ஐரோப்பாவில் தொடங்கிய கொடூரநோய்!
தொழுநோயின் நதிமூலம்
எது?
ஐரோப்பாவிலிருந்து
தொழுநோய் உலகெங்கும் பரவியுள்ளது என அகழ்வாராயச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு
முன்பு தொழுநோயின் பூர்விகம் ஆசியா என கருதப்பட்டு வந்தது.
"பல
நூற்றாண்டுகளாக கிழக்கு நாடுகள் மற்றும் சீனாவிலிருந்து தொழுநோய் பரவியது என்று யூகமாய்
நம்பப்பட்டு வந்தது. தொழுநோய் பாக்டீரியத்தின் எச்சங்கள் தென்கிழக்கு
ஐரோப்பாவிலிருந்து பரவியிருக்கலாம் என்ற தீர்மானத்தை ஏற்படுத்தியுள்ளது"
என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹெலன் டோனக்.
இன்றும் உலகளவில் 2 லட்சம் தொழுநோயாளிகள் இருப்பதாக
மருத்துவ அறிக்கைகள் தகவல் தருகின்றன. 90 மண்டை ஓடுகளை அறிவியலாளர்கள்
ஆராய்ந்ததில் கி.மு. 400-1400 காலத்திலேயே
தொழுநோய் பாக்டீரியம் இருப்பதை கண்டறிந்தனர். எசெக்ஸிலுள்ள செஸ்டர்ஃபீல்டில்
கிடைத்துள்ள லெப்ரே நுண்ணுயிரிக்கு வயது கி.மு.415-545
க்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடரும் ஆராய்ச்சிகள்
தொழுநோய் குறித்து துல்லியமான தகவல்களை தரக்கூடும்.