வானமே கூரை!
வானமே
கூரை!
தலைப்பை போலவே வாழ நினைக்கலாம்.
அது அவ்வளவு சுலபமல்ல. நியூசிலாந்தில் நூறில் ஒருவர் வீடற்றவராக(40,000 பேர்களில்)
உள்ளார். ஜூன் மாதம் முதல் குளிர்காலம்(-14 டிகிரி வெப்பநிலை) தொடங்கவுள்ளநிலையில்
வீடற்றோர் பிரச்னை கவனம் பெறுகிறது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா
ஆர்டெர்ன், நகரமேம்பாட்டுத்துறை அமைச்சர் பில் வைஃபோர்டு ஆகிய இருவரும் நூறு
மில்லியன் டாலர்களை வீடற்றோர்களுக்காக ஒதுக்கியுள்ளனர். இதன்மூலம் வீடற்ற 40
ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள். "பனிக்காலத்தில் காரில வீதிகளில் மக்கள்
உறங்குவது அவலமானது. இப்பிரச்னையைத் தீர்க்கவே ஆக்லாந்து, வெலிங்க்டன் ஆகிய
நகரங்களில் காப்பகங்களை உருவாக்கவிருக்கிறோம்" என தகவல் தெரிவித்துள்ளார்
அதிகாரி ஒருவர்.