உடற்பயிற்சி எதற்காக?- இதயம், நுரையீரல் செயல்பாடுகளை அறிவோம்.

 

 

 

 

 

 Mitosis, Meiosis, Cell, Cell Division, Human, Cancer

 

 

உடலை எப்படி அசைக்க முடிகிறது?


உடலிலுள்ள தசைகள் ஒன்றாக இயங்கினால் மட்டுமே நமது கைகால்களை அசைத்து நகர முடியும். தசைகள் உள்ளிழுக்கப்படும் தன்மை கொண்டவை. வெளித்தள்ளும் திறன் இல்லாதவை. தசைகள் இழுக்கப்படும்போது உடல் உறுப்பு குறிப்பிட்ட திசையில் நகரும். இன்னொரு தசை உள்ளிழுக்கப்படும்போது இன்னொரு திசையில் உறுப்புகள் நகரும். தசைகள் குழுவாக இயங்குவதால் நாம் உடலை அனைத்து திசைகளிலும் நகர்த்திக்கொள்ள முடியும்.


வளைக்கலாம் நேராக்கலாம்.


முழங்கையின் முன்பகுதி உயர்ம் குறைவாக இருக்கும் பின்பகுதி பைசெப்ஸ் அமைந்துள்ளது. பைசெப்ஸ் தசைகளை ட்ரைசெப்ஸ் தளர்த்துகிறது. முழங்கையை எளிதாக மடக்கும் இணைப்பு எலும்புகளும் இங்குள்ளன. இதனை தெளிவாக பார்க்க கைகளின் அமைப்பு அல்லது பாடி பில்டர்களின் கைகளைப் பார்க்கலாம். உடற்பயிற்சி காரணமாக அவர்களின் தசை அமைப்புகள் தனியாக தெளிவாக தெரியும்.


எதற்காக உடற்பயிற்சி?


உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசைகள் பெரிதாகவும் வலிமையாகவும் உருவாகும். புதிய தசை நார்கள் உருவாகும். எனவே தினசரி நீங்கள் செய்யும் வேலைகளைப் பொறுத்து இருபது நிமிடம் உடற்பயிற்சி செய்வது அவசியம். எளிமையாக சொன்னால் எந்த உறுப்புகளை பயன்படுத்துகிறீர்களோ அந்த உறுப்பு வலிமையடையும். பிற உறுப்புகள் வலுவிழக்கம்.


உடற்பயிற்சி செய்யும்போது இதயம், நுரையீரல் ஆகியவை நீடித்த ஆயுள் பெறும். ஓட்டம், நீச்சல், சைக்கிள் பயிற்சி ஆகியவை நுரையீரலையும் இதயத்தையும் வலுவாக்கும்.


தசைகள் இணைப்பு பகுதியில் உடல் உறுப்புகளை அசைக்க உதவுகின்றன. தசைகள் எலும்புகளுடன் திசுக்களால் இணைக்கப்பட்டுள்ளன. இதனை டெண்டன்ஸ் என்று கூறுவார்கள்.


எலும்பு இணைப்புகள்


பொதுவாக ஒரு எலும்பு இன்னொரு எலும்புடன் இணைந்திருக்கும். இதனால் இரு எலும்புகளின் ஒத்திசைவில் நம்மால் கைகளை மடக்க முடிகிறது. எலும்பு இணைப்புகளில் தேய்மானத்தைக் குறைக்க குறிப்பிட்ட திரவத்தை உடல் சுரக்கிறது. இதனால் உராய்வின்றி எலும்புகளை நகர்த்தலாம். இதன் பொருள் கைகளை எளிதாக நீட்டி மடக்கலாம் என்பதே.


நீட்டி மடக்குதல்


புஜத்திலுள்ள ட்ரைசெப்ஸ் தசைகளுக்கு கீழுள்ள எலும்பு அமைப்புதான் முழங்கை. . இதனை நேராக நீட்டும்போது பைசெப்ஸ் தசைகள் ஓய்வு பெறுகின்றன.


2


மூச்சு விடுவது எப்படி?


நுரையீரலிலுள்ள தசைகள்தான் காற்றை உள்ளிழுத்து வெளியே விட உதவுகின்றன.

காற்று மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலை அடைகிறது. நாம் உயிரோடு இருக்க சுவாசிப்பது அவசியம். இதில் பிரச்னை ஏற்படும்போது மருத்துவமனையில் செயற்கை சுவாசத்தை பயன்படுத்துகிறார்கள்.


நமது நுரையீரல் பெரியது. அதில் ஸ்பான்ஞ் மாதிரியான அமைப்பு உள்ளது. இதில் ஏராளமான குழாய் அமைப்புகள் உள்ளன. இதனை அல்வியோலி என அழைக்கலாம். இதுதான் காற்றிலுள்ள ஆக்சிஜனைப் பிரித்து அதனை ரத்தத்தில் சேர்க்கிறது.


மார்பெலும்புகளுக்குள் பாதுகாப்பாக நுரையீரலும் இதயமும் அமைந்துள்ளன. இதில் மூச்சு விடுவதை ஒருவரின் மார்பெலும்பு ஏறி இறங்குவதை வைத்து கணக்கிடலாம.. சுவாசத்தில் மாறுபாடு ஏற்படும்போது இதயத்தின் துடிப்பு கூடும். இதனால் உடலின் செயல்பாடு தாறுமாறாக மாறும். மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோ்ப் மூலம் இதயம் மற்றும் மூச்சின் செயல்பாட்டைக் கணித்து மருத்துவ சிகிச்சைகளை செய்கின்றனர்.


நுரையீரலுக்கு கீழுள்ள தாள் போன்ற தசை அமைப்பை டயப்பரம் என்று கூறலாம். விரியும் நுரையீரல் தசையை கீழே இழுப்பது இதுதான்.


கடலில் வாழும் திமிங்கலங்கள், டால்பின்கள் நீர்ப்பரப்பின் மேலே வந்து சுவாசித்துவிட்டு பின்னர் கீழே சென்று விடும். இவற்றுக்கு காற்றைச் சுவாசிக்க தலைப்பகுதியில் ப்ளோஹோல் பகுதி உண்டு.


கில்ஸ்


சுறா மீன்களில் சில வகையுண்டு இவை. கடலிலுள்ள நீரை முதலில் குடித்துவிட்டு அதனை கில்ஸ் எனும் உறுப்பு வழியாக வெளியே பீச்சி அடிக்கும். இதனால், நீரிலுள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதோடு தேவையில்லாத நீரையும் வெளியேற்றி விடுகிறது.


3


துடிக்கிறதே இதயம்!


இதயம் என்பது ஒருவரின் கை அளவுதான் இருக்கும். இதயத்தசை என்பது ஒரு நிமிடத்திற்கு 80 முறை துடிக்கிறது. அப்படி துடித்தால்தான் ரத்தம் உடல் முழுக்க செல்லும். இதயம் துடிப்பதை நிறுத்தினால் உடல் உறுப்புகள் உடனே செயலிழக்கும்.


ரத்தவோட்டம்


ரத்தம் உடலில் குறிப்பிட்ட சர்க்கியூட் போல நகர்கிறது. ரத்தம் நுரையீரலுக்குச் சென்று ஆக்சிஜனைப் பெற்று அதனை ரத்தத்தில் சேர்த்தி வலம் வரச்செய்கிறது. நுரையீரலுக்கு பிறகு ரத்தம் இதயத்திற்கு வந்து உடல் உறுப்புகளுக்கு அனுப்பி வைக்க்ப்படுகிறது.


ரத்தத்திலுள்ள சிவப்பு செல்கள் ஆக்சிஜனை உடலெங்கும் எடுத்துசெல்கின்றன. கூடுதலாக தேவையில்லாத கார்பன் டை ஆக்சைடையும் கூட எடுத்து செல்கின்றன.


வெள்ளை அணுக்கள் உடலில் நுழையும் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது இதுவும் ரத்தத்தில்தான் இருக்கும். நோய்களை வெள்ளை செல்கள் எதிர்த்து போராடும் போது உடலில் காய்ச்சல் இருக்கும்.


இதயம் மூலம் பம்ப் ஆகும் ரத்தம் 20 நொடிகளில் உடல் முழுக்க சுற்றிவிட்டு வந்துவிடும். இதயத்திலுள்ள வால்வு ரத்தம் உடல் உறுப்புகளுக்கு செல்ல திறந்துமூடும். இது ஒருவழிப்பாதையாகவே செயல்படும்.




கருத்துகள்