ரோக் - மசாலா டாக்கீஸ்



Image result for rogue telugu movie




ரோக்
பூரிஜெகன்னாத்
ஒளிப்பதிவு:முகேஷ்
இசை:சுனில் காஷ்யப்



Image result for rogue telugu movie




முன்கோபமும், காதலும் கொண்ட இளைஞனின் கதை. கிளுகிளுப்பான படமாக இருக்கும் என முதல் பாட்டை பார்த்ததும் பலரும் நினைப்பார்கள். படத்தில் ஆக்ரோஷமும், வன்மமும் கொப்பளிக்கிறது. இஷானை கமிஷனரின் தங்கை அஞ்சலி 1 ஏமாற்றிவிடுகிறார். கல்யாணத்தை தடுக்க நினைத்து இஷான் செய்யும் கலாட்டாவினால் சிறைதண்டனை கிடைக்கிறது. பின் விடுதலை ஆகி வீட்டுக்குப் போனால் தந்தை வெளியே போ என விரட்டுகிறார். காரணம், கல்யாண வீட்டு கலாட்டாவில் மூர்க்கத்தனமாக ஒருவரை டேபிளில் தூக்கி விசிறியதில் இருகால்களும் காவலருக்கு உடைந்துவிடுகிறது. வருமானமின்றி தவிக்கும் அக்குடும்பத்திற்காகவே தன் மகனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் இஷானின் தந்தை. பின்னர் உண்மை புரிந்து காவலரின் வீட்டுக்கு சென்று வட்டிப்பணத்தையும்  கட்டி குடும்பத்தை அய்யனாராக காத்து நிற்கிறார். சீரியசான கதை போல தோன்றலாம். இதில் அலி இருப்பதால் காமெடியும் உண்டு. உடைந்த கால்களைக் கொண்ட காவலருக்கு பாரில் பாட்டுப்பாடும் தங்கை உண்டு. யெஸ் லவ் போர்ஷன்(பாட்டு கம்போஸ் பண்ணி வெச்சிருக்கோமே? பாஸ்)  அஞ்சலி 2 அறிமுகம். ஸித் படத்தில் கிளுகிளுப்பு ஊட்டிய மன்னாரா சோப்ரா இதில் அடக்க ஒடுக்கம் காட்டி நடித்துள்ளார். மற்றபடி கதையின்  பயணம் தாகூர் அனுப் சிங் வந்தபின்தான் நமக்கும் ஞாபகமே வருகிறது.

வில்லன் என்பதைத் தாண்டி அனுப் சிங் பேட்மேனின் ஜோக்கரை நினைவுபடுத்துகிறார். உண்மையிலே படம் முழுக்க வருகிறார். படம் தடுமாறும்போது படத்தை மட்டுமல்ல நம்மையும் காப்பாற்றுகிறார். படத்தின் பாடல்கள் இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று துறை சாயலும் இருப்பதால் கேட்கலாம். மன்னாரா சோப்ரா இருப்பதால் பலரும் வீடியோசாங் கேட்பதை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் ஏஞ்சலா(அஞ்சலி 1) உங்களை திருப்தி படுத்துவார். பாட்டும் ஃபைட்டும் மட்டும்தான் திருப்தி அளிக்கிறது. பூரியின் படங்களில் ஹீரோயின் அணிந்துவரும் ஆடைகள் அசத்தல். ஹீரோ விட்டேத்தியான ஹேர்ஸ்டைலில் விநோத பிலாசபி பேசி அலைவார்கள். இப்படத்திலும் அது அப்படியே இருக்கிறது.   உ.தா: இஷ்க், பிஸினஸ்மேன், லோஃபர்.