யாருக்கு பர்த்டே? - அவசர கமெண்ட் காமெடி


Image result for vennela kishore expression




பிட்ஸ்!

இறைச்சி சாப்பிடுவது தவறா?

இந்திய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட எது உங்கள் சாய்ஸ்? என்ற ட்விட்டர் படம்தான் இணையத்தில் அதிரிபுதிரி சர்ச்சை. இதில் குண்டாக உள்ள பெண்ணின் வடிவம் இறைச்சியாலும், ஒல்லியாக உள்ள பெண்  காய்கறிகளாலும் உருவாக்கப்பட்டிருப்பது கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது. குண்டாக இருக்கும் பெண்கள், சைவ பழக்கத்தை அரசு விளம்பரம் செய்கிறதா என நெட்டிசன்களின் கேள்விக்கு அரசின் அட்மின் எந்த பதிலும் சொல்லவில்லை.

முஸ்லீமுக்கு தடா!

லக்னோவைச் சேர்ந்த அபிஷேக் மிஷ்ரா, டாக்சிக்கு நோ  சொல்லி செலிபிரிட்டியாகி உள்ளார். இந்து அமைப்பைச் சேர்ந்த அபிஷேக், வண்டி ஓட்டுநர் முஸ்லீம் என்பதால் தன் பயணத்தை கேன்சல் செய்து அதனை ட்விட்டரில் எழுத, கடும் விமர்சனங்களால் ட்ரெண்ட்டிங் ஆனவருக்கு டாக்சி நிறுவனமும், ஜாதி மதம் பார்த்து ஓட்டுநர்களை நிராகரிப்பதில்லை என்று மூக்கை உடைத்தாற்போல சொல்லி அப்ளாஸ் வாங்கியுள்ளது.\

ரத்தத்தில் உணவு!

லண்டனைச் சேர்ந்த ஊலலா எனும் புகழ்பெற்ற பேக்கரி, ரத்தத்தில் நனைத்த டிசைனில் மெக்ரூனை உருவாக்கி அதிர்ச்சி அளித்துள்ளது. பிஜிபி எனும் தன்னார்வ தொ்ண்டு நிறுவனத்திற்காக இம்முயற்சி. சானிடரிபேடுகள் வாங்கமுடியாத ஏழை பெண்களுக்கு இந்த மெக்ரூன் பாக்ஸ்களை வாங்கும் தொகை சென்று சேருமாம். எட்டு பீஸ்கொண்ட பாக்ஸின் விலை ரூ.2, 272.

எலிக்கு பர்த்டே!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபேஸ்புக் நண்பர் ஒருவர், தன் நண்பருக்கு புதிதாக பிறந்த வாம்பட் என்ற சிறிய கரடி போன்ற உயிரியின் படத்தை அனுப்பி கானுயிர் நேசம் காட்டி பதிவிட்டிருந்தார். அந்த உயிரியை புதிதாக பிறந்த தோழியின் குழந்தை என தவறாக புரிந்துகொண்ட தோழி, "உன் குழந்தை செம அழகு" என பதிவிட பலரும் கெக்கே பிக்கே என சிரித்து ஷேர் செய்ய ட்ரெண்டிங் காமெடியில் டாப் இடம் பிடித்திருக்கிறது. படிக்காம கமெண்ட் பண்ணினா இப்படித்தான்!