FBI வீழ்ச்சியடைந்தது எப்படி?



Image result for fbi



மக்களின் நம்பிக்கையிழந்த FBI!


எஃப்பிஐயின் 110 ஆண்டுகால வரலாற்றில் இப்படியொரு களங்கம் இனிமேலும் ஏற்படப்போவதில்லை. நாட்டு அதிபரே காவல் அமைப்பின் மீதான அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். 36 ஆயிரம் பேர் பணிபுரியும் அமைப்பின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமே இப்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளார். எந்த விவகாரங்களில் எஃப்பிஐ தடுமாறியுள்ளது?
நெவடா மற்றும் ஓரேகான் பகுதியில் அரசு நில ஆக்கிரமிப்பை எதிர்த்த போராட்டக்குழுவை அச்சுறுத்தியதாக எஃப்பிஐ அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொய் கூறிய அதிகாரி மீது கோர்ட் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு டெக்ஸாசில் நடந்த தீவிரவாத தாக்குதலில் எஃப்பிஐயைச் சேர்ந்த அதிகாரியும் உள்ளதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. தீவிரவாத ஒழிப்புக்குழுவிலிருந்த மொழிபெயர்ப்பு பெண், ஐஎஸ்எஸ் அமைப்பிலிருந்த ஒருவரின் காதலில் ஈடுபட்டு சிரியாவுக்கு அவரை மணக்க சென்றது எஃப்பிஐ அமைப்பை சங்கடப்படுத்திய விவகாரம்.
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் மருத்துவர் லாரி நாசர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் ஓராண்டாக இழுபறியாக வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு பிப்ரவரியில் நடந்த பார்க்லாண்ட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அலட்சியமாக கையாண்டது என எஃப்பிஐ, தடுமாறி வருகிறது.  


பிரபலமான இடுகைகள்