தியான்மன் சதுக்கத்தில் நடைபெற்ற வரலாற்று களங்கத்தை இந்தியா பார்க்கும் பார்வை! - புதிய நூல்கள்
இந்தியா அண்ட் ஆசியன் ஜியோபாலிடிக்ஸ்
சிவ்சங்கர் மேனன்
பெங்குவின் ராண்டம் ஹவுஸ்
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை மாறிவரும் வெளிநாட்டு கொள்கை பற்றி பேசுகிறது இந்த நூல். ஆசிய நாடுகளுக்கு இடையில் இந்தியா எப்படி வெளிநாட்டுக்கொள்கைகளை கடைபிடிக்கிறது. அதன் விளைவுகள் என்ன என்பதை நூலைப் படித்து அறிந்துகொள்ளலாம்.
தி ஃபெயில் சேப் ஸ்டார்ட்அப்
டாம் எல்சென்மன்
பெங்குவின் ராண்டம் ஹவுஸ்
உலகில் அதிகம் தொடங்கப்படுவது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான். ஆனால் மிகச்சில ஆண்டுகளிலேயே தோல்வியுற்று மூடப்படுவதும் அதுதான். ஏன் இப்படி நடக்கிறது என டாம் ஆராய்ச்சி செய்து நூலை எழுதியுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழக ஆசிரியரான இவர், தோல்வி அடையும் வகையில் இல்லாத ஸ்டார்ட்அப்பை எப்படி தொடங்குவது என பல்வேறு ஆலோசனைகளை நம்முன் வைக்கிறார்.
தியான்மென் ஸ்கொயர்
விஜய் கோகலே
ஹார்பர் கோலின்ஸ்
சீனாவில் நடைபெற்ற தியான்மென் ஸ்கொயர் சம்பவம் வரலாற்றில் மறக்காமுடியாத ஒன்று. இச்சம்பவம் 1989ஆம் ஆண்டு நடைபெற்று சீனாவின் அரசியலை மாற்றி அமைத்தது எனலாம். இந்த சம்பவத்தை இந்தியாவின் பார்வையிலிருந்து பார்த்து நூலை எழுதியுள்ளார் ஆசிரியர்.
ஜாலியன் வாலாபாக் என கிரவுண்ட்பிரேக்கிங் ஹிஸ்டரி ஆப் தி 1919 மஸாக்ரே
விஎன் தத்தா
பெங்குவின் ராண்டம் ஹவுஸ்
ஜாலியன் வாலாபாக்கில் பிறந்து வளர்ந்தவர் அந்த வரலாற்று சம்பவத்தை எப்படி பார்க்கிறார் என்பதையும், அதனை ஆய்வுநோக்கில் அறிஞர் எப்படி பார்க்கிறார் என்பதையும் ஒருசேர நூலைப் படிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிற்து. இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் செய்த வரலாற்று களங்கம், எப்படி இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது முக்கியமானது. ஜாலியன் வாலாபாக்கில் தப்பி பிழைத்தவர்கள் நூலில் பேசியுள்ளனர். அதையும் நீங்கள் வேதனையுடன் படித்து அக்காலகட்ட கோரத்தை புரிந்துகொள்ள முடியும்.
உத்தம் சிங் தி ரிவெஞ்ச் ஆப் ஜாலியன் வாலாபாக்
அனிதா ஆனந்த்
சைமன் ஸ்சஸ்டர்
உத்தம் சிங் எப்படி ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பலி வாங்கினார் என்பதை சாகச நாவல் போல விவரித்துள்ள நூல் இது. பஞ்சாப்பின் ஆளுநர் மைக்கேல் வையர் என்பவர்தான் படுகொலைக்கு உத்தரவிட்டவர் என்பதை அறியும் இளைஞர் உத்தம் சிங் தனது தேசபக்தியை உலகிற்கு காட்டினார் என்பதை செய்திகளில் அறிந்திருப்பீர்கள். அதனது முழுமையாக சித்திரம் இது.
FE
கருத்துகள்
கருத்துரையிடுக