சீக்ரெட் கோட் வழியாக படுகொலை செய்யும் குழுவை கண்டுபிடிக்க போராடும் முன்னாள் எப்பிஐ ஊழியர்! - சீக்ரெட் கோட்(சைபர்)

 

 

 

 

 

Cypher Full season download in hindi 2020 BluRay 720p

 

 

 

சீக்ரெட் கோட்


எம்எக்ஸ் பிளேயர்

Series Directed by 

Majdi Smiri

Mohamed Sayed Bisheer ... (creator) (8 episodes, 2021)
Mohamed Sayed Bisheer ... (head writer) (8 episodes, 2021)
Victor Mathieu ... (head writer) (8 episodes, 2021)
Majdi Smiri ... (creator) (8 episodes, 2021)
Majdi Smiri ... (writer) (8 episodes, 2021)
Justin Escue ... (3 episodes, 2021)
Daniel H. Friedman ... (2 episodes, 2021)
Zach Zorba Grashin ... (cowriter) (2 episodes, 2021)
Shahram Zargari

அமெரிக்காவின் காவல்துறை அமைப்பு தீவிரவாதி ஒருவரைக் கண்டுபிடிக்க ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் செல்கிறது. ஆனால் அங்கு செல்லும்போது, களப்பணி போலீசாரின் தகவலும் ஆபீசில் உட்கார்ந்து அவர்களைக் கண்காணிக்கும் ஆபீசர் குழுவினரின் தகவலும் ஓரிடத்தில் மாறுபடுகிறது. அப்போதே படையினரை வெளியேறச்சொல்லாமல் அப்படியே திட்டத்தை தொடருங்கள் என தலைவர் கூறுகிறார். குழுவிலிருந்து சிலருக்கு அது பிடிக்கவில்லை என்றாலும் கூட சரி என தலையாட்டுகின்றனர்.

அறையில் தீவிரவாதியை தெர்மல் சென்சார் கண்ணாடி மூலம் காவல்துறை கண்டுபிடிக்கிறது. ஆனால் அவரை நெருங்குவதற்குள் அந்த மர்ம மனிதர் அனைத்து தகவல்கள்களையும் அழித்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவர்களுக்கு மிஞ்சுவது சீக்ரெட் கோட் அடங்கிய பேப்பர் மட்டுமே. அதை வைத்துக்கொண்டு எப்பிஐ அமைப்பு தலையை பிய்த்துக்கொள்கிறது. அதை டீகோட் செய்ய வில் ஸ்காட் கிரிப்டோ ஆய்வாளர் வரவைக்கப்படுகிறார். அவர் அதனை ஆபீசில் மட்டுமே வைத்து டீகோட் செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. அதனை செய்வதற்குள் தீவிரவாதி இருந்த ஒட்டுமொத்த கட்டிடமே வெடிகுண்டு மூலம் இயக்கப்பட்டு வெடிக்கவைக்கப்படுகிறது. எட்டுபேர் அதில் இறந்துபோய்விட எப்பிஐ இயக்குநர் உட்பட ஆபீசர் குழுவே குற்றவுணர்ச்சியில் தவிக்கிறது.


How It's Made: Sik Golf Descending Loft Technology - Flipboard 

வில் ஸ்காட் அதற்குள் யார் முதல் பெயர் என கண்டுபிடித்து விடுகிறார். அதனை எப்பிஐயில் உள்ள நண்பனுக்கு ரகசியமாக சொல்லுகிறார். போலீசாருக்கு வெடிகுண்டு விபத்து பின்னடைவாக மாற, வில் ஸ்காட்டிடம் கொடுத்திருந்த வேலையை திரும்ப பெறுகிறார்கள். அவர் இனி அந்த வேலையை செய்யவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். ஆனால் ஸ்காட்டைப் பொறுத்தவரை வேலை அவரை சுவாரசியப்படுத்தினாலே போதும். காசைப் பற்றி பொருட்படுத்தாமல் அதனை செய்வார். ரகசியமாக சீக்ரெட் கோடை போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்து அதனை அவர் டீகோட் செய்து வருகிறார். அப்படி கண்டுபிடிக்கும் பெயர்கள் ஏற்கெனவே இறந்துபோன நபர்களாக உள்ளனர். ஆனால் அவர்களின் இறப்பில் ஏதோ வினோத தொடர்பு இருப்பதை உணர்கிறார்.

இதற்கிடையில் வில் ஸ்காட் முரட்டுத்தனமான புத்திசாலி என்பதால் அவருக்கு திருமண வாழ்க்கை தங்கவில்லை. மனைவி விவகாரத்து கொடுத்துவிட்டு மகளை வாங்கிக்கொண்டு தனியாக சென்று வசிக்கிறார். என்ன காரணம்? மகளைப் பார்த்துக்கொள்ளுமளவு முன்னாள் கணவரிடம் காசு கிடையாது. பொறுப்பும் கிடையாது என்பதால்தான். ஆனால் மகளுக்கு அப்பாவின் பாசம் தேவை. எனவே மகளைப் பொறுத்தவரை சில நாட்கள் அப்பாவுடன், சில நாட்கள் அம்மாவுடன் என நகர்கிறது. ஸ்காட்டைப் பொறுத்தவரை மகளுடன் வெளியே செல்வது, சினிமா பார்ப்பது ஆகிய விஷயங்களே பெரிய கொண்டாட்டம். தனது வாழ்க்கையின் பிரச்னைகளையும் மகளிடம் அவளுக்கு புரியும்படி பேசுகிறார். மனைவிக்கு அவரின் அழைப்பை ஏற்று அவர் சொல்வதை மகளுக்கு சொல்வதில் கூட விருப்பமில்லை.

இந்த நேரத்தில் இரண்டாவது ஆள் யார் என்று பார்க்க வில் ஸ்காட் தானே குறிப்பிட்ட இடத்திற்கு செல்கிறார். அங்கு பார்த்தால் ஒருவர் குற்றுயிராக வீட்டில் கிடக்கிறார் அவரைக் காப்பாற்ற முனைந்தால் வில் ஸ்காட்டை திடீரென ஒருவர் தாக்கி கழுத்தில் மயக்க ஊசியைப் போட்டுவிடுகிறார். வில் ஸ்காட் அந்த மர்ம மனிதர்களிடமிருந்து தப்பித்தாரா? சீக்ரெட் கோட் பட்டியலில் உள்ளவர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவது ஏன்? எப்பிஐயில் உள்ள கருப்பு ஆடுகள்தான் கொலைகளுக்கு உடந்தையா? என்ற கேள்விகளுக்கு விடை தேடினால் ஐந்து எபிசோடுகள் கடந்து வரவேண்டும்.

சீக்ரெட் கோட் தொடர், முழுக்க அமெரிக்க காவல்துறையான எப்பிஐயின் வீரதீரத்தைப் பேசுகிறது. வில் ஸ்காட் தொடரில் உள்ளே நுழையும் கதை படுமோசமான வேகத்தில் செல்கிறது. எப்போதும் மீட்டிங்கில் உட்கார்ந்து பீட்சா சாப்பிட்டுக்கொண்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என பேசும் காட்சிகள் சலிப்பு தருகின்றன.


Secret Code: Cypher (2020) Season 1 in Hindi Dubbed ... 

வில் ஸ்காட், கிளாரே, கர்ட், ஹலானாஆகிய பாத்திரங்கள் மட்டுமே தொடரை கொஞ்சமேனும் சுவாரசியமாக்குகின்றன. போருக்கு செல்லும் ராணுவ வீரர் குடும்ப போட்டோவைப் பார்ப்பது, எப்பிஐ குழுவிலுள்ள காதல், முன்பின் தெரியாதவரை உடனே நம்பி செகண்ட் டேட்டில் செக்ஸ் வைத்துக்கொள்வது என நிறைய படங்களில் பார்த்த கிளிஷே காட்சிகள் ஏராளம்.

வில் ஸ்காட்டுக்கு செம ஜோடியாக செட் ஆவது கிளாரே பாத்திரம்தான். இவர்களின் ரொமான்ஸ்தான் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. இவரின் பாத்திரமும் மர்மமான ஒன்றாக உள்ளது. அடுத்தடுத்த எபிசோடுகளில் மர்மம் விலகலாம். இந்த தொடர் இன்னும் பல்வேறு மர்மங்களை விளக்கவில்லை. மேலும் மெதுவான தொடக்கம் என்றாலும் அடுத்தடுத்த எபிசோடுகளில் வேகம் தேவை. இல்லையென்றால் இதனைப் பார்ப்பது கடினம்.

சைபர் என்ற பெயரில் இணையத்தில் தேடினால் தொடர் பற்றிய விவரங்கள் இணையத்தில் யூடியூபில் கிடைக்கும்.


வேகமில்லாத திரில்லர்!


கோமாளிமேடை டீம்






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்