நானி பாட்டி என்ன சொல்கிறார்?
அறிவுசார்சொத்துரிமைக்கு
உதவும் ஐபி நானி பாட்டி!
மேற்கு வங்காள
இயக்குநர் சத்யஜித்ரேயின் அயல்கிரகவாசி ஐடியாவை லபக்கித்தான் ஏலியன் படங்களை ஸ்பீல்பெர்க்
எடுத்தார் என இன்றளவும் குற்றச்சாட்டு உண்டு. நிஜமோ, பொய்யோ
அறிவுசார்சொத்துரிமை இருந்தால் மூளையில் கணநேரத்தில் உதித்த ஐடியாவை கறாராக காப்பாற்றியிருக்கலாம்
அல்லவா? இதற்காகத்தான் வணிகத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு ஐபி நானிபாட்டியை
அறிமுகப்படுத்தியுள்ளார்.
"ஒருவரின்
ஐடியாவை திருடுவது மோசமான குற்றச்செயல். அதற்கான விழிப்புணர்வை
ஏற்படுத்தவே ஐபி நானி பாட்டி மற்றும் அவரின் பேரன் ஆதித்யாவை(சோட்டு) அறிமுகப்படுத்தியுள்ளோம்" என்று டெல்லியில் நடந்த அறிவுசார்சொத்துரிமை மாநாட்டில் பேசியுள்ளார் வணிக
அமைச்சர் சுரேஷ்பிரபு. உலக அறிவுசார்சொத்துரிமை இயக்கத்தின் விளம்பரங்களிலும்
பயன்படுத்தப்படவிருக்கிறது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான ஐபிஆர்
மசோதாவும் கடந்தாண்டே அமுலுக்கு வந்துவிட்டது. "பள்ளிக்குழந்தைகள்
தங்கள் சிந்தனைகளை சுதந்திரமாக வளர்க்க இவ்விதிகள் உதவும்" என்கிறார் அமைச்சர் சுரேஷ்பிரபு.