ஆர்எஸ்எஸ்ஸின் நிழலுடன்தான் எதிர்க்கட்சிகள் போரிட்டு வருகின்றன! - பத்ரி நாராயணன், சமூக வரலாற்று அறிஞர்

 

 

 

 

When caste politics took a break in India - lifestyle

 

 

பத்ரி நாராயணன்


சமூக வரலாற்று அறிவியலாளர்



பத்ரி நாராயணன், ஆதி திராவிடர் மற்றும் இந்துத்துவா பற்றி பல்வேறு கட்டுரைகளை நூல்களை எழுதியுள்ளார். அண்மையில் ரீபப்ளிக் ஆப் இந்துத்துவா என்ற நூலை எழுதியுள்ளார். இதில் எப்படி இந்துத்துவா தன்னை மறுகட்டமைப்பு செய்து உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதைக் கூறியுள்ளார்.


இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்ப்பவர்கள், அதன் நிழலுடன்தான் போரிடுகிறார்கள். இந்துத்துவ தத்துவத்தின் கர்ப்பகிரகம் என ஆர்எ்ஸ்எஸை நீங்கள் கூறியுள்ளீர்களே?


தொண்ணூறுகளுக்குப் பிறகு உலகமயமாக்கம், தாராளமயமாக்கம் அறிமுகமானது. அப்போதிலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பை நவீன காலகட்டத்திற்கு ஏற்றபடி தனது கொள்கைகளையும் செயல்களையும் சிந்தனைகளையும் மாற்றி அமைத்து வருகிறது. இன்று ஒருவர் பல்வேறு சமூக பிரச்னைகள் சார்ந்து ஆர்எஸ்எ்ஸ் அமைப்பை கேள்விகள் கேட்டாலும் அதனிடம் அதற்கான பதில்கள் உள்ளன. அண்மையில் கூட அதன் தலைவர் மோகன் பகவத், கோல்வால்கரின் பேச்சுகள் அடங்கிய தொகுதியில் கூற்ப்பட்ட சில கருத்துகளை நாம் மறக்க வேண்டும் என்று கூறியுள்ளார். காலமும், மக்களும் மாறும்போது நாமும் மாறவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பு முன்னர் ஈடுபட்ட, சில காரியங்களின் வடுக்களால் இன்றும் போராடி வருகிறது.


ஆர்எஸ்எஸ் அமைப்பு, பழங்குடிகள் மற்றும் ஆதி திராவிடர் ஆகிய இனக்குழுக்களுக்கு இடையில் பல்வேறு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது. தற்போது எப்படி இந்த பணிளள் நடைபெறுகின்றன


ஆர்எஸ்எ்ஸ் அமைப்பு செய்யும் பல்வேறு பணிகள், வெளியில் அதிகம் தெரியாதவையாகவே இருக்கும். இந்த அமைப்பு பழங்குடிகளுக்கு பள்ளிகள், மருத்துவமனைகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தந்துவருகின்றனர். வரலாற்றில் உள்ள பல்வேறு மனிதர்களை மட்டும் பிரித்தெடுத்து அவர்கள் இந்துத்துவாவிற்கு ஏற்றபடி நாயகர்களாக மாற்றுகின்றனர். அடுத்து, பழங்குடி மக்களை மெல்ல இந்து மதத்திற்குள் கொண்டு வருகின்றனர். இதற்கு பல்லாண்டுகளை வேலை நடந்துவருகிறது. இடதுசாரிகள், மையக் கட்சிகள், அம்பேத்கரிய இயக்கங்கள் இதனை சரியாக அடையாளம் காணத் தவறிவிட்டன. சான்றாக, பந்தேல்கண்ட் பகுதியிலுள்ள கபூத்ரா, குச்பாதியாஸ் ஆகிய ஆதி திராவிடர் இனப்பிரிவு மக்களுக்கு ஆர்எ்ஸ்எ்ஸ் அமைப்பு பாம்பு கோவிலை அமைத்துக்கொடுத்துள்ளது.இ தனை திறந்து வைக்க யோகி ஆதித்யநாத் வருகை தந்துள்ளார். இம்மக்களுக்கு கோவில் கட்டுவது என்பது ஆசையாக இருந்தாலும் அவர்களுக்கு நிதி வசதி கிடையாது. இதனை புரிந்துகொண்ட ஆர்எஸ்எ்ஸ் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க, கோவிலை கட்டிக்கொடுத்துள்ளது.


தொலைதூரங்களில் வாழும் கிராம மக்களிடையே ஆர்எஸ்எஸ் அமைப்பு வலுவான தொடர்பை வைத்துள்ளது.


ஆர்எ்ஸ்எஸ் அமைப்பு, தங்களை எப்படி அம்பேத்கருடன் இணைத்துக்கொள்கிறது?


ஆர்எஸ்எஸ் அமைப்பு, அம்பேத்கரை ஆதி திராவிடர் இன மக்கள் தலைவர் முத்திரையிலிருந்து அனைத்து இந்தியர்களுக்கான தலைவராக மாற்றியுள்ளது. மதம் சார்ந்த பல்வேறு கூற்றுகளை ஆர்எஸ்எஸ் அமைப்பு சமய சீர்த்திருத்தமாக ஏற்றுக்கொண்டுவருகிறது. அதனை சமூக தீமைகளாக கருதி இந்திய சமூகத்திலிருந்து விலக்க வேண்டுமென்றும் பேசிவருகிறது. சாதிக்கு எதிரானவராக அம்பேத்கரை சித்தரிக்க முடியாதபடி பல்வேறு வேலைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பு செய்து வருகிறது.



டைம்ஸ் ஆப் இந்தியா


அவ்ஜித் கோஷ்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்