தணிக்கை எனும் ஒடுக்குமுறை!
சீனாவின் தணிக்கை!
கடந்தாண்டு சீன
அரசு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த தடை விதித்தது. தணிக்கைக்கு உட்படாமல் செய்தி
பரிமாறும் அதன் வசதிதான் இதற்கு காரணம். வெளியுலகில் பயன்படுத்தும்
ஃபேஸ்புக், கூகுள்,டிவிட்டர் ஆகியவற்றுக்கு
இணையாக சீனாவில் ரென்ரென், பைடு, வெய்போ
ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்காவுக்கு
அடுத்து மிகப்பெரிய வணிகச்சந்தை கொண்ட நாடு சீனா. புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்களின்
சேவைகளை நீங்கள் பெறமுடியாதுதான் ஆனால் அதற்கு ஈடான சீன நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்தலாம்.
எ.கா.அமேஸான் - அலிபாபா, யூட்யூப்- யூகூ.
"அரசியல்ரீதியிலும், மக்களின் பாதுகாப்பு
விஷயங்களிலும் வெளிநாட்டு நிறுவனங்களை விட உள்நாட்டு நிறுவனங்களை சீன அரசு நம்புகிறது"
என்கிறார் பிட்டிஃபென்டர் நிறுவன இயக்குநர், ஜாகிர்
உசைன். மேலும் அலிபாபா, டென்சென்ட் போன்ற
நிறுவனங்கள் உலகளவிலான போட்டியையும் எதிர்கொண்டு வருகின்றன. இந்தியாவின்
வணிகம் முழுக்க உலக நாடுகளின் கொள்கை சார்ந்த உள்ள நிலையில் சீனாவின் வர்த்தக,
தகவல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கற்கவேண்டியது நிறைய உள்ளது.