சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கோள் உண்மையா?


Image result for ninth planet


சூரியக்குடும்பத்தில் புதிய கோள்!-.அன்பரசு

சோலார் குடும்பத்தில் புதிய கோளுக்கு அட்மிஷன் கிடைத்துள்ளதாக அண்மைய ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியுள்ளது. ப்ளூடோவை கோளாக கருதமுடியாது என ஆராய்ச்சியாளர்கள் 2006 ஆம் ஆண்டே முடிவு செய்துவிட்டதால் அதனை நாம் கணக்கில் கொள்ளவேண்டியதில்லை. டார்க் எனர்ஜி ஆய்வு முறையில் நெப்டியூனை கடந்து பெரிய வடிவில் சூரியனைச் சுற்றிவரும் புதிய கோளுக்கு 2015 BP519 என்று பெயர் சூட்டியுள்ளனர். "பூமியின் வட்டப்பாதையிலிருந்து 54 டிகிரி கோணத்தில் 35-862 மடங்கு பெரியதான வட்டப்பாதையில் இக்கோள் பயணிக்கிறது."  என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரான ஜூலியட் பேக்கர். புதிய கோளை மாடலாக உருவாக்கி அதன் இயக்கத்தை கணித்து வருகின்றனர்.

சூரியனுக்கு பின்புறமாக உள்ளதாக கருதப்படும் 2015 BP519 எனும் இக்கோள் நெப்டியூன் மற்றும் யுரேனஸ் போல வாயுக்கள் நிரம்பியதாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூட்டிக்கழித்து சொன்ன கணக்கு. ஏன் இக்கோளின் இருப்பை உறுதிப்படுத்த முடியவில்லை என்றால் டெலஸ்கோப்புகளாலும் அணுகமுடியாதபடி கோள் அமைந்துள்ள தொலைவு முக்கியக்காரணம். நேரடியாக கண்களால் பார்க்கமுடியாத கோளை அதன் இயக்கத்தை ஆய்வுகள் மூலம் அறியலாம்.



இக்கோளை இன்று புதிதாக கண்டுபிடித்ததாக யாரும் கிரடிட் வாங்க முடியாது. ஏனெனில் இப்படி ஒரு கோளைப் பற்றி 2016 ஆம் ஆண்டே கலிஃபோர்னியா டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த கான்ஸ்டான்டின் பேட்டிகின், மைக்கேல் ப்ரௌன் ஆகிய இரு ஆராய்ச்சியாளர்கள் துப்பு கொடுத்துவிட்டனர். அதோடு ஒப்பிட்டால் கச்சிதமாக பொருந்திவருகிறது 2015 BP519 எனும் இந்தக்கோள். ஆனால் இதிலும் ஆராய்ச்சியாளர்களிடையே பல்வேறு கருத்துகள் உள்ளதால் உறுதியாக ஒன்பதாவது கோள் இதுதானா என்று கூறமுடியவில்லை. ப்ளூடோவின் இடத்தை நிரப்புவதற்கான சாத்தியத்தை அடுத்தடுத்த ஆராய்ச்சிகள் உருவாக்கக்கூடும்.


பிரபலமான இடுகைகள்