நேர்காணல்: "பாகிஸ்தானில் ஜனநாய ஆட்சிக்கு வாய்ப்பில்லை"




Image result for hussain haqqani



முத்தாரம் நேர்காணல்

"பாகிஸ்தானில் ஜனநாய ஆட்சிக்கு  வாய்ப்பில்லை"

ஹூசைன் ஹக்கானி, முன்னாள் பாகிஸ்தான் தூதர்.

தமிழில்: .அன்பரசு


Image result for husain haqqani new book



ஹூசைன் ஹக்கானி அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதராக(2008-2011), பணியாற்றினார். In Reimagining Pakistan: Transforming a Dysfunctional Nuclear State (Harper Collins, 2018) எனும் இந்நூலில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள், சீனா- பாகிஸ்தான் உறவு, காஷ்மீர் பிரச்னை, இந்தியா-பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை பற்றி பேசுகிறார்.

மூன்று மாதங்களில் பாகிஸ்தானில் பொதுதேர்தல் வரவிருக்கிறது. இதன் மூலம் ஜனநாயகம் மலர வாய்ப்புள்ளதா?

பாகிஸ்தானில் பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவங்களால் ஜனநாயகம் இன்னும் மீளாமல் உள்ளது. பாகிஸ்தானின் ராணுவம், மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும். இம்முயற்சி நடைபெறாதபோது பாகிஸ்தானில் ஜனநாயக அரசு அமைவது கனவுதான்.


பாகிஸ்தானின் பிரச்னைகள் தொடங்கியதாக 1958 ஆம் ஆண்டை குறிப்பிட்டுள்ளீர்களே?

பிரிவினை நிகழ்ந்தபோது ராணுவத்தில் 33 சதவிகிதமும், வருமான ஆதாரங்கள் 17 சதவிகிதமும் ஆங்கிலேயே அரசு ஒதுக்கியது. அப்போது சிவில் அதிகாரிகளில் சிலரே முஸ்லீம் என்பதால் ஆங்கிலேய அதிகாரிகள் பெரும்பாலான பதவிகளை ஏற்றிருந்தார்கள். முஸ்லீம் லீக் கட்சி தலைமையிலான அரசு 1958 ஆம் ஆண்டிலிருந்தே முறையாக இயங்க தொடங்கியது.

பாகிஸ்தானின் அரசியல் வாழ்வில் கடந்த எழுபது ஆண்டுகளாக மதம் புகுத்தப்பட்டு வருகிறது. இந்நிலைமை மாற வாய்ப்புள்ளதா?

வெளிப்படையாக கூறவேண்டுமென்றால் பாகிஸ்தான் நிலைமை மாற வாய்ப்பில்லை என்றே கூறலாம். இரண்டாம் உலகப்போருக்கு முன்புவரை ராணுவ ஆதிக்கம் கொண்ட நாடாகவே இருந்தது. அமெரிக்காவிடம் தோற்று சரணடைந்தபிறகு, அரசியல் நிலைமை மாறியது. ஆஃப்கானிஸ்தான், இந்தியா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் ஆகியவற்றை அனுசரித்தே செல்ல பாகிஸ்தான் தவறாது. நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு வரும்போது தன்னை காப்பாற்றிக்கொள்ள பாகிஸ்தான் சமரசமின்றி முயற்சிக்கும்.

பாகிஸ்தானின் உறவை இந்திய அரசு மாற்றிக்கொள்ள நினைக்கிறதா?

இந்தியா தன் நலனுக்கான கொள்கைகளை கடைப்பிடித்தாலும் அதிக காலம் பாகிஸ்தானை புறக்கணிக்க முடியாது என்பதே உண்மை. நிலையான உறுதியான பாகிஸ்தான் அமைய இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் உதவி தேவை. மேலும் சில அரசியல் சக்திகள் பாகிஸ்தான் மக்கள் மீது கோபத்தை உருவாக்குவது ஆரோக்கிய உறவை இருநாடுகளுக்கிடையே வளர்க்காது.

பாகிஸ்தானுக்கு சீனாவுக்கு இடையிலான CPEC திட்டத்தினால் பாகிஸ்தானுக்கு பயன்கள் உண்டா?

பாகிஸ்தானுக்கு சீனாவின் முதலீடு பெரிய பயன்களை அளிக்காது. சீனா அதிக வட்டியில் செய்யும் திட்டங்களால் பாகிஸ்தானுக்கு கடன் சுமையே ஏற்படும். விமானநிலையம், துறைமுகம், நெடுஞ்சாலை, ரயில்பாதைகள் ஆகியவை நாட்டின் உற்பத்தியை பெருக்க உதவும் என்றாலும் இதற்கான கடன்கள் பாகிஸ்தானை கீழே அழுத்தும்.

காஷ்மீர் இந்தியா- பாகிஸதானுக்கான உறவை கொதிநிலையிலேயே வைத்திருக்கிறதே?

நாடு அல்லது மாநிலத்திற்கான கொள்கை என்பது லாபம் சார்ந்து என்பதோடு அதற்கான காலம் என்பதும் உண்டு. எழுபது ஆண்டுகளுக்கும் பிறகும் காஷ்மீர் 1948 ஆம் ஆண்டில் உள்ளதைப் போன்றே இருக்கிறது என்றால் கொள்கைகளில் கோளாறு என்றே அர்த்தம். சீனா, தைவானை தன்னுடைய நாட்டின் ஒரு பகுதியாக நினைத்து செயல்படுவதால் ராணுவத்தின் மூலம் கைப்பற்ற முயற்சிக்கவிலை. ஏனெனில் அது அமெரிக்காவை உசுப்பிவிடும். இந்தியாவுடனான சுமூக உறவை இப்பிரச்னையை தீர்த்துவிடும். பாகிஸ்தான் தலைவர்கள் இதுகுறித்து எவ்வித கவனமும் கொள்ளவில்லை.

நன்றி- Siddharth Sing, Openthemagazine.com