நிர்வாகத்திறன் கொண்ட பெண்மணிகள்! - ஜெசிந்தா ஆர்டெர்ன், கமலா ஹாரிஸ், ட்சாய் இங்க் வென், செலிஸ்டா பார்பர்
சிறந்த பெண்மணிகள்
ஜெசிண்டா ஆர்டெர்ன்
பிரதமர்(2017 முதல் ), நியூசிலாந்து
இவரையும் அந்நாட்டின் இளமையான பிரதமர் என்று கூறப்போவதில்லை. அதைத்தாண்டிய பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டவராக ஜெசிந்தா இருக்கிறார்.
மக்களின் மீதான கருணை, நம்பிக்கை, சகிப்புத்தன்மை, பிற கலாசாரங்களை ஏற்றுக்கொள்ளுதல் என பல்வேறு குணங்களைக் கொண்ட அரசியல் தலைவராக இருக்கிறார். இவரை உலகம் அடையாளம் கண்டுகொண்டது உறுதியான முடிவுகளை எடுக்கும் திறனில்தான். கோவிட் 19 பிரச்னையில் ஜெசிந்தா எடுத்து உறுதியான விதிகள் , நடைமுறைப்படுத்திய கட்டுப்பாடுகள், காட்டிய வேகத்தை ஊடகங்கள் மறக்கவே முடியாது. கிறிஸ்ட்சர்ச் விவகாரத்தில் ஜெசிந்தா பிற மதத்தினர் மீது காட்டிய நேசமும், அக்கறையும் அரசியல் தாண்டியவை. மதவெறியை தூண்டும் பிரிவினைகள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியவை.
இப்படி நாம் சொன்னாலும் இவரிடமும் சில பிழைகள் உண்டு. மக்கள் அனைவருக்குமான வீடுகளை குறைந்த விலையில் கிடைக்கச்செய்வதில் தவறியது. குழந்தைகள் வறுமையில் தவிப்பதை தடுக்க முயற்சிகள் செய்யவில்லை என்று விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. துடிப்பாகவும் அமைதியாகவும் வேலை செய்யும் இவரது வழிமுறை மக்களுக்கு பிடித்திருப்பதால் அக்டோபர் 2020ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக மக்கள் இவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நெருக்கடிகளை சமாளித்து நாடு மீண்டெழுவதற்கு உதவி செய்த பிரதமர் என்று இவரைக் கூறலாம். தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மக்களுக்கு நன்றி கூறிய ஜெசிந்தாவுக்கு மக்களின் பயத்தை எப்படி போக்கவேண்டும் என்று தெரிந்திருந்தது.
முக்கியமான சாதனை
கிறிஸ்ட் சர்ச் தாக்குதலில் 51 பேர் பலியானார்கள். இதனைக் காரணமாக வைத்து, நாடாளுமன்றம் மூலம் அசால்ட் ரைபிள், செமி ஆட்டோமேடிக் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு உடனடி தடையைக் கொண்டு வந்திருக்கிறார்.
முத்திரை வாக்கியம்
நீங்கள் உங்களை நம்பாதபோது பிற மக்களை உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்றோ, எனக்கு வாக்களியுங்கள் என்றோ சொல்ல முடியாது.
முதன்முதலாக….
கமலா ஹாரிஸ்
துணை அதிபர் (2021 முதல்)
அமெரிக்கா
கடந்த ஜனவரியில் கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவியேற்றார். இந்த பதவியை வகிக்கும் முதல் பெண் இவர்தான். 2010ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் முதல் கருப்பின பெண்ணாக தேர்வானார். 2016இல் செனட்டில் உறுப்பினராக தேர்வான தெற்காசியப் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
மாவட்ட அட்டர்னியாக இருந்தபோது அங்கு நடந்த குற்றங்களை தண்டிக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டவர் என்ற பெருமை உடையவர். அதேசமயம் ஊழலுக்கு துணை நின்றவர், பாகுபாடான நீதித்துறையை ஆதரித்தவர் என்ற விமர்சனங்களும் இவர் மீது உண்டு. ஆனால் அதனால் எல்லாம் இவரது வெற்றியை யாராலும் தடுக்க முடியவில்லை. சிஎன்என்னுக்கு அளித்த பேட்டி இதனை உறுதி செய்கிறது. கமலா நீ செய்த பல்வேறு சாதனைகள் முதன்முதலாக நீ செய்தவையாகவே இருக்கும். ஆனால் அதேசமயம் அதுவே கடைசியாகவும் இருந்துவிடக்கூடாது என்று கூறினார்.
முக்கியமான சாதனை
2011ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு இழப்பீடாக 25 பில்லியன் டாலர்களை அரசிடம் பெற்றுத் தந்தார். வங்கிகள் இவரது விதிகளுக்கு உட்படாதவரை அவர்களை சந்திக்க மறுத்தார்.
முத்திரை வாக்கியம்
குறிப்பிட்ட பிரச்னையை நான் ஆராயும்போது மற்றொரு நபராக இருந்துகொண்டு அதன் சாதக பாதகங்களை ஆராய்வேன். பிரச்னைகளை கண்டுபிடித்தபிறகு தவறான வாய்ப்புகளை நிராகரிப்பேன்.
அமைதியான தடுப்பாட்டக்காரர்
ட்சாய் இங்க் வென்
அதிபர்(2016முதல்), தைவான்
வென், தைவானை சீனாவில் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்ற முயன்று வருகிறார்.. அதுதான் அந்நாட்டு மக்களிடம் அவரை நாயகியாக்கியுள்ளது. தங்களை ஆளும் பொறுப்பையையும் அவரிடம் கொடுத்துள்ளனர். நிர்வாகத்திலும் மேடம் கில்லிதான். கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டபோது, அதாவது டிசம்பர் 2019இல் இருநூறு நாட்களுக்கு மேலாக நாட்டில் விதிமுறைகளை இறுக்கி கொரோனா வழக்குகள் 600, இறப்பு 7 என வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சாதித்தார்.
இங்கிலாந்து நாட்டு தலைவரான மார்க்கரேட் தாட்சர்தான் வென்னுக்கு முன்மாதிரி. தைவான் நாட்டின் முதல் பெண் அதிபரான வென், இரும்பு மனுஷியாக உர்ரென இருப்பவர் அல்ல. இன்ஸ்டாகிராமில் தனது பூனைக்குட்டிகளுடன் எப்போது பதிவுகளை போட்டுக்கொண்டே இருப்பவர். தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ளாதவர். அந்த வகையில் கூட தைவானின் அதிபர் இருக்கையில் மணமாகாத நிர்வாகி இவர்தான்.
லண்டன் பொருளாதார கல்லூரியில் வணிக சட்டங்களில் முனைவர் பட்டம் வென்றவர். அரசியலில் தனக்கென முன்மாதிரியாக யாரையும் கொள்ளாமல் 57 சதவீத மக்களின் வாக்கைப் பெற்று வென்றார். சிறந்த சிந்தனை மற்றும் செயல்பாட்டாளராக உள்ளார்.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான திருமணத்தை சட்டப்பூர்வ அங்கீகாரம் கொண்டதாக்கினார். இதனால் இளைஞர்களின் பெரும்பாலான ஓட்டு மேடமுக்குத்தான். மேலும் சீனாவை எதிர்த்தும் உலகளவிலான அங்கீகாரத்திற்காகவும் வென் போராடி வருவதால் மக்களை அவரை நேசிக்கின்றனர்.
முக்கிய சாதனை
கொரோனா காலத்தில் நோய் பரவுதலை முன்னமே அறிந்து சீனாவிலிருந்த வரும் பயணிகளை முன்னமே தடுத்து தனிமைப்படுத்தினார். இதனால் நோய்த்தொற்று பாதிப்பு நாட்டில் குறைந்துவிட்டது. மேலும் இறப்பு எண்ணிக்கையும் குறைவு. பிறநாடுகளுக்கும் தைவான் உதவும் என நம்பிக்கை வார்த்தைகளை மட்டும் அளிக்காமல் பல்வேறு உதவிப்பொருட்களை அனுப்பிய கருணை மனம் கொண்ட வர்.
முத்திரை வாக்கியம்
தைவான் நாட்டு மக்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வளர்ச்சி பெறுவதற்கான திறனை தங்களுடைய ஸ்டெம்செல்களில் கொண்டுள்ளனர்.
இதயங்களைக் கவர்ந்த ராணி
செலிஸ்டா பார்பர்
நகைச்சுவை நடிகர், எழுத்தாளர்
நீங்கள் சிரிக்கவில்லையென்றால் அழத்தான் வேண்டும் என்று சொல்லியே நகைச்சுவை நிகழ்ச்சியை செய்யும் நகைச்சுவை நடிகர் இவர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருக்கிறார். அதில் 7.6 மில்லியன் ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
பேஸ்புக்கில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதற்கான நிதி திர்ட்டல் நிகழ்ச்சியை இவரே தொடங்கினார். அதன் மூலம் 39.5 மில்லியன் டாலர்களை திரட்டி சாதனை செய்தார். இது பேஸ்புக் வரலாற்றில் பெரும் சாதனை.
செலிஸ்டா உருவாக்கும் பல்வேறு நகைச்சுவை கன்டென்டுகள் எல்லாமே எண்ணிக்கையில் எவ்வளவு பார்த்து வரிசைப்படுத்தமுடியாது. ஆனால் தரம் என்று வரும்போது அதில் முன்னணியில் இருப்பவர் என்பதால், புகழ்பெற்ற பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலரும் ரசிகர்களாக இவரை ரசிக்கிறார்கள்.
முக்கியமான சாதனை
காட்டுத்தீ தொடர்பாக மக்களிடம் பெறப்பட்ட பணம் எப்படி விநியோகம் செய்யப்பட்டது என சர்ச்சை கிளம்பியது. ஆனாலும் இத்திட்டத்தை பொதுநலனுக்காக ஒருங்கிணைத்த வகையில் செலிஸ்டாவுக்கு பெரும் புகழ் கிடைத்தது. இதனை சிறப்பாக மக்களிடம் கொண்டு சென்ற வகையில் பேஸ்புக்கும் பயனடைந்தது.
ப்ளூம்பெர்க்
கருத்துகள்
கருத்துரையிடுக