பிட்ஸ் 2 நேரலையில் டூபீஸ் புரட்சி !



Image result for achari america yatra brahmanandam





பிட்ஸ்!

டூபீஸ் பாடம்!

அமெரிக்காவின் கார்னெல் பல்கலையில் டூ பீஸ் உடையில் வகுப்பறையில் செமினார் கொடுத்து அதிரவைத்துள்ளார் மாணவி லெட்டிட்யா சாய். ஆசிரியை ரெபெக்கா, மாணவி சாய் அணிந்த ஷார்ட்ஸ் குறித்து ஆட்சேபம் தெரிவித்ததால் இப்படி ஷாக் புரட்சி நடத்தியுள்ளார் மாணவி சாய். மாணவி டூபீஸ் டிரெஸ்ஸில் பாடம் நடத்தும் அரிய காட்சி ஃபேஸ்புக்கில் லைவ்வாக ரிலீசாகியுள்ளது.

வைஃபை பாடம்!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த நாத், எர்ணாக்குளம் ஜங்க்‌ஷனில் ரயில்வே போர்ட்டர். பகலில் வேலைபார்த்தபடி ரயில்வே அறிமுகப்படுத்திய வைஃபை வசதி மூலம் கேரள அரசுத்தேர்வில்(KPSC) வென்று அசத்தியுள்ளார் நாத். பகலில் வேலை செய்து இரவில் படித்து 83 சதவிகித மதிப்பெண் பெற்றுள்ளார் இந்த போர்ட்டர் மாணவர்.

பீதி கிளப்பிய சுலோகன்!

இரானின் டெக்ரானிலுள்ள குரோஷ் மால். அங்கு திடீரென வாகனங்களில் வந்திறங்கிய ஐஎஸ்எஸ் தீவிரவாதிகள் வாளை உயர்த்திப்பிடித்து 'அல்லாஹூ அக்பர்' என கத்த, அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஒடியுள்ளனர். பிறகுதான் அது இரானி படத்திற்கான புரமோஷன் என தெரியவந்து ரிலாக்ஸானது மக்கள் கூட்டம்.  பொது இடத்தில் இப்படியா நடந்துகொள்வது? என ரிவ்யூவில் தாளித்து கொட்டுகிறது இணைய நெட்டிசன்கள் குழு.

மலை சாதனை!

ஆஸ்திரேலியா மலையேற்ற வீரர் ஸ்டீவ் ப்ளெய்ன், 117 நாட்களில் ஏழு கண்டங்களிலுள்ள உயரமான மலைச்சிகரங்களில் ஏறி சாதித்திருக்கிறார். ப்ப்புவா நியூகினியாவின் கார்ஸ்டென்ஸ் பிரமிடு, ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோ, வட, தென்  அமெரிக்காவின் டெனாலி, அகான்காகுவா, அன்டார்டிகாவின் வின்சன், ஐரோப்பாவின் எல்பிரஸ், இமயமலை ஆகிய ஆறிலும் இதற்கு முன்பு 126 நாட்களில் ஏறிச்சாதித்ததே சாதனையாக இருந்து வந்தது.

பிரேக்ஃபாஸ்ட் ரெடி!

யூட்யூபில் ஐயோரி பெட்யூகோவ் என்பவர் லீகோ விளையாட்டுப்பொருட்கள் மூலம் உணவு தயாரிக்கும் மெஷினைத் தயாரித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். "வீக் எண்டில் உணவு தயாரிக்கும் எனது தந்தைக்கான பரிசு இது" என நெகிழும் ஐயோரியின் பாசநேச வீடியோ இணையத்தில் செம ஹிட்.  



பிரபலமான இடுகைகள்