சாதனை பெண்களை கௌரவிக்கும் கார்ட்டூனிஸ்ட்!
கார்ட்டூனிஸ்ட்
தரும் கௌரவம்!
கிளெமென்டைன் டெலய்ட், ஜோசபினா
வான் கோர்கும், அனெட்டா கெல்லர்மன் இந்தப்பெண்களைப் பற்றி ஏதாவது
கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அமெரிக்காவின்
நியூயார்க்கில் வசிக்கும் பெனலோப் பாகியூ எனும் பிரெஞ்சு கார்ட்டூனிஸ்ட், இதுபோல
வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண்களை தன் கார்ட்டூன்களின் வழியே கொண்டுவந்திருக்கிறார்.
2013 ஆம் ஆண்டு தன் கலைப்பணிக்காக விருதுகளை வென்றுள்ள பெனலோப்.
இங்கிலாந்தின் பிரிட்ஜெட் ஜோன்ஸ் போன்று பிரெஞ்சில் புகழ்பெற்ற ஜோஸபின்
என்ற பெண்மணியைப் பற்றி ஓவியங்களுக்காக இவ்விருதைப் பெற்றார் பெனலோப். தன் வலைதளத்தில் லெ மாண்டே பிரெஞ்சு மாலை நாளிதழின் ஆதரவுடன் சாதனை பெண்களை
ஓவியங்களாக வரைந்து வருகிறார் பெனலோப். "முதலில் நான் சில
பெண்களின் பெயர்களோடு தொடங்கினாலும் பின்னர் எனது நண்பர்களின் பரிந்துரை என நீண்டுகொண்டே
சென்றுவிட்டது" என்கிறார் பெனலோப் பாகியூ. பாரிசில் பிறந்த பெனலோப், ஓவியப்படிப்பு முடிந்தபின்
பிரெஞ்சு இதழில் காமிக்ஸ் தொடர்களை வரைந்து பின் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து அங்கேயே
வாழ்ந்து வருகிறார்.