தன்மான போராளி ராணி லட்சுமிபாய்!
என் தேசம் இந்தியா!
ராணி லட்சுமிபாய்
1858 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் ஆண்டு குவாலியரில் ஆங்கிலேயருக்கு நடந்த போரை அவர்களும் மறக்கமுடியாது. இந்தியர்களும் மறக்கமுடியாது. அப்போரில்தான் மணிகர்ணிகா வீரமாக போரிட்டு தன் ரத்தத்தை இந்தியாவுக்கென அர்ப்பணித்து மரணத்தை தழுவினார்.
"அழகும் வசீகரமும் பொருந்தி ராணி, புரட்சி தலைவர்களிலேயே மிக ஆபத்தானவர்" என ஜெனரல் சர் ஹ்யூ ரோஸ் தன் குறிப்பில் அன்றே எழுதிவைத்திருக்கிறார். அவர் ராணி எனக் குறிப்பிட்டது மணிகர்ணிகா(மனு) என அழைக்கப்பட்ட ராணி லட்சுமி பாயைத்தான்.
சிறுவயதிலேயே தன்னை யானைமேல் ஏற்றாமல் தன் மகனை ஆண் என்ற ஒரே காரணத்திற்காக மேலேற்றிய பேஷ்வாவின் மகன் நானா சாகிப்பை எதிர்த்து "எதிர்காலத்தில் உன்னிடம் உள்ளதுபோல பத்து யானைகளை வாங்கி அதில் ஏறி பயணிப்பேன்' என சவால் விடும் தளராத தன்மானம் ராணியின் உடலில் ஆயுள் முழுவதும் குறையவில்லை.
எத்தனை சாதித்த பெண்களிடமும் கணவருக்கு உங்கள் கையில் செய்த எந்த உணவு பிடிக்கும் என்று இன்றுவரை மைக்குகளை நீட்டும் பத்திரிகையாளர்கள் உண்டு. ராணி லட்சுமிபாய் மரப்பாச்சி பொம்மைகளை விளையாடும் வயதிலே குதிரையேற்றம், போர்ப்பயிற்சி என பழகு எதிர்கால சவால்களை சமாளிக்க தன்னை உரமேற்றிக்கொண்டார். ஜான்சியின் மகாராணியான மணிகர்ணிகாவின் மெய்க்காவல் படையே ஆயுதப்பயிற்சி மேற்கொ்ண்டு உரமேறிய பெண்களின் படைதான். ஜான்சியை ஜெனரல் ஹ்யூ ரோஸ் கைப்பற்றிய 1858 ஆம்ஆண்டுக்கு முன்பாக மே பத்து 1857 முதல் சுதந்திரப்புரட்சி தோன்றியது.
20 ஆயிரம் பேர்களைக் கொண்ட ராணியின் நண்பரான தாண்டியா தோபோவின் ஜான்சி மீட்பு முயற்சி தோல்வி என்றாலும் ராணியை அவரது வளர்ப்பு மகன் தாமோதர் ராவுடன் காப்பாற்ற முடிந்தது. அந்த கணத்திலிருந்து ராணி ல்ட்சுமிபாய் ஜான்சியை மீட்க புரட்சிக்குழுக்களுடன் இணைந்து போராடத்தொடங்கினார்.