லிங்கம் ஜான்டிஸ் வந்தால் என்ன செய்வீர்கள்? - குட்டு கீ கன்




Image result for guddu ki gun full movie







Guddu Ki Gun
Directed byShantanu Ray Chhibber
Sheershak Anand
Produced byEmenox Media Pvt. Ltd
Written byShantanu Ray ji Chhibber
Sheershak Anand
StarringPayel Sarkar
Kunal Khemu
Aparna Sharma
Music byGajendra Verma, Vikram Singh, Raju Sarkar & Saqi
CinematographyKeiko Nakahara



Image result for guddu ki gun full movie


பீகாரிலிருந்து கொல்கத்தாவில் தங்கி வாஷிங்பவுடர் விற்று வாழ்க்கை ஓட்டும் கோவர்தன் என்கிற குட்டு ஆல்டைம் ரோமியோ. வாஷிங்பவுடர் என்பதெல்லாம் ஒரு சாக்குதான். அங்கிள்கள் ஆபீஸ் போன பின் வாஷிங்பவுடர் சாக்கில் ஆன்டிகளை வளைத்துப்போட்டு ஜாலி பண்ணுவதுதான் குட்டுவின் மெயின் ஜாப். இந்த இடத்தில் உங்களுக்கு டோன்ட் மெஸ் வித் தி ஜோகன் எனும் ஆடம் சாண்டலர் படம் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.

ஆன்டிக் கடை வைத்திருப்பவரின் மனைவி காஜல், டான் ஒருவரின் மனைவி வளைத்து வளைத்து சோப் போடும் குட்டுவின் காதல் லீலைகளை காதல் என பூசாரி ஒருவரின் பேத்தி போலி மூலம் முடிவுக்கு வருகிறது. காதலி போலிக்காக கோயிலில் காத்திருக்கும்போது அங்கு வரும் ஆன்டியை அயர்ன் செய்ய குட்டு கிளம்புவது போலியை அதிரவைக்க காளிக்கு கதிகலங்கும் பூஜை செய்யும் தாத்தாவிடம் வத்தி வைக்க, தாத்தா செய்யும் பூஜைதான் குட்டு கீ கன் படத்தை அடல்ட் படமாக்குகிறது. 





Image result for guddu ki gun full movie






உண்மையான நேர்மையான பெண்ணோடு குடித்தனம் செய்தால்தான் குட்டுவின் கோல்டன் குஞ்சு மறையும் என்பது சாபம். அதை சரிசெய்ய என்ன செய்கிறார்? அவரின் தங்க குஞ்சை வெட்டியெடுக்க சுற்றும் டான் குரூப், ஆன்டிக் பொருட்களை விற்கும் காஜலின் கணவர், அதனை செய்தியாக்கி கல்யாணம் செயதுகொள்ள விரும்பும் டிவி நிருபர் என காமெடி கதகளி களைகட்டுகிறது. எமோஷனலான சீன் எதுவும் கிடையாது. சென்டிமெண்டான இடத்திலும் குட்டுவின் நண்பர் லட்டு அடிக்கும் காமெடி அசத்துகிறது. லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தீர்கள் என்றால் முதலுக்கு மோசமில்லை. படத்தின் போஸ்டரே படத்தின் கதையை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டதால் கதையை முழுக்க சொல்லியாயிற்று. படம் பார்க்கும் அனுபவம் வேற லெவலில் இருக்கும். அதிலும் குணால் கேமு, சுமித் வியாஸ் காமெடி அதிரிபுதிரி. 
தங்க குஞ்சை வெட்டியெடுத்து அதை பாரீன் பெண் உபயோகப்படுத்தும் இடம் அய்யகோ! எல்லாமே நினைத்து நினைத்து சிரிக்கும் காமெடி. சன்தோஷ் ஜெயக்குமார் அடுத்து இப்படியொரு படம் ட்ரை செய்யலாம். சூப்பராக செட் ஆகும்.