குழந்தை மனதுள்ளவர்களை ஆச்சரியப்படுத்தும் எழுத்துகள்- ஆண்டர்சன்





Image result for children writer anderson





ஆண்டர்சன் கதைகள்
தமிழில்:யூமா வாசுகி
பாரதி புத்தகாலயம்


சீரியசான அரசியல் கட்டுரைகளைப் படித்து மண்டைத்தண்ணீர் வற்றியதுபோல இருந்ததால் குங்குமத்தின் சீனியர் சப் எடிட்டர் த.சக்திவேலின் பரிந்துரையில் அவரது ட்ராயரிலிருந்து சுட்ட புத்தகம்தான் இது.

எளிமையான கதைகளும் உண்டு. நீளமான கதைகளும் உண்டு. எனக்கு இத்தொகுப்பில் பிடித்த கதைகள் நான்கு. சக பயணிகள், மணற்குன்றுகளில், தம்ப்லினா, மச்சக்கன்னி இவை வாசிக்கையில் பெரிய நாவலை வாசிப்பது போன்ற தன்மையை மனதில் ஏற்படுத்தியது காரணமாக இருக்கலாம்.

வெள்ளிநாணயம், ரோஜா செடியும் நத்தையும் போன்றவை எளிதாக வாசிக்கும் வண்ணம் இருக்கின்றன. குழந்தை எழுத்தாளரான ஆண்டர்சன் மொழியின் அறுஞ்சுவையும் உண்டு. உற்சாகத்தை மட்டுமே போலியாக புகட்டாமல் மனதில் இயல்பான போக்கில் செல்பவர்கள் படும் வேதனைகளையும், சுயநலனிற்காக பலியாகாமல் தன்னையே பலியிட்டு பிறரின் உயிர்காப்பது என கதாபாத்திரங்கள் தங்களின் செயல்கள் வழியாக நன்னெறியை போதிக்கிறார்கள். நூலின் சிறப்பும் அதுதான். எனவே தனியாக நீதி என்று எழுத வேண்டியதில்லை பாருங்கள்.

யூமாவாசுகியின் அர்ப்பணிப்பான மொழிபெயர்ப்பில் கதையின் ஓட்டத்திற்கும் வாசிக்கவும் எங்குமே நிற்கவேண்டியதில்லை. தொடங்கினால் கதையை முடித்துவிட்டுத்தான் வைக்கமுடியுமளவு சுவாரசியத்தை ஒவ்வொரு அங்குலத்திலும் பதித்துள்ளார். குழந்தைகளுக்கு கோடைகால வாசிப்பிற்கு ஏற்ற தமிழ்நூல் இது.

- கோமாளிமேடை டீம்