தலைவராக அதிகரிக்கும் வரவேற்பு! - ஸ்டாலினோடு துணை நிற்கலாமா?

 

 

 

 

 

 

 

Mkspicture (cropped).jpg

 

 

 

 

அதிமுகவும், திமுகவும்


ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு மகத்தான தேர்தல் வெற்றியைப் பெற்றார். இதன்மூலம் 32 ஆண்டுகளாக இருந்த சாதனையை தகர்த்தார். ஒரே கட்சி இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெறுவது பற்றியதுதான் அது. எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கி தோல்வியை சந்திக்காத முதல்வராக இருந்தார். அவர் 1987இல் இறந்துபோனார். அதற்குப்பிறகுதான் 1989இல் திமுக வெற்றி பெறமுடிந்தது. 2019ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. ஆனாலும் கூட தமிழக முதல் அமைச்சராக வாய்ப்பளிக்கும் 2021ஆம் ஆண்டு தேர்தல் திமுகவின் தலைவரான ஸ்டாலினுக்கு அக்னி பரிட்சைதான்.


கட்சிக்காக கலைஞர் காலத்திலிருந்து களப்பணி ஆற்றிவரும் அவருக்கு முதல்வர் பதவி கிடைப்பது என்பது உழைப்பிற்கான பரிசாக அமையக்கூடும். தற்போதைய முதல்வரான பழனிசாமியைப் பொறுத்தவரை முதல்வர் பதவி என்பது அதிர்ஷ்டவசமாக கிடைத்தது. ஆனால் கட்சி எம்எல்ஏக்களை கட்டிக்காப்பாற்றியதில் அவரது சாமர்த்தியம் உள்ளது.


தவிக்கும் மதவாத சக்திகள்


பாஜக கட்சி உள்ளே நுழைய முடியாமல் தவிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் கேரளமும் ஒன்று. காரணம், கல்வி கற்றவர்களின் அளவு கேரளத்தில் அதிகம். இன்னொன்று, மத ரீதியான பெரிய பிளவுகள் இரு மாநிலங்களிலும் கிடையாது. 2019இல் ஸ்டாலின் தனது தலைமைத்துவத்தை நிரூபித்துவிட்டார். மக்களவை தேர்தலிலும் திமுக மகத்தான வெற்றி பெற்றது. 2016ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 41 இடங்களை ஒதுக்கியது. ஆனால் அக்கட்சி வென்றது எட்டு இடங்களில்தான். தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸிற்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதி இடங்களில் கூட்டணிகட்சிகளும், திமுகவும் போட்டியிடும்.


என்னோடு துணை நில்லுங்க!


இப்படி இன்று யூடியூப், எம்எக்ஸ் பிளேயர் என அனைத்து இடங்களிலும் நம்மிடம் பேசிவரும் ஸ்டாலின், ஒருகாலத்தில் இளைஞர் அணித் தலைவர். 1980ஆம் ஆண்டு 27 வயதில் இளைஞர் அணித்தலைவராக உழைத்தார். தார்….ர். எதுவரையில் தெரியுமா? 2017ஆம் ஆண்டில் 68 வயதைத் தொடும்வரை. இப்படி வேலைவாங்கியே அவரை பிலல் வைத்திருந்தார் அவரது தந்தையும் கட்சித்தலைவருமான கலைஞர். ஒருகட்டத்தில் கலைஞர் முதல்வராக நிற்பது குறித்து பல்வேறு கருத்துக் கணிப்புகள் வந்தன. இதில் கலைஞருக்கு 19 சதவீதம் என்றால் ஸ்டாலினுக்கு 10சதவீதம் என மக்களின் எதிர்பார்ப்பு கூடியது. இளைஞர் அணியில் கூட அதிக காலம் அவரை பின்னணியில் வைத்திருந்துவிட்டார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


இன்று திமுக என்பது முழுக்க ஸ்டாலினை முன்வைத்தே அனைத்து பிரசாரங்களும் அமைந்துள்ளது. ஆனால் அதிமுகவோ, பாஜகவோ அப்படி விளம்பரங்களை அமைக்கவில்லை. அவர்கள் பொதுப்படையான விஷயங்களை விளம்பரம் செய்கிறார்கள். தங்களது சாதனைகளை விட எதிர்க்கட்சி செய்த தவறுகளே அதிகம் முதன்மைப்படுத்தப்படுகின்றன. இதையெல்லாம் தாண்டியும் கூட ஸ்டாலினை முதல்வராக வரவேற்கும் கருத்துக்கணிப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கு காரணம், மக்களிடையே பிரபலமான தலைவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லாததே.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்