பேஷன் நாடு!
வியட்நாம் பேஷன்!
சுயான்- தூ குயென்
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமில் ஹோசிமின் நகரில் நடைபெற்ற ஃபேஷன்ஷோவில் பங்கேற்றார்.
வியட்நாமை பூர்விகமாக கொண்ட சுயான் இன்று பார்க்கும் வியட்நாம் ஃபேஷன்
உலகு மாறுபட்ட ஒன்று. "வியட்நாமிய டிசைனர் தேவோன் குயென்
தன் வெள்ளை நிற உடையில் 3டி வடிவில் உருவாக்கியிருந்த நுட்பமான
வேலைப்பாடுகள் அருமையானவை" என்கிறார் சுயான். தற்போது ஃபேஷன்துறை மீது வியட்நாமிய இளசுகளின் கவனம் திரும்பியுள்ளது.
வியட்நாமில் ஃபேஷன்துறையானது
பல லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்புத்தருவதாக மாறியுள்ளது. ஆசியா,
ஐரோப்பா ஆகிய இடங்களிலுள்ள பழங்குடிகளின் அலங்கார வடிவங்கள்,
வியட்நாமிய நெசவு முறைகளை இணைத்து பேஷன்துறையில் ஆடைகளை உருவாக்குகிறார்கள்.
இத்தாலி, பாரீஸ் என பல்வேறு நாடுகளில் முன்னணி
ஃபேஷன் கம்பெனிகளில் வேலை செய்யும் பூர்விக வியட்நாமியர்களால் பேஷன்துறை புத்துணர்ச்சி
பெற்றுள்ளது. இதில் வியட்நாம் டிசைனரான குயென் காங் ட்ரி வடிவமைத்த
ஆடைகளை கடந்தாண்டு பாப் ஸ்டார்களான ரிகானா, கேட்டிபெரி ஆகியோர்
அணிந்துள்ளனர். தற்போது ஃபேஷனில் முன்னணி வகிக்கும் சீனா,
ஜப்பான், தாய்லாந்து ஆகியவை வரிசையில் வியட்நாமும்
முத்திரை பதிப்பதற்கு அதிக காலமில்லை.