ட விமானங்களை தேவைப்படும் இடத்திற்கு கொண்டு செல்லும் வேலைக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் . ஜாக்குலின் கோச்ரன் விமானி இச்செயல்பாட்டிற்கு முக்கிய காரணம் . பழுதான விமானங்களை எடுத்துச்செல்வது என பல்வேறு வேலைகளில் ஈடுபட்ட பெண் விமானிகளில் 38 பேர் விபத்துகளில் மரணித்தனர் . இறந்த பெண் விமானிகளின் குடும்பங்களுக்கு அரசு , ஆண் வீரர்களுக்கு அளிக்கும் மரியாதை , இழப்பீடு ஆகியவற்றை கொடுக்க மறுத்த அவலமும் நடந்தேறியது . இறந்த விமானிகளுக்கான இறுதிச்சடங்கிற்கான செலவுகளை சக தோழிகளே ஏற்றுசெய்தனர் . மேலும் அமெரிக்