போரில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்ட கதை!



Image result for second world war women




உலகப்போரில் பெண்கள்!

உலகப்போர் சமயத்தில் அமெரிக்க அரசு, ஆயிரம் பெண்களுக்கு விமானி பயிற்சிகளை அளித்து ஏர்ஃபோர்ஸ் அமைப்பில் அவர்களை இணைத்துக்கொண்டது. பெண்களை போர் அல்லாத பணிகளுக்கு அரசு பயன்படுத்தியது. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவது, படகுகளை தயாரிப்பது ஆகியவற்றை பெண்கள் செய்தனர். இவர்களுக்கு Wasp( Women Airforce Service Pilots) என்று பெயர்.


பேர்ல் துறைமுகம் தாக்கப்பட்டபின் இரண்டாம் உலகப்போர் தொடங்க, பெண்களும் போரில் களமிறக்கப்பட்டனர். உற்பத்தி செய்யப்பட்ட விமானங்களை தேவைப்படும் இடத்திற்கு கொண்டு செல்லும் வேலைக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜாக்குலின் கோச்ரன் விமானி இச்செயல்பாட்டிற்கு முக்கிய காரணம். பழுதான விமானங்களை எடுத்துச்செல்வது என பல்வேறு வேலைகளில் ஈடுபட்ட பெண் விமானிகளில் 38 பேர் விபத்துகளில் மரணித்தனர். இறந்த பெண் விமானிகளின் குடும்பங்களுக்கு அரசு, ஆண் வீரர்களுக்கு அளிக்கும் மரியாதை, இழப்பீடு ஆகியவற்றை கொடுக்க மறுத்த அவலமும் நடந்தேறியது. இறந்த விமானிகளுக்கான இறுதிச்சடங்கிற்கான செலவுகளை சக தோழிகளே ஏற்றுசெய்தனர். மேலும் அமெரிக்க கொடியை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது

பிரபலமான இடுகைகள்