டெரர் பத்தினி!


Image result for brahmanandam



ஏமாறுவது யார்?

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 23 ஆயிரம் வங்கி மோசடி வழக்குகளில் ஒரு லட்சம் கோடி மக்கள் பணம் வங்கிகளில் சூறையாடப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. 2016-17 ஆண்டுகளில் 5 ஆயிரமாக இருந்த வங்கி மோசடிகளின் எண்ணிக்கை ஏப். 2017- மார்ச் ,18 வரையிலான காலத்தில் 5,152 ஆக அதிகரித்துள்ளது கவலைப்படவேண்டிய விஷயம்.

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில்(2017-18) காலகட்டத்தில் 28 ஆயிரத்து 459 கோடி பணமானது சிக்கலில் உள்ளது என்கிறது சென்ட்ரல் வங்கி. மேலே சொன்ன ஆண்டுகள் மட்டுமல்ல 2014 ஆம் ஆண்டிலிருந்தே வங்கி மோசடிகளும் வாராக்கடன்களின் சுமையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. 2014-15 ஆண்டுகளில் 19 ஆயிரத்து 455 கோடி ரூபாயும், 2015-16 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 698 கோடி ரூபாயும் கடன் லேபிளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நீரவ்மோடி, மெகுல் சோக்ஸி, சிவசங்கரன் மற்றும் கடனை அங்கீகரித்த வங்கி அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.


2

Related image




டெரர் பத்தினி!

பெற்றோர் பார்த்துவைத்த கல்யாணம். மனம்கொள்ளாத மகிழ்ச்சியோடு சரஸ்வதிக்கு மங்கலநாணை முடிச்சிட்டார் ஆந்திராவின் விழியாநகரத்தைச் சேர்ந்த யமகா கௌரிசங்கர். ஆனால் பத்து நாட்களில் தன் உயிர்பறிபோக மனைவியே காரணமாக இருக்கப்போகிறாள் என்ற உண்மையை அவர் அறியவில்லை.

 கல்யாணத்திற்கு முன்பே கௌரியின் மனைவி சரஸ்வதிக்கு இருந்த காதல் உறவு, திருமணத்திற்கு முறித்துபோட்டிருக்கிறது. ஷாப்பிங் சென்றுவிட்டு வரும்போது ஒன் பாத்ரூம் அவசரம் சொல்லி பைக்கிலிருந்து நைசாக சரஸ்வதி இறங்கிக்கொண்டார். பிளான் செய்த கூலிப்படையினர் மூவர் பைக்கிலிருந்த கௌரிசங்கரை இரும்புராடால் தலையில் அடிக்க, ஸ்பாட்டிலேயே கௌரி அவுட். பின் நகையை மறைத்து வைத்துவிட்டு வந்த சரஸ்வதி 'ஐயோ கொலை' என அலறி டிராமா போட்டார். என்கொயரியில் முன்னுக்குப் பின் முரணாக சரஸ்வதி உளற, உஷாரான போலீஸ் கறார் ட்ரீட்மெண்ட் கொடுத்தனர். கல்யாண மோதிரத்தை கொடுத்து கூலிப்படை செட் செய்து கணவரை கொன்றிருக்கிறார் சரஸ்வதி என கன்ஃபார்ம் ஆகியுள்ளது. டெரர் பதிபத்தினி

3

Related image


உலகம் சந்திக்கும் நிதிநெருக்கடி!

தனி நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதிகளால் நேரும் பணவீக்கம் என்பதைத் தாண்டு உலகநாடுகள் பெற்றுள்ள கடன் 164 ட்ரில்லியன் அளவுக்கு உயர்ந்துள்ளதை உலக நிதிக்கழகம்(IMF) எச்சரித்துள்ளது.

தற்போது உலகிலுள்ள உள்நாட்டு உற்பத்திக்கு எதிராக அரசு மற்றும் தனியாரின் கடன் அளவு விகிதம் 225 சதவிகிதம்(2016) என்பதை தன் அறிக்கையில் நிதிக்கழகம் வலுவாக கூறியுள்ளது. "இது மிக அதிக அளவு. எல்லை மீறும்போது நாடுகளின் வணிகத்தில் நிதிப்பேரழிவு நிகழும்" என்கிறார் உலக நிதிக்கழகத்தின் பணவீக்கத்துறையைச் சேர்ந்த விட்டர் காஸ்பர். அமெரிக்காவின் நிதிச்சீரழிவுகளிலிருந்து வணிகம் மெல்ல இப்போதுதான் மீண்டுவரும் நிலையில் இப்படியொரு வார்னிங்கை உலக நிதிக்கழகம் கொடுத்துள்ளது. தற்போது மூன்று காலாண்டுகளாக செய்துவரும் பல்வேறு திட்டங்களின் வாயிலாக தனியார் கடன்களின் அளவு சுனாமியாய் அதிகரித்து வருவதை குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளது உலக நிதிக்கழகம்.  


 

பிரபலமான இடுகைகள்