தானம் தருவது எப்படி?




Image result for organ donor


அறிவோம் தெளிவோம்!

விபத்தினால் அல்லது நோயால் உறுப்பு செயலிழந்து ஒருவருக்கு தேவையான உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து பொருத்தலாம். இதற்கு பல்வேறு உடல், உறுப்பு தான இயக்கங்கள் உதவுகின்றன.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட யாரும் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம். ஒருவரின் உடல் உறுப்புகளின் மூலம் தோராயமாக எட்டு பேரின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், குடல், இதயம் ஆகியவற்றையும் கண்ணின் கார்னியா, தோல், எலும்பு, குருத்தெலும்புகள் ஆகியவற்றின் திசுக்களையும் தானம் தரலாம்.

சிறுநீரகம், கல்லீரல், எலும்புகளை எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களும், இதயத்தசைகள், இதயம், நுரையீரல் ஆகியவற்றை ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களும், கார்னியா, தோல் ஆகியவற்றை நூறு வயதுக்கு மேற்பட்டவர்களும், குடல், கணையம்(60 வயதுக்கு மேற்பட்டவர்களும்) என தானம் தர வயது வரம்புகள் உண்டு.

உறுப்புகளை தானம் தர விரும்பினால் Mohanfoundation.org என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.