லைஃப்லைன் எக்ஸ்பிரசில் பயணிப்போமா?



Image result for lifeline express



ரயில் டாக்டர்கள்!

சாதாரண மக்களுக்கே மருத்துவ செலவுகள் பேரிடியாக உள்ளது என்றால் கிராமப்புற ஏழைமக்கள் எம்மாத்திரம்? கிராமப்புற ஏழைமக்களுக்கு லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் சிகிச்சையளித்து உதவுகிறது.


 1991 ஆம் ஆண்டு முதல் வடமாநிலங்களில் சிறுநகரங்களில் பயணித்து வரும் லைஃப்லைன் எக்ஸ்பிரஸ், கண்களின் புரை முதல் புற்றுநோய் வரையிலான நோய்களுக்கு விலையின்றி சிகிச்சை அளிக்கிறார்கள். 20 பணியாளர்களையும் இரண்டு ஆபரேஷன் தியேட்டர்களையும் கொண்டு இயங்குகிறது இம்மருத்துவ ரயில். இதில் தன்னார்வலர்களாக பணிபுரியும் மருத்துவர்கள் சம்பளம் ஏதும் பெறுவதில்லை என்பது ஸ்பெஷல். மருத்துவம் மட்டுமின்றி உள்ளூர் மருத்துவர்களுக்கு கற்பித்தலும் இந்த ரயிலில் நடைபெறுகிறது. இம்பேக்ட் இந்தியா எனும் தன்னார்வ நிறுவனம், உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப் ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் 191 இடங்களில் நோயாளிகளை அனுமதித்து ஏற்றி சிகிச்சையளிப்பதோடு இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆபரரேஷன்களையும் செய்திருக்கிறது லைஃப் எக்ஸ்பிரஸ் மருத்துவக்குழு