வாங்கலியோ பூடான் பெட்ரோல்!
பூடான் பெட்ரோலுக்கு
கிராக்கி!
இந்தியாவில் எண்ணெய்
நிறுவனங்களின் விலைநிர்ணய உரிமையால் கிடுகிடு உயர்வாகும் பெட்ரோல், டீசல்
விலை சுனாமியில் தப்பிக்க பார்டர் இந்தியர்கள் பூடானை நாடியுள்ளனர்.
பூடானிலுள்ள சம்ட்ரூப்
ஜாங்கர் நகருக்கு நூற்றுக்கணக்கிலான இந்தியர்கள் பெட்ரோலுக்காக படையெடுத்து வருகின்றனர். பூடானில்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 52 என்பதால் இந்த கிராக்கி.
எரிபொருள் மட்டுமல்ல மதுபானங்களும் 2 ஆயிரம் ரூபாய்
வரை விலை குறைவாக கிடைப்பதால் குடிமகன்களும் தற்போது பூடானில் டேரா போட்டுள்ளனர்.
பூடானுக்கு எரிபொருள் தரும்
இந்திய நிறுவனங்கள் ஜிஎஸ்டியை அமல்படுத்ததால் பெட்ரோலுக்கு 17%, டீசலுக்கு 14% வரி குறைவாக உள்ளது. வரிச்சுமையை பூடான் அரசு ஏற்றதால், மக்களுக்கு எண்ணெய்
விலையில் மாற்றம் இல்லை. ஆனால் இந்தியர்களின் படையெடுப்பால் நபர்
ஒருவருக்கு 500 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது. .