நார்னியாவின் கதவைத் திறந்த எழுத்தாளர்!




Image result for ready player one




ஒரு படம் ஒரு ஆளுமை!
லிஜி

Ready Player one

புதிய உலகத்தில் வாழ்ந்த அற்புத அனுபவத்தை அள்ளித் தருகிறதுரெடி பிளேயர் ஒன்’.
2045ம் ஆண்டு. நிஜ உலகின் சலிப்பிலிருந்து விடுபட, மக்கள் தேர்ந்தேடுக்கும் மாய உலகம் ஒயாசிஸ். விர்ச்சுவல் ரியாலிட்டி கேமின் மூலமாக இதனுள் நுழையலாம். ஓயாசிஸை உருவாக்கிய ஹேலிடே மூன்று புதிர்களை இந்த விளையாட்டில் வைத்திருக்கிறார். ‘புதிர்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஓயாசிஸ் சொந்தம்என்று சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்.

பல்லாண்டுகளாக விடுவிக்கமுடியாத புதிரை கண்டுபிடுத்து டெக் உலகின் கவனத்தை ஈர்க்கிறது ஹீரோவின் அணி. ஹீரோவுக்குப் போட்டியாக  ஐஒஐ நிறுவனம் ஆயிரக்கணக்கான நபர்களைக் களத்தில் இறக்குகிறது. யாருக்கு ஓயாசிஸ் கிடைத்தது என்பதே மீதிக்கதை  .எர்னஸ்ட் கிளைனின் நாவலைத் தழுவிய இப்படத்தின் தொழில்நுட்ப நேர்த்தி, உச்சம். தான் நேசிக்கின்ற படங்களின் காட்சிகளை ஆங்காங்கே கோர்த்து திரைக்கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.


சி.எஸ்.லீவிஸ்

Related image



குழந்தைகளுக்கான கதை எழுதுவதில் தனித்துவம் கொண்டவர் சி.எஸ்.லீவிஸ். அயர்லாந்தில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த செல்லப் பிராணிகள் என்றால் உயிர்.  சிறுவயதில் இறந்த ஜாக்சி என்ற நாய்க்குட்டியின் பெயரை தனக்கு வைத்துக்கொள்கிறார். தந்தை லீவிஸின் ஒன்பது விலங்குகள் படக்கதையை அறிமுகப்படுத்துகிறார். பள்ளிப் பருவத்தில் தம்பியுடன் இணைந்து பாக்ஸன் என்ற  கற்பனை உலகத்தை விலங்குகளுக்காக உருவாக்குகிறார். இந்தக் கற்பனையே அவரின் ஆகச்சிறந்த படைப்பான ‘The Chronicles of Narnia’ விற்கு அடித்தளம்

பிற்காலத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராகப் பணியாற்றிய லீவிஸ் 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அவை நாற்பதுக்கும் மேற்பட்ட மொழியில் வெளியாகி பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன

1963-ம் ஆண்டு  மறைந்த லீவிஸின் கதைகள் இங்கிலாந்தில் பள்ளிக் குழந்தைகளுக்கான பாடப்புத்தகத்தில் இடம்பெற்று அவரின் புகழை இன்றும் பாடிக்கொண்டிருக்கின்றன.


பிரபலமான இடுகைகள்