இடுகைகள்

சாப்பாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருமண ஏற்பாடுகளை செய்வதற்கான ஆப்கள்!

படம்
  பல்வேறு ஆப்களை எழுதியிருக்கிறோம். ஆனால் இப்போது கல்யாணம் செய்வதற்கான அமைப்புகள், சேவைகளைப் பற்றியும் எழுதுகிறோம் என்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? இதை ஆங்கில இதழ்கள் எழுதிவிட்டன என்பதல்ல. கல்யாண வேலைகளை கூட செய்வதற்கான ஆட்கள் கிடைப்பதில்லை. உறவுகள் நெருக்கமில்லாமல் தூரமாகிவிட்டன என்பதை நாம் மறைமுகமாக புரிந்துகொள்ளவேண்டியதுதான். சீரியசாக பேசிவிட்டோமே... ஒகே சில்லுகா உண்டன்டி.. ஆப்களை சூஸ்தம்..... வெட்மீகுட் 2014ஆம் ஆண்டு தொடங்கிய ஆப் இது. இதில் கல்யாண கார்ட் வடிவமைப்பு முதல் எந்த பொருட்களுக்கு எந்த வியாபாரிகளை அணுக வேண்டும் என்பது வரையிலான தகவல்கள் கிடைக்கின்றன. மாதத்திற்கு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது போல ஆப்பை தரவிறக்கி வருகிறார்கள். 75 ஆயிரத்திற்கும் மேலான முறை தரவிறக்கி 30 லட்சத்திற்கு மேல் பயன்படுத்தி வருகிறார்கள்.  அப்பி கப்புள் 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சேவை. இதைப் பயன்படுத்தி திருமணமாகும் தம்பதிகள் தங்களுக்கென தனி ஆப் , வலைத்தளத்தை தொடங்கலாம். அப்புறம் என்ன செய்வது என்கிறீர்களா? கல்யாணம் செய்யவேண்டியதுதான். விருந்து சோறு சாப்பிட வேண்டியது தான்.  ஆர்எஸ்விபி மேனேஜர் 2

பதற்றமான சூழலில் ஒருவருக்கு ஏற்படும் பழக்கங்கள்!- நகம் கடிப்பது, சிகரெட் பிடிப்பது, விரல் சூப்புவது, அளவுக்கதிகமாக சாப்பிடுவது்

படம்
          ஒருவர் பதற்றமான சூழ்நிலையில் இருக்கும்போது கவனித்திருக்கிறீர்களா ? நகங்களை கடிப்பது , பேனாவைத் தட்டுவது , தலைமுடியை சுருட்டுவது , விசில் அடிப்பது , குதிகாலை அசைப்பது என பல்வேறு உடல்மொழிகளை வெளிப்படுத்துவார்கள் . இதனை நாளடைவில் ஒரே மேனரிசமாக மாற்றிக்கொண்டு செயல்படுவார்கள் . இப்படி பழக்கங்களை கற்றுக்கொள்வது ஒருவருக்கு ரிலாக்சாக அமையும் . அல்லது அதிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவர் பெறுவார் . அப்படியில்லாதபோது , அப்பழக்கத்தை ஒருவர் செய்யவேண்டியதில்லை . நகம் கடிப்பது பொதுவாக ஒருவருக்கு மனப்பதற்றம் ஏற்படும்போது இப்பழக்கம் ஏற்படுகிறது . உலகில் 44 சதவீத இளைஞர்களுக்கு இப்பழக்கம் உள்ளது . இவர்களின் பொதுவான வயது 19 முதல் 29 வயது வரையில் உள்ளது . குழந்தையாக இருந்து சிறுவன் அல்லது சிறுமியாக மாறுபவர்கள் இப்பழக்கத்தை கற்கிறார்கள் . அதுவும் கூட பிறரைப் பார்த்துதான் . விரல் சூப்புதல் இதுவும் கூட பாலருந்தும் குழந்தை , அந்த நினைவிலேயே தன்னை இருத்திக்கொள்வதற்கான நிலைதான் . இந்த பழக்கம் தொடரும்போது குழந்தையின் முன்பற்கள் வெளியே துருத்திக்கொண்டு தெரிவதற்கான வாய்ப்

உடலைக் காக்கும் பசி!

படம்
giphy மிஸ்டர் ரோனி பசி எடுக்கும்போது வயிற்றிலிருந்து பல்வேறு ஒலிகள் கேட்கிறதே? டிடிஎஸ் மிக்சிங் செய்யும்போது ஸ்டூடியோவில் வரும் ஒலியெல்லாம் கேட்கும். காரணம், உங்கள் குடல் இயல்பாகவே உணவை குடலுக்கு தள்ளிவிட முயற்சிக்கும். உணவு இருக்கும்போது சத்தம் வராது. உணவு இல்லாமல் வயிறு காலியாக இருக்கும்போது இந்த சத்தம் உங்களுக்கு மட்டுமன்றி, பக்கத்து சீட்டுக்காரருக்கும் கேட்கும். உடனே ஓடிப்போய், அருகிலுள்ள ஓட்டலில் சாப்பிட்டு விடுங்கள். வயிற்றில் வரும் அரவை மில் சத்தத்தை இப்படித்தான் நிறுத்த முடியும். உணவு இல்லாத பல்வேறு பொருட்களை ஒருவர் சாப்பிடக் காரணம் என்ன? உடல் உங்களுக்கு பசி, ஊட்டச்சத்து பற்றிய பல்வேறு சமிக்ஞைகளைக் கொடுக்கும். அதில் ஒன்றுதான் பற்றாக்குறையான சத்துக்களை நிறைவு செய்ய மாவுக்கற்கள், சாக்பீஸ் போன்றவற்றை சிலர் சாப்பிடுவார்கள். அவர்களைக் கேட்டால் ஏன் என்று சொல்லத் தெரியாது. அவர்களை சோதித்து பார்த்தால் உடலில் சத்துகள் பற்றாக்குறையாக இருப்பது தெரியும். ஆனால் இப்படி சாப்பிடும் பொருட்களால் மூளையில் டோபமைன் சுரக்கலாம். ஆனால் உடல் ஆலமரம் போல விரிவடைவதற்கான சிக்கல் இரு

சாப்பிட்டபிறகு உடனே குளித்தால் ஆபத்தா? - மிஸ்டர் ரோனி

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி சாப்பிட்ட பிறகு ஒரு மணிநேரம் கழித்தபிறகு குளிக்க வேண்டுமா? நாம் அப்படி நினைத்து வருகிறோம். ஆனால் அது தேவையில்லை என்று பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகள் கூறி வருகின்றன. 1960ஆம் ஆண்டு அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், இதுபற்றிய நமது கருத்து தவறு என்று கூறியது. இக்காலகட்டத்தில் நீச்சல் வீரர்களுக்கு பல்வேறு நேரங்களில் உணவு வழங்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதன்மூலம், அவர்களின் உடல்நலனுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்று ஆராய்ந்தனர். ஆனால் உடல்நலன் பாதிப்பிற்கு எந்த ஆதாரமுமில்லை என்று நிரூபணமானது. 2005, 2011 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற ஆராய்ச்சிகளும் இதனை நிரூபித்தன. எனவே சாப்பிட்டபிறகு ஒரு மணிநேரம் காத்திருந்து குளிக்க வேண்டியதிலை. அதற்கு முன்பே குளித்துவிட்டு சாப்பிடுங்கள். மேற்சொன்ன ஆராய்ச்சிகளைப் படிக்க வேண்டிய தொல்லை மிச்சம் பாருங்கள். நன்றி: பிபிசி

வேலை செய்யுங்க மக்கா! - மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
சப்பாத்தியா, அப்பளமா? மயிலாப்பூர் டைம்ஸ்! யாராவது வேலை செய்யறீங்களா? மயிலாப்பூரில் வாழ்ந்து விட்டு சோற்றை பற்றி எழுதாமல் எப்படி இருப்பது? நானும் லஸ்கார்னர் முருகன் கடை , தள்ளுவண்டி சரவணன் கடை, ரெக்ஸ் கடையருகே உள்ள சைவத்திருநீறு வைத்த காசாளர் கடை, அதற்கு எதிரில் உள்ள இளைஞர்கள் கடை, 30 ரூபாய் பிரியாணி கடை , தங்கம் ஹோட்டல் என சாப்பிட்டாயிற்று. ஆனால் கூட திருப்தி வரவில்லை. காரணம், வாங்குகிற காசுக்கான நேர்மை குறைந்து வருவதுதான். மயிலாப்பூரிலுள்ள பஜார் தெருவில் பல்வேறு கடைகள் இருந்தாலும் சில மாதங்களாக புதிய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. (அ)சைவம் என இரண்டுமே உண்டு. அப்போதுதானே காசு பார்க்க முடியும். ஆனால், அதற்கு உழைக்க வேண்டுமே! புதிய கடை. வெளிச்சம் அதிகமாக இருக்கிறது. அப்போது வேலை குறைவாக நடக்குமே என்று நினைத்தேன். அதேபோல ஆயிற்று. மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இரண்டு சப்பாத்தி இரவு உணவுக்கு வாங்க வந்தேன். முதலில் கல்லாவில் உட்கார்ந்திருப்பவருக்கு மரியாதை செய்யவேண்டுமே என்று அவரிடம் போனேன். கருப்பு நிறத்தில் பிள்ளையார் போல இருந்தார். லூசு என்றால் கூட அதனால்