மேல் முறையீட்டிற்கு உயர் நீதிமன்றம்தான் செல்லவேண்டும் என சொல்லும் மத்திய அரசின் புதிய சீர்திருத்தம்! - ட்ரிப்பியூனல் அமைப்பு கலைக்கப்படுகிறது

 

 

 

 

 

 

Film Certification Appellate Tribunal abolished ...

 

 

காணாமல் போகும் ட்ரிப்யூனல்


மத்திய அரசு, தற்போது புதிய சீர்திருத்தமாக திரைப்படங்களை மேல் முறையீட்டிற்கு அனுப்பும் ட்ரிப்பியூனலை கலைத்துள்ளது. இதனால் சர்ச்சைக்குரிய மையப்பொருளைக் கொண்ட படங்கள் உயர்நீதிமன்றத்தில் தங்கள் படங்களை திரையிடுவதற்கான அனுமதியை பெற வேண்டியிருக்கும். 1983ஆம் ஆண்டு திரைப்பட ஒளிப்பதிவு சட்டம் 1952படி ட்ரிப்பியூனல் அமைக்கப்பட்டது. இதில் தலைவர் உட்பட ஐந்து பேர் இருப்பார்கள். இவர்களை உறுப்பினர்களாக கருதலாம் .கூடுதலாக ஒளிபரப்புத்துறை அமைச்சக செயலரும் இருப்பார். மத்திய தணிக்கை வாரியத்தின் கருத்திற்கு எதிராக திரைப்பட்ட தயாரிப்பாளர்கள் ட்ரிப்பியூனில் தங்கள் படங்களின் திருத்தங்களுக்கு எதிராக முறையிட்டு நீதி பெறலாம்.


மத்திய தணிக்கை வாரியத்தில் தலைவர் தவிர்த்து 23 உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்கள் படங்களைப் பார்த்து திருத்தங்களை கூறி அதற்கான பல்வேறு சான்றிதழ்களை வழங்குவார்கள். யு, யு/, ஏ என பல்வேறு வித சான்றிதழ்களை வழங்குவார்கள். ஏ சான்றிதழ் பெற்ற படங்களை டிவியில் ஒளிபரப்புவது கடினம். பொதுமக்களின் பார்வையிடலுக்கு வரும் படங்கள் அனைத்தையும் மத்திய தணிக்கை வாரியம் தணிக்கை செய்கிறது. இந்த வாரியத்திலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள்.


இதில் சிக்கல்களை சந்தித்து சில படங்களைப் பார்ப்போம்.


லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா 2016


பாஜக ஆதரவாளரான பாலஜ நிஹ்லானி என்பவர் தணிக்கை வாரியத்தின் தலைவராக அப்போது இருந்தார். பெண்கள் சார்ந்த படம் என்று கூறினாலும் இதற்கு சான்றிதழ் வழங்க மறுத்தார். படத்தின் இயக்குநர் ட்ரிப்பியூனில் முறையிட்டு ஏ சான்றிதழோடு சில திருத்தங்களையும் செய்து படத்தை வெளியிட்டார்.


மெசஞ்சர் ஆப் காட் 2015


பஞ்சாப்பைச் சேர்ந்த வாழும் கடவுள் தேரா ச ச்சா சௌதா அமைப்பின் தலைவர் நடித்த அதிபயங்கர படம். இதை மக்கள் பார்த்து அவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னாவது என நெஞ்சம் துடித்து தலைவர் லீலா சாம்சன் சான்றிதழ் தர மறுத்தார். ட்ரிப்பியூனில் படத்திற்கு தடை ஏதுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். லீலா தனது தலைவர் பதவியை விட்டு விலகினார்.


ஹரம்கோர்


படம் கொஞ்சம் விவகாரமானதுதான். ஐ லவ் யூ டீச்சர் மாதிரியான கதையம்சம் கொண்டது. ஆசிரியருக்கும் மாணவிக்குமான உறவு பற்றியது. . இது நடக்கவே கூடாது 21 பர்ஸ்ட் செஞ்சுரியில இப்படியொரு படமாக என மத்திய தணிக்கை வாரியம் அலறியது. ஆனால் ட்ரிப்பியூனல் மாணவிகளுக்கு தங்கள் உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிற படம் என்று திரையிட அனுமதி கொடுத்துவிட்டு ரிலாக்சானது. நவாசுதீன் சித்திக் சிறப்பாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று.


காலாகாண்டி 2018


சயீப் அலிகான் நடித்தாலே படம் சுமாராக ஓடும். இல்லையெனில் ஓடவே ஓடாது. இந்த உண்மை கூட புரியாமல் படத்தை நிதானமாக பார்த்த வாரியம். 2.30 நேர படத்திற்கு 72 கட்களை கொடுத்தது. மேல்முறையீட்டில் ஒரே கட்டுடன் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது.


இனி நீதிமன்றங்கள்தான் படத்தை தணிக்கை செய்யுமென்றால், பிற வழக்குகளை எப்படி தீர்ப்பார்கள்? படத்தைப் பார்த்து புரிந்துகொண்டு அதற்கு அனுமதி கொடுப்பது சரியான நேரத்தில் நடக்குமா என்பது கூட இனி கேள்விக்குறிதான். இனிமேல் படங்களை சுதந்திரமாக எடுத்து திரையிடுவது கடினமானவே இருக்கும் என ஹன்சல் மேத்தா கூறியுள்ளார்.


திரையுலகிற்கு மோசமான நாள் என திரைப்பட இயக்குநர் விஷால் பரத்வாஜ் டுவிட்டரில் கூறியுள்ளார்.


சினிமாவுக்கு மட்டும்தானா?



இந்தியன் எக்ஸ்பிரஸ்


ஏக்தா மாலிக்



கருத்துகள்