பற்கள் மஞ்சளாக இருப்பது நல்லதா, கெட்டதா?
ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி
பற்கள் மஞ்சளாக
இருப்பது நல்லதா,
கெட்டதா?
பொதுவாக பற்களின்
வேர் இறுக்கமாக ஈறுகளில் பொதிந்து இருப்பதே முக்கியம். பியானோ
நிறத்தில் அல்லது காகிதத்தின் நிறத்தில் இருக்கவேண்டும் என்றெல்லாம் ரூல்ஸ் கிடையாது.
மெல்லிய மஞ்சள் நிறத்தில் பற்கள் இருப்பது பிழையல்ல; அதனையும் தாண்டி நிறம் கடுமையானால் ஆபத்து. வளர்சிதைமாற்ற
பிரச்னைகள் உடலில் ஏற்பட்டுள்ளன என்பதே இதற்கு அர்த்தம். பற்களை
பளிச் வெள்ளையாக்க பற்பசைகள், மருத்துவமனையில் சிகிச்சை என்பது
பற்களின் மேலுறையான எனாமலின் முதுகெலும்பைச் சுரண்டுவதேயாகும். இது பற்களை நாளடைவில் பலவீனப்படுத்தும். எனவே வெண்மை
அழகல்ல; ஆபத்து.