"இந்தியா புதுமையான தேசம்"-எழுத்தாளர் லாரன்ஸ் ஆஸ்பர்ன்



Image result for lawrence osborne



முத்தாரம் Mini

எழுத்தாளர், பயண எழுத்தாளர் என்ற இரண்டு பதங்களில் எது உங்களுக்கு பிடித்தமானது?

நீங்கள் கூறும் காலாவதியான பதங்கள் இனியும் பயன்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. லண்டன்- இஸ்தான்புல் வரை நடத பேட்ரிக் லெய் ஃபெர்மர் போன்று இன்று யாரும் பயணிக்க முடியாது. எனது பயண அனுபவங்கள் 2005 ஆம் ஆண்டு நியூயார்க்கர் இதழில் வெளியானது. அதன் பின் பயண எழுத்து என்பதைவிட்டு பயணிக்க தொடங்கிவிட்டேன்.

நிறையப்பேர் பயணிக்கிறார்கள். ஆனால் அதனை எழுதுவது சிலர்தான். எழுத்து என்பது குறிப்பிட்ட திறமை எனலாமா?

எழுத்து என்பது உள்வாங்குவதுதான். லீவுக்காக ஊர் சுற்றுபவர்களோடு பயணிப்பதில்லை. எனக்குள் நான் தனிமையாக பயணிக்க விரும்புகிறேன். வெக்கேஷன் என்பது கடந்துசெல்வது, பயணம் என்பது தங்கிச்செல்வது போல என்பது அமெரிக்க இசையமைப்பாளர் எழுத்தாளர் பால் பௌலெஸ் வாக்கு.

இந்தியா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்னைப்போன்ற ஆங்கில ஆட்களுக்கு இந்தியா புதுமையான தேசம். தாய்லாந்தைவிட இந்தியாவில் இலக்கியரீதியில் பாகிஸ்தான், வங்கதேச நண்பர்கள் எனக்கு அதிகம். அஜந்தா குகைகள், லடாக், கொல்கத்தா என எனக்கு இங்குள்ள இடங்கள் மிகப்பிடித்தமானவை.

-லாரன்ஸ் ஆஸ்பர்ன், எழுத்தாளர்.