கூகுள், ஐஓஎஸ் இயக்கமுறைகளுக்கு மாற்றான லினக்ஸ் இயக்கமுறைமைகள்! - எது பெஸ்ட் ஒரு அலசல்!
பொதுவாக ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் ஆகியவை ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் கோலோச்சுகின்றன. இதற்கு முக்கியமான காரணம் இந்த மென்பொருட்களின் தரமும் விலையும் என்று கூறலாம். குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்கள் மென்பொருட்களை விற்கும் அதேசமயம். போனிலுள்ள சென்சார்களைப் பயன்படுத்தி பயனர்களை உளவு பார்க்கும் விஷயங்களையும் செய்கின்றன. இலவசமாக ஒன்றை ஒருவர் ஒருவருக்கு கொடுக்கிறார் என்றால் அவரையே இலவசமாக மாற்றி விற்பனை செய்கிறார் என்று படித்த வரி இப்போது நினைவுக்கு வருகிறது. அப்படித்தான் பெரு நிறுவனங்கள் முடிவு செய்து வேலைகளைத் தொடங்கி வருகின்றன.
இதற்கு மாற்றாக ஓப்பன் சோர்ஸ் வகையில் பல்வேறு ஓஎஸ்கள் உள்ளன. இவை பயனருக்கான பாதுகாப்பை உறுதி செய்கின்றன. தேவையில்லாத ஆப்களும் இதில் இருக்காது. கூகுள், ஆப்பிள் ப்ரீ இன்ஸ்டால்டு ஆப்கள் பிரச்னையும் இருக்காது. ஆனால் நீங்கள் பயன்படுத்தி வரும் அனைத்து விஷயங்களையும் இதில் பயன்படுத்துவது கடினமாகவே இருக்கும்.ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்ஸிலுள்ள அனைத்து விஷயங்களும் இதில் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் இப்படி ஓப்பன் சோர்ஸ் முறையில் தயாரிக்கப்படும் ஓஎஸ்கள் பயனர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் தருகின்றன என்று சொல்லலாம். இதில் சாதகங்களும் உள்ளன. பாதகங்களும் மறுபுறத்தில் உள்ளன. ஸ்மார்ட்போன்களுக்கான ஓஎஸ்களைப் பார்ப்போம்.
லீனியேஜ் ஓஎஸ்
இந்த ஓஎஸ்சில் கூகுளின் எந்த ஆப்களும் கிடையாது.. உங்களுக்கு தேவையென்றால் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். ஆனால் அதற்கு மாற்றான பல்வேறு ஆப்கள் இதில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சில போன்களில் ஆண்ட்ராய்ட் வெர்ஷன்கள் 11க்கு மேல் அப்டேட் ஆகாது. ஆனால் இந்த லீனியேஜைப் பொறுத்தவரை அந்த பிரச்னை இல்லை. ஆண்ட்ராய்ட் ஓப்பன் சோர்ஸ் புரோஜெக்ட் மூலம் லீனியேஜ் ஓஎஸ் உருவாக்கப்பட்டது. எனவே அப்டேட்டுகள் உங்களுக்கு எளிதாக கிடைக்கும். தேவையான வசதிகளையும் போனில் ப்ரீ இன்ஸ்டால் செய்துள்ள ஆப்கள் மூலமே பெறலாம்.
லீனியேஜ் ஓஎஸ் பக்கங்களுக்கு சென்றால் அதில் சாம்சங்கின் பழைய மாடல் போன்களில் பயன்படுத்தும்படியாக தகவல்களைக் கொடுத்துள்ளார்கள். எனவே அனைத்து போன்களிலும் பயன்படுத்த முடியாது என்றாலும் கூகுளின் ஆண்ட்ராய்ட்டை விட பாதுகாப்பும் அழகானதுமாக லீனியேஜ் ஓஎஸ் உள்ளது. முன்னதிலிருந்து நிறைய வேறுபாடுகளைக் கொண்டதும் கூட. ஸ்மார்ட்போன்களை முழுக்க இலவச மென்பொருளால் உருவாக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் உருவாக்கப்பட்டது. பயன்படுத்த அதிக தடுமாற்றமில்லாத ஓஎஸ்ஸாகவும் இருக்கிறது. எனவே பயனர்கள் இதனை ஒருமுறை முயற்சித்து பார்க்கலாம்.
/இ/
இந்த ஸ்மார்ட்போன் ஓஎஸ்சும் கூட சிறப்பான செயல்பாடு கொண்டதுதான். இதில் தேவையான ஆப்களை எஃப்ராய்டு எனும் ஸ்டோரிலிருந்து தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளைப் போலவே இந்த ஓஎஸ்ஸிலும் மாற்று சேவைகள் உள்ளன. இவை ஓஎஸ்ஸை இன்ஸ்டால் செய்யும்போதே இன்ஸ்டால் ஆகிவிடும். அதனால் புதிய ஆப்களை தனியாக தேடி இன்ஸ்டால் செய்யும் அவசியம் இல்லை.
சாம்சங் கேலக்ஸி நோட் 2 என்ற போன் இந்த இ ஓஎஸ்ஸூக்கு சரியானது. இது மட்டுமன்றி 112 சாதனங்களில் இதனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
சந்தையில் இ ஓஎஸ் பொருத்தப்பட்ட போன்களைக் கூட ஆன்லைனில் வாங்கலா்ம். அமெரிக்காவில் உள்ள ஃபேர்போன் என்ற நிறுவனம், இ ஓஎஸ்ஸைக் கொண்டு விற்கப்படுகிறது. முடிந்தால் நீங்கள் ஆர்டர் செய்து வாங்கலாம்.
உபுண்டு டச்
2011ஆம் ஆண்டு உபுண்டு தயாரிப்பு நிறுவனமான கனோனியல் இதனை உருவாக்கியது. இன்றுவரை இதனை கைவிடாமல் மென்பொருள் நிபுணர்களோடு சேர்ந்து மேம்படுத்தி வருகிறது. மொசில்லா ஓஎஸ் 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதைப்போன்றதுதான் இதுவும் ஆனால் இதனை ஸ்மார்ட்போனில் இயக்குவது கணினியில் இயக்குவது போலவே இருக்கிறது. உபுண்டு லினக்ஸ் கணினியின் போர்ட்டபிள் பதிப்பு என இதனைக் கூறலாம்.
ஒப்பீட்டு அளவில் லீனியேஜ், இ ஆகிய ஓஎஸ்களை விட நிறுவுவது எளிது. பயன்படுத்தவும் சிறப்பாக உள்ளது.
ப்யூர் ஓஎஸ்
டெபியன் நிறுவனத்தின் ஜினோம் முறையை பின்பற்றுகிற ஓஎஸ் அமைப்பு. இது பிற ஆண்ட்ராய்டு வகை இல்லாத ஓஎஸ்களை விட சிறப்பாகவே ஸ்மார்ட்போனில் இயங்குகிறது. ஃப்ரீ லினக்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் இதனை பட்டியலிட்டிருக்கிறது. ப்யூரிசம் என்று நிறுவனம், ஸ்மார்ட்போனுக்கான ப்யூர் ஓஎஸ்ஸை தயாரித்து வழங்குகிறது.
லிப்ரேம் 5, லிப்ரேம் 5 யுஎஸ்ஏ எனும் இரு வகைகளில் போன்கள் விற்பனையில் உள்ளன. பிற போன்களை விட குறிப்பாக பைன்போன் என்பதை விட விலை அதிகம் என்பதால் கவனித்து வாங்குவது நல்லது.
பிளாஸ்மா மொபைல்
கேடிஇ எனும் நிறுவனத்தின் லினக்ஸ் முறையிலான ஸ்மார்ட் போன் ஓஎஸ் இது. இது பிற ஸ்மார்ட்போன்களைப் போலவே இயங்குகிறது. கூகுளின் பல்வேறு ஆப்களை கேடிஇ அப்சர்வர் எனும் ஆப் மூலம் பெறலாம். இதனை மெமரி கார்டில் பதிவிறக்கி அதன் மூலம் போனில் இணைத்து ஓஎஸ்ஸை செயல்படுத்தலாம்.
மஞ்சாரோ ஆர்ம்
ஆர்ச் லினக்ஸ் வகையைச் சேர்ந்த ஓஎஸ் இது. இதனையும் மேற்சொன்னபடி மெமரி கார்டில் தரவிறக்கி இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
போஸ்ட்மார்க்கெட் ஓஎஸ்
இந்த நிறுவனம் லினக்ஸ் முறையிலான மென்பொருளை பத்தாண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என நினைத்து செயல்பட்டுவருகிறது. இதன்மூலம் போன்களை அடிக்கடி மென்பொருள் மேம்பாட்டிற்காக மாற்ற வேண்டியதில்லை.. பழைய போன்களை திரும்பவும் பயன்படுத்தலாம், அவற்றை தூக்கி எறியவேண்டாம் என்ற இலக்கு கொண்ட இந்த நிறுவனம் ஆச்சரியப்படுத்துகிறது. 250வித டிஜிட்டல் பொருட்களில் பயன்படும் என்று கூறினாலும் முடிவு எதிர்ப்பார்ப்பது போல இல்லை. இந்த ஓஎஸ்ஸை பயன்படுத்தும்போது சில டிஜிட்டல் சாதனங்களில் அழைப்பு,, கேமரா என சில விஷயங்கள்தான் செயல்படுகிறது. சில சேவைகள் செயல்படவில்லை. ஆனாலும் நிறுவனத்தின் நோக்கம் முக்கியமானது. அதற்காகவேனும் செல்போன் நிறுவனங்கள் மனசு வைத்தால் போஸ்ட்மார்க்கெட் ஓஎஸ் நிறைய மக்களை சென்று சேரலாம்.
பைன்போன்
லினக்ஸ் முறையிலான நிறுவனங்களில் நிறைய ஓஎஸ்களை ஆதரிக்கும் நிறுவனம் இதுதான். மேலும் பல்வேறு புதிய சாதனங்களை உருவாக்கி வருகிறது. அதாவது வன்பொருள் வகையில் ஸ்மார்ட்போன், டேப்லெட், கணினி, ஸ்மார்ட்வாட்ச் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அனைத்தையும் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது. பல புதிய வசதிகளை தனது பயனர்கள், மேம்பாட்டாளர்கள் மூலம் கொடுக்க நினைக்கும் நிறுவனம் இது. இதனால் ஒரே சமயம் ஆர்வமூட்டுவதாகவும் மற்றொரு சமயம் அய்யோடா என அலற வைப்பதாகவும் உள்ளது.
பிசி மேகசின்
கருத்துகள்
கருத்துரையிடுக