கே.ஜே.அல்போன்ஸ்: நறுக்குனு நாலு கேள்வி!




Image result for kj alphons illustration





முத்தாரம் Mini

வலதுசாரியாக இருந்தும் அரசு-தனியார் கூட்டை ஏன் மறுக்கிறீர்கள்? செங்கோட்டையை டால்மியா பாரத் எனும் லாபநோக்கு நிறுவனத்திற்கு அளித்திருக்கிறீர்களே?
செங்கோட்டை தனியார் நிறுவனத்திற்கு விற்கவோ, வாடகைக்கோ அளிக்கப்படவில்லை. செங்கோட்டையை டால்மியா நிறுவனம் தத்தெடுத்துள்ளது.

இதுபற்றிய செய்திகள் எதுவும் உண்மையில்லையா?

அவை உண்மையல்ல. நம்நாட்டிலுள்ள செங்கோட்டை உள்ளிட்ட நினைவுச்சின்னங்களை பாருங்கள். எங்கும் அழுக்கு. குப்பை. சுற்றிப்பார்க்க வருபவர்கள் அமர இருக்கைகள் கூட இல்லை. சுதந்திரமடைந்து எழுபது ஆண்டுகளாகியும் இவற்றை உருவாக்க நம்மால் முடியவில்லை.

இந்தியாவிலுள்ள எந்த நினைவுச்சின்னங்களும் சுற்றுலாவுக்கு தகுதியில்லை என்று சுற்றுலா அமைச்சரான நீங்களே கூறுகிறீர்கள்?

அண்மையில் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தேன். உள்ளே பரவாயில்லை என்றாலும் வெளியே இருந்த நிலைமை என்னால் சகிக்கவே முடியவில்லை.

தாஜ்மஹால், செங்கோட்டை இரண்டிலும் சுற்றுலா வருமானம் இருபது கோடி. இதனை நிர்வகிக்க 50 லட்சத்தை உங்கள் அமைச்சகம் ஒதுக்க முடியாதா?

கடந்தாண்டு சுற்றுலா வருமானம் 1,80,000 கோடி. நிதியமைச்சரிடம் இத்தொகையை என்துறைக்கு அப்படியே வழங்க எப்படி கூறமுடியும்?


-   கே.ஜே.அல்போன்ஸ், மத்திய சுற்றுலாதுறை அமைச்சர்.

பிரபலமான இடுகைகள்