ரகசிய டைரி!
கார்ட்டூன் கதிர் |
வெங்கட் |
வரலாற்று சுவாரசியங்கள்!
ரகசிய டைரி!
ரா.வேங்கடசாமி
1888 ஆம் ஆண்டு லண்டன் மக்கள் திகிலில் உறைந்துபோய் கிடந்தனர்.
சீரியல் கொலைகாரர் அங்கு உலவி வருகிறார் என
துப்பு கிடைத்தால் தூக்கம் வருமா? நான்கு மாதங்கள் வரை ஐந்து விலைமாதுக்கள் கொடூரமாக உடல் சிதைக்கப்பட்டு இறந்துபோயினர். போலீசுக்கு வந்த அனாமதேய கடிதத்தில் சிவப்பு நிற இங்கில் தனது பெயர் ஜேக் தி
ரிப்பர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு வேறு இடங்களிலும் க்ரைம்கள் நடக்கவில்லை என்பதற்காக துப்பறியாமல் விட்டுவிடமுடியாமா? வால்டர் சிக்கெர்ட்(1860-1942)
என்பவனுக்கு மைக்கேல் பாரட் என்பவனுக்கு நட்பு ஏற்பட்டது.
கொலைகளுக்கான காரணம் சொல்லும் டைரி என்னிடமுள்ளது. இறந்த நண்பனின் சொத்து என்றான் மைக்கேல்.
அவரின் பெயர் ஜேம்ஸ் மேபிரிக்.
நோய்வாய்ப்பட்டு இறந்த அவர்தான் ஜேக் தி
ரிப்பர் என்றும் தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தால் லண்டனுக்கு வரும்போதெல்லாம் விலைமாதுக்களை கொலைசெய்வது வழக்கம் என
அதில் கூறப்பட்டிருந்த்து.
The Dairy of Jack the Ripper
என்ற நூலை ஷெர்லி ஹாரிசனின் விரிவுரையோடு 1993 ஆம் ஆண்டு வெளியானது.
கொலைகாரரின் மனநிலையைப் பற்றி ஆராய்ந்த டாக்டர்கள் பலரும் பல்வேறு வித கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.
மேபிரிக்கின் கையெழுத்தும் டைரியிலுள்ள எழுத்தும் ஒன்றிப்போகாது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் நூலை வெளியிட்ட பதிப்பாளர் இதனை ஏற்கவில்லை.
டைரியை தடவியல் நிபுணர் மெரின் கேசி ஓவன்ஸ் என்ற பெண்மணியிடம் அளிக்க,
அவர் டைரி போலி என
சிம்பிளாக சொல்லிவிட்டார். டைரியில் பயன்படுத்தப்பட்ட மையில் ரகசியமான ஆறு வேதிப்பொருட்கள் கலந்துள்ளன ஆய்வாளர்கள் கூறியதோடு,
மைக்கேலையும் இதில் குற்றவாளியாக கூறினர்.
ஆனால் அதற்கு ஆதாரம்?
எனவே போலி டைரி விவகாரம் மூச்சு காட்டாமல் முடிவுக்கு வந்தது.
குறிப்பு:
ரா.வேங்கடசாமி இரண்டு ஆண்டுகளாக நிறைய எழுதி அனுப்பினாலும் தேர்ந்தெடுத்து பிரசுரித்தது மர்மங்களின் மறுபக்கம், வரலாற்று சுவாரசியங்கள் என இரு தொடர்கள் மட்டுமே. பல தொடர்களிலும் பயன்படுத்தி வந்த புகைப்படங்கள் இணையத்தில் எடுத்ததே. காப்புரிமை கடுமை காரணமாக நிறைய படங்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை. குறிப்பிட்ட தொடர் குறித்த ஆட்களின் பெயர்களை தட்டச்சு செய்து தேடலாம் என்றாலும் சரியான பெயர் எது என தெரியாமல் தத்தளித்தோம். அப்போடு கார்ட்டூன் கதிரை ஓவியம் வரைந்து தர கேட்டோம். தனிப்பட்ட நட்பு காரணமாகவே கதிர் ஓவியம் வரைந்து தர இசைந்தார். வீட்டில் வரைந்து அத்தனை ஓவியங்களுக்கும் இதுவரை அவர் ஒரு ரூபாய் கூட பெறவில்லை. மர்மங்களின் மறுபக்கம் தொடர் சிறப்பு பெற கார்ட்டூன் கதிரின் ஓவியங்களே முக்கிய காரணம். வெளிவேலைகளை செய்துகொண்டே அத்தியாயத்தை படித்து வரைந்த கார்ட்டூன் கதிரின் உழைப்பு அசாத்தியமானது. ஆனால் அந்த உதவிகள் பின்னர் தொடங்கிய வரலாற்று சுவாரசியங்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது நீங்கள் வாசித்தது வரலாற்று சுவாரசியங்கள் தொடரின் இறுதிப்பகுதி.