காரில் மறைந்துபோன டாக்டர்!
காணாமல்
போன டாக்டர்!
1902 ஆம் ஆண்டு. "நான்
நகரில் அறுவை சிகிச்சை செய்யப் போகிறேன். நிறைய பணம் கிடைக்கும்"
அவ்வளவே கடிதத்திலிருந்த செய்தி. டாக்டர் வில்லியம்
ஹோராடியோ பேட்ஸ் இப்படியொரு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றவர் பல்லாண்டுகளாகியும்
நியூயார்க் திரும்பவில்லை.
அவரது
மனைவி அய்டா சீமன் உறவினர்கள், நட்புகள், போலீஸ் என அலைந்தும் கணவர் நியூயார்க் வீட்டுக்கு மீளவில்லை. சோகத்திலேயே 1907 ஆம் ஆண்டு இறந்துபோனார். பின் 1910 ஆம் ஆண்டு வடக்கு டகோடாவில் கண்டுபிடிக்கப்ட்ட
டாக்டர் பேட்ஸூக்கு நியூயார்க் நினைவுகள் ஏதுமில்லை. 1917 இல்
கண் மருத்துவரான பேட்ஸ், கண்ணாடி அணியாமல் சூரியனைப் பார்த்தாலே
பார்வை தெளிவாகும் என பாஜகவைப் போல் சூப்பராக யோசித்து சொன்ன தியரிகள் அறிவியல் சங்கங்களாலயே
கண்டிக்கப்பட்டன. ஆனால் மக்களிடையே அபரிமித வரவேற்பு கிடைத்தது.
மறுமணம் செய்து வாழ்ந்த டாக்டர் பேட்ஸ் 1931 ஆம்
ஆண்டு இறந்துபோனாலும் அவரின் அம்னீசியா நினைவு சர்ச்சை ஓயவில்லை. 1942 இல் Art of Seeing என டாக்டர் பேட்ஸின் பக்தர் ஆல்டூ
ஹக்ஸ்லே கண்சோதனைகளை முன்வைத்து நூலே எழுதினார்.