பதற்றமான சூழலில் ஒருவருக்கு ஏற்படும் பழக்கங்கள்!- நகம் கடிப்பது, சிகரெட் பிடிப்பது, விரல் சூப்புவது, அளவுக்கதிகமாக சாப்பிடுவது்

 

 

 

 

https://www.goodnewsnetwork.org/wp-content/uploads/2016/07/child-sucking-thumb-CC-Flickr-Various-Brennemans-.jpg

 

ஒருவர் பதற்றமான சூழ்நிலையில் இருக்கும்போது கவனித்திருக்கிறீர்களா? நகங்களை கடிப்பது, பேனாவைத் தட்டுவது, தலைமுடியை சுருட்டுவது, விசில் அடிப்பது, குதிகாலை அசைப்பது என பல்வேறு உடல்மொழிகளை வெளிப்படுத்துவார்கள். இதனை நாளடைவில் ஒரே மேனரிசமாக மாற்றிக்கொண்டு செயல்படுவார்கள். இப்படி பழக்கங்களை கற்றுக்கொள்வது ஒருவருக்கு ரிலாக்சாக அமையும். அல்லது அதிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவர் பெறுவார். அப்படியில்லாதபோது, அப்பழக்கத்தை ஒருவர் செய்யவேண்டியதில்லை.


நகம் கடிப்பது


பொதுவாக ஒருவருக்கு மனப்பதற்றம் ஏற்படும்போது இப்பழக்கம் ஏற்படுகிறது. உலகில் 44 சதவீத இளைஞர்களுக்கு இப்பழக்கம் உள்ளது. இவர்களின் பொதுவான வயது 19 முதல் 29 வயது வரையில் உள்ளது. குழந்தையாக இருந்து சிறுவன் அல்லது சிறுமியாக மாறுபவர்கள் இப்பழக்கத்தை கற்கிறார்கள். அதுவும் கூட பிறரைப் பார்த்துதான்.


விரல் சூப்புதல்


இதுவும் கூட பாலருந்தும் குழந்தை, அந்த நினைவிலேயே தன்னை இருத்திக்கொள்வதற்கான நிலைதான். இந்த பழக்கம் தொடரும்போது குழந்தையின் முன்பற்கள் வெளியே துருத்திக்கொண்டு தெரிவதற்கான வாய்ப்பு அதிகம். இயல்பாகவே இரண்டு வயது முதல் நான்கு வயது வரும்போது இப்பழக்கம் ஒருவருக்கு நின்றுவிடும். அப்படியும் நிற்காதபோது அவருக்கு மருத்துவரின் ஆலோசனை தேவைப்படுகிறது.


சாப்பாடு முக்கியம்


விரக்தி, மனப்பதற்றம். எரிச்சல் என குறிப்பிட்ட வகை உணர்ச்சிகளால் பாதிக்கப்படுபவர்கள் உடனே அதிலிருந்து விடுபட குப்தா பவன் ஸ்வீட்ஸ் முதல் சரவணபவன் சாம்பார் இட்லி வரை முயற்சி செய்வார்கள். இதனால் மன அழுத்தம் குறையுமா என்றால், வயிறு நிறைய அதற்கு மேல் சாப்பிடுகிறோமே அதுதான் லாபம். மற்றபடி அந்த நேரத்து விரக்தி மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதற்கு ஆதாரம் கேட்க கூடாது.


ஆறாவது விரலாக சிகரெட்


எதற்கு சிகரெட் பிடிக்கறீங்கள் என்று கேட்டால் பலரும் இதற்கு பதில் சொல்லுவார்களா என்று தெரியவில்லை. அடிப்படையில் மன அழுத்தம்தான் காரணம். புகையிலையிலுள்ள நிகோடின் மூளையில் சில பல மாற்றங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான நிலையை உருவாக்குகிறது. இதனால்தான் சிகரெட்டை பலரும் ஊதித்தள்ளி இன்பம் காணுகிறார்கள்.


நகத்தைக் கடிப்பது விரலில் உள்ள கிருமிகள் வாய்க்குள் செல்வதற்கும் ஏற்பாடாக அமையும். விரலை சூப்புவது அதிக நாட்கள் தொடர்ந்தால், பற்களின் வரிசை அமைப்பு மாறிவிடும். சிகரெட் புகைப்பது, அதிகமாக வெறிவந்தது போல சாப்பிடுவது நிச்சயம் ஆபத்தானதுதான். புற்றுநோய், ஆஸ்துமா ஆகியவற்றோடு உடல்பருமன் பாதிப்பும் ஏற்படுகிறது.


பிபிசி




கருத்துகள்