சுவாரசியமான செய்தி வெறியால் அழிக்கப்பட்ட தனது குடும்பத்திற்காக அறவழியில் பழிவாங்கல்! - பினாக்கியோ - கொரிய தொடர் - இறுதிப்பகுதி

 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOhrWLAdWpzWpGuhT-ygw5QtIofc_WwZHJRsWpt0w1gdIb1lhupq0bkxWufdlkiEbWD4NE4V947C77ty8W8GYammvmTPJkeTimPHE2b24-5u4srU8vCa7uN49W4WkVTvypeT9dXO51aTdg/s1600/pinocchiobanner.jpg

 

 

பினாக்கியோ


இறுதிப்பகுதி


கொரியதொடர்


எம்எக்ஸ் பிளேயர்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeTEZDmHPJw90-TeO8CmyDAife2dlE3LQml8n6-XMNekri0WIIwbqCxFWt_MaIvMajrDLcOej6hpqCoVi-qc-SkPJLl9sPaowY11CHBqChRIIXhnFQxeE-T9DxoZwl6l9p8VtfibA7ZU8/s1600/PNC4avi_002412673.jpg
டிவி சேனல் நேர்காணலில்...


மொத்தம் இருபது எபிசோடுகள்தான். முதல் பகுதியில் தீயணைப்பு வீரரான ஒருவர் கட்டிடம் ஒன்றில் தீயணைக்க செல்கிறார். அங்கு தகவல் கொடுப்பவர் செய்யும் குளறுபடியால் தீயணைப்பு வீரர்கள் அனைவருமே கேஸ் வெடித்து இறக்கும்படி ஆகிறது. உண்மையில் இதற்கு பின்னணியில் தொழிலதிபர் ஒருவரும் அவருக்கு உதவியாக அரசியல்வாதியும் உள்ளனர். ஆனால் இந்த உண்மை வெளியே வரக்கூடாது என தொழிலதிபர் பங்குகளை வைத்துள்ள எம்எஸ்சி என்ற ஊடகத்தின் செய்தியாளர் சாவோக்கிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.


முதலில் உண்மை, நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவர் இறுதியில் வாய்ப்புதான் வசதியைக் கொடுக்கும் என சலனப்பட்டு டீலுக்கு ஒகே சொல்லுகிறார். செய்திகளில் வீரர்கள் இறப்புக்கு தீயணைப்பு வீரர்களின் தலைவர்தான் காரணம் என கட்டம் கட்டுகிறார் சாவோக்கி. இதனால் மக்களின் கோபம் முழுக்க தீயணைப்பு வீரரின் குடும்பம் மீது திரும்புகிறது. இப்படி மக்களின் வெறுப்பினால் தீயணைப்பு கேப்டனின் மகன்கள் கி ஜே மியூங், ஹோமி யூங் ஆகியோரின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கேப்டனின் மனைவி கடைக்கு சென்றால் கூட கடைக்கார ர்கள் அவருக்கு பொருட்கள் தர மறுக்கிறார். இதனால் அவரின் அம்மா, அவமானம் தாங்காமல் சிறுவன் ஹோமி யூங்கை வாண வேடிக்கை காட்ட கூட்டிச்சென்று தற்கொலை செய்துகொள்கிறார்.


இந்த நிகழ்ச்சியையும் ஊடகங்கள் டிவியில் காட்டி டிஆர்பி பெறுகின்றன. அப்போது அந்த குடும்பத்தின் அண்ணன் கி ஜே மியூங் மட்டுமே மிச்சமிருக்கிறான். அவனுக்கு வாழ்கைகயில் ஒரே நோக்கம். தங்களது வாழ்க்கையை நாசம் செய்த எம்எஸ்சி டிவியின் செய்தியாளர் சாவோக்கியை கொல்லவேண்டும். என்பதுதான். இதனை அவர் எப்படி நிறைவேற்றினார் என்பதை முதல் பாகம் கூறுகிறது. கூடுதலாக, அம்மாவுடன் கடலில் குதித்த ஹோமி யூங் உயிர்பிழைக்கிறான். அவனை சோய் காங் பில் என்ற வயதானவர் எடுத்து வளர்க்கிறார். அவருடைய மகன் சோய் தால்போ நாற்பது வயதில் இறந்துவிட, அந்த நினைவில் அதே பெயரை தான் கடலில் கண்டெடுத்த சிறுவன் ஹோமி யூங்கிற்கும் வைக்கிறார். முறைப்படி தத்தெடுத்து வளர்க்கிறார். அங்குதான் ஹோமி யூங், தன்னை வளர்ப்பவரின் மகன் வயிற்று பேத்தி சோய் இன்காவை சிறுமியாக பார்க்கிறான். அவனுக்கு அவளைப் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. சில நாட்களுக்கு பிறகுதான் தனது குடும்பத்தை அழித்த சாவோக்கியின் மகள்தான் அவள் என தெரிய வருகிறது. அவன் மனதில் குரோதம் பொங்குகிறது. காலப்போக்கில் அவள் மீதான குரோதம் மறைந்து காதல் உருவாகிறது

 

[Video] Added Korean drama 'Pinocchio' episode 11 ...
கீ ஜே மியூங் - கீ ஹேமியூங் சந்திக்கும் காட்சி

சோய் இன்காவைப் பொறுத்தவரை உண்மையைப் பேசவேண்டும் என்பதுதான் விதி. பினாக்கியோ குறைபாடு அவளுக்கு உள்ளது. இதனால் அவள் பொய் பேசினால் உடனே விக்கல் வந்துவிடும். அப்பாவுடன் வாழ்ந்து வந்தாலும் தன்னை கைவிட்டுவிட்டு போன அம்மாவின் நினைவு அவளுக்கு எப்போதுமே உண்டு. அம்மாவின் முகம் காணவே எம்எஸ்சி டிவியைப் பார்த்துக்கொண்டிருப்பாள். பனிரெண்டு ஆண்டுகளாக அம்மாவின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவளது அம்மா சாவோக்கியைப் பொறுத்தவரை வேலை முன்னேற்றத்திற்கு குடும்பம் என்பது பெரிய எதிரி என நினைக்ககிறாள் என்பது இன்காவிற்கு பின்னாளில்தான் தெரிய வருகிறது.


சாய் தொல்போ தனது கடந்த கால வாழ்க்கையை கைவிட்டு தனது வளர்ப்பு அப்பாவுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறான். வகுப்பில் அனைத்து பாடங்களிலும் ஜீரோ மார்க் எடுப்பவன், இன்காவிற்காக அவளுக்கே தெரியாமல் க்விஸ் போட்டியில் பங்கேற்கிறான். தன்னை தேர்வு ஒன்றில் காப்பியடித்து எழுதினான் என்று கூறும் முதல் மாணவன் ஆங் சான் சூவை ஸ்மார்ட்டாக அவமானப்படுத்துகிறான். அவனை டிவியில் பார்த்த உடனே அவன் புத்திசாலித்தனத்தை உணர்கிறாள் இன்கா. உடனே டிவியில் செய்தியாளர் ஆகவேண்டுமென முயல்கிறாள். சில ஆண்டுகள் கடந்தபிறகு சாய் தொல்போவிற்கு கல்லூரி படிக்க வசதியில்லை. எனவே அவன் டாக்சி ஓட்டி குடும்பத்திற்கு உதவுகிறான். அவனது சித்தப்பாவான இன்காவின் அப்பா, சிறிய உணவகம் ஒன்றை நடத்துகிறார்

 

https://asianwiki.com/images/4/46/Pinocchio-0021.jpg
(வலமிருந்து இடம்)தொல்போவின் வளர்ப்பு தந்தை இன்காவின் தந்தை, இன்கா

இன்காவின் அப்பாவிற்கு இன்காவும் தொல்போவும் காதலிப்பது தெரியவர, தொல்போவை கூப்பிட்டு கண்டிக்கிறார். அவருக்கு வசதியான மருமகன் வேண்டும் என நினைக்கிறார். ஆனால் தொல்போ குடும்பமே இல்லாத அனாதை என்பதால் அவனைப் பிடிப்பதில்லை. இந்த நேரத்தில் இன்கா தனது அம்மா வேலை செய்யும் எம்எஸ்சி டிவிக்கு நேர்காணலுக்கு போகிறாள். ஆனால் அவள் பினாக்கியோ என்பதால் அவமானம்தான் மிஞ்சுகிறது. அவளை தனது மகள் என்று தெரிந்தாலும் கூட அம்மா கண்டுகொள்வதில்லை. இந்த நேரத்தில் இன்கா ஏன் செய்தியாளர் ஆக முடியாது என தொல்போ சாவோக்கி தனது டாக்சியில் வரும்போது சண்டை போடுகிறான். பின்னர், நானும் உன்னோடு செய்தியாளர் பணிக்கு வருகிறேன். இருவரும் அதே வேலைக்கு முயற்சிப்போம் என்கிறான். இருவரும் செய்தியாளர்கள் ஆனார்களா இல்லையா என்பதுதான் முதல்பகுதி.


இரண்டாவது பகுதியில் பழிவாங்கும் படலம் தொடங்கிவிடுகிறது. கியூ ஜே மியூங் தண்ணீர் கேன் போடும் வேலையைச் செய்தபடி சாவோக்கியை எப்படி கொலை செய்வது என யோசித்தபடி இருக்கிறான். அப்போது அவனும் அவனது நண்பனும் குடிக்கச்சொல்லும் பாரில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தீ விபத்தில் கேப்டனை எப்படி தவறான செய்தி சொல்லி பலி கொடுத்தார்கள் என மூன்று பேர் பேசுவதை கேட்கிறான். அவர்களை பின்தொடர்ந்து சென்று கொல்கிறான். இறுதியாக சாவோக்கியை கொலை செய்ய நினைக்கிறான். அப்போது சாலையில் செல்லும்போது, சிறுவன் ஒருவரை கி ஜே மியூங் காப்பாற்றுகிறான். இவனை பயன்படுத்தி எம்எஸ்சி டிவி டிஆர்பியில் முன்னுக்கு வருகிறது. அவனை நாயகனாக்கி விடுவதும் சாவோக்கிதான். இந்த நேரத்தில் டிவியை முன்னேற்ற இன்காவை இன்டர்ன்ஷிப் போல அங்கு வேலை செய்ய சாவோக்கி அழைக்கிறார். அப்போது இன்கா சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்துகொண்டிருக்கிறாள். தொல்போ, ஒய்ஜிஎன் சேனலில் பயிற்சி செய்தியாளராக வேலை செய்கிறான். தொல்போ தனது பள்ளி கால நண்பன் ஆங் சான் சூ போலீசாக இருப்பதை அறிந்துகொள்கிறான். அதோடு இன்காவும் இவர்களோடு இணைகிறாள். கூடவே பம்ஜோ என்ற சூப்பர்மார்க்கெட்டை நடத்தும் பார்க் ரோசாவின் மகன் பம்ஜோவும் இன்காவை காதலிக்கவென எம்எஸ்சி சேனலில் இணைகிறான்.


Pinocchio | Pinocchio, Drama, Slice of life

கி ஜே மியூங் தனது அண்ணன்தான் என தொல்போ விரைவில் உணர்ந்துகொள்கிறான்.ஆனால் அவர் கொலைகாரனாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வேறுவழியின்றி தீக்குச்சி தன்னை எரித்து வெளிச்சம் கொடுப்பதைப் போலவே அண்ணனின் சம்மதத்துடன் அவர் கொடுக்கும் தகவல்களை வைத்து ஒய்ஜிஎன் டிவியில் செய்தி வெளியாகிறது. அவரைப் பற்றிய நேர்காணலை எம்எஸ்சி டிவியில் சாவோக்கி நடத்துகிறார். லைவ் நிகழ்ச்சியில் அவரைப் பற்றிய உண்மையைச் சொல்லி தான் ஒரு கொலைகாரன் இதை தெரிந்துகொள்ளாமல் நாயகனாக்கி செய்தி வெளியிடுகிறார்கள் என கி ஜே மியூங் பேசுகிறார். அவன் யார் என்று தெரிந்ததும் சாவோக்கி மெல்ல பயப்படத் தொடங்குகிறார். அதேநேரம் ஒய்ஜிஎன்னில் ஹோமி யூங் என்ற பெயரில் தொல்போ அண்ணன் செய்த கொலைகளை பற்றிய செய்தித்தொகுப்பை வெளியிடுகிறான். இந்த நேரத்தில் ஹோமி யூங் வளர்ப்பு அப்பாவின் வீட்டிலிருந்து வெளியேறி அண்ணன் வீட்டுக்கு வந்துவிடுகிறான். இன்காவுடனான உறவும் காதலாக மாறுகிறது. அதனை இருவரும் இரவு நேரம் ஒன்றில் ஆத்மார்த்தமாக பரிமாறும் முத்தம் மூலம் உணர்கிறார்கள். அண்ணனின் பழிவாங்கும் படலத்தை கையில் எடுத்துக்கொள்ளும் ஹோமி யூங், தனது அப்பா கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் உள்ளது தனது நண்பன் பம்ஜோவின் அம்மா பார்க் ரோசா என்பதை உணர்கிறான். இதனை நண்பனுக்கும் கூறிவிடுகிறான்.

https://i.pinimg.com/originals/4d/19/a4/4d19a4209cbe938dee691f2abf0455c7.jpg
தனது அம்மா சாவோக்கியை டிவி சேனலில் இன்கா சந்தித்தபோது..

இறுதிப்பகுதியில் செய்தியாளர் சாவோக்கி , பார்க் ரோசா இருவரையும் எப்படி பழிவாங்கினான், உண்மையை சொல்லும் செய்தியாளராக மாறினான் என்பதை நகைச்சுவையும் நெகிழ்ச்சியுமாக கூறியிருக்கிறார்கள். தொடரை லீ, பார்க் சின் ஹை ஆகியோரின் காதலை மட்டும் வைத்து நகர்த்திக்கொண்டு போகவில்லை. அதைத்தாண்டி தத்து எடுத்த வளர்த்த அப்பா, அவரின் மகன், தனது உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டே வாழும் சாவோக்கி, வாய்ப்பு வசதிக்காக யாரையும் எதையும் செய்யலாம் என வாழும் பார்க் ரோசா, பணக்காரனாக இருந்தாலும் கூட நேர்மையாக வாழ நினைக்கும் பம்ஜோ, ஒருதலையாக காதலித்து ஏமாந்து சரக்கடித்து மட்டையாகும் ரிப்போர்டர் யுன் யூரே, சலிப்பும் விரக்தியுமாக வாழும் காவல்துறை அதிகாரி ஆங் சான் சூ, சாவோக்கியை மறைமுகமாக திட்டினாலும் நேரடியாக பார்த்தால் கும்பிடு போடும் எம்எஸ்சி கேப்டன் என சுவாரசியமான பாத்திரங்கள் தொடர் முழுக்க நம்மை வசீகரிக்கின்றன.


அடிப்படையில் செய்தி நிறுவனங்கள் பணத்திற்காக எப்படி செய்தியை திரிக்கின்றன, அதற்காக செய்தியாளர்களை எப்படி தூண்டுகின்றன, சுயநலத்திற்காக எப்படி ஊடகங்கள் பாரபட்சமாக நடந்துகொள்கின்றன என்பதை நேர்மையாக காட்டியுள்ளது பாராட்டுக்குரியது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjarIQqkYc7qBqsP-oBcbEDofsvXqRsNYBwNSgQAV2DXyzyqaKUAG0WjXWNH-4LA2yiMqbrkC-4iNmJ-iUCuu7Pq1gLTuxaoxXTeuYsIISH7r6vEMSN4iUTETlEmfxzenVBe_QeUU-UoEay/s1600/rsz_tumblr_ni6atlbxhd1sl7awmo1_1280.jpg

தொடரின் நாயகி பினாக்கியோவாக நடித்துள்ள இன்கா (பார்க் சின் ஹை)தான். உணர்ச்சிகளை விக்கலுடன் வெளிப்படுத்தவேண்டும் என்பதுதான் இவருக்கு உள்ள சவால். தனது அம்மா மீதான பாசம், அதேசமயம் காதலன் தொல்போவின் இழப்பிற்கும் நியாயம் வேண்டும் என தடுமாறியபடி அவர் பேசும் காட்சிகள் அற்புதமாக உள்ளன. அடுத்து, தொல்போ மற்றும் இன்காவுடனான காதல் காட்சிகள் . பதிமூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் வளரும் இருவரும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காதவர்கள். குடும்ப உறவுகள் சார்ந்து மனதிலுள்ள காதலை வெளிப்படுத்தாமல் இருந்தாலும் இருவரும் தனியாக பிரிந்திருக்கும்போது அதனை நினைக்கின்றனர். தனது காதலை மறைக்க முடியாமல் இன்காவுடன் இரவு உணவு சாப்பிட்டு விட்டு சாலையின் நடுவே முத்தமிடும் காட்சி சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.


குடும்ப உறவு நெருக்கடி காரணமாக காதல் வேண்டாம் என்ற வாய் அளவில் பேசினாலும் கூட தொல்போ, சாய் இன்கா என இருவராலும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க முடிவதில்லை. இவர்கள் காதல் ஒருபுறம் என்றால் இன்கா அம்மாவிற்கு அனுப்பும் குறுஞ்செய்திகளை படித்தே அவளை காதலிக்கும் பம்ஜோ இன்னொரு ரகம். அவளது அம்மாவின் மீதான அன்பைக் கண்டே அவள் மீது அவனறியாமல் காதலில் வீழ்கிறான். இறுதிவரை அவனது காதல் அப்படியே தொடர்கிறது. இறுதியில் தனது காதலை சொல்லி இன்கா நண்பர்களாக இருப்போம் என்று கூறிவிட்டபோதும் கூட தொல்போவிடம் அவளை கஷ்டப்படுத்தாதே ப்ளீஸ் என்கிறான்

 

https://i.pinimg.com/originals/02/ba/d4/02bad457ef0b412d840cc4d201ed0840.jpg
காதல் கைகூடிய மகிழ்ச்சியில் செய்தியாளனாக ...

சாவோக்கி முதல் பகுதியில் இரக்கமே இல்லாதவராக காட்டப்படுகிறார். அடுத்த பகுதியில் அவர் தரப்பு நியாயம் கூறப்படுகிறது. அவருக்கு தொல்போ பெரிய எதிரியாக தெரியாதபோதும், அவனது மன உறுதி அவரை நிலைகுலைய வைக்கிறது. அடுத்து அவர் பிரியம் காட்டாத மகளின் குறுஞ்செய்திகள் நாம் இத்தனை ஆண்டுகளாக எதனை இழந்துள்ளோம் என்பதை நினைத்துப்பார்க்க வைக்கிறது. அதற்குப் பிறகு மகளுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்.


மெல்ல தான் செய்த குளறுபடிகளை, அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை தொல்போவின் மூலம் தெரிந்துகொள்கிறார். அதற்கு மேலாக தொல்போவை காதலிக்கும் இன்கா, அம்மாவின் பழியை ஏற்று அதற்காக வெடிவிபத்து வழக்கில் தீவிரம் காட்டுகிறாள். பார்க் ரோசா, சாவோக்கி இரண்டு பேரும் பரிமாறிய குறுஞ்செய்திகளை இன்கா சாவோக்கியிடம் காட்டும்போது அவள் பதற்றமடைகிறாள். அவளது டிவி இயக்குநர் அவளுக்கு பதவி ஆசை காட்டியதைப் போலவே மகளுக்கும் சபலத்தை காட்ட நினைக்கிறாள். ஆனால் அவளது அப்பா நேர்மையாக இருந்து பின்னர் பதவி விலகி உணவகத்தில் வேலை செய்வதை பேச்சு வாக்கில் சொல்லுகிறார். இன்கா சற்றே கலவரமடைந்தாலும் அம்மாவுக்கான தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும் என நினைக்கிறாள். அவளின் உறுதி சாவோக்கியை தான் அம்மாவாகவும் சரியில்லை. செய்தியாளராகவும் தோல்வியைத் தழுவிவிட்டோம் என நினைக்க வைக்கிறது.

https://koreandramaandkpoplover.great-discovery.com/wp-content/uploads/2014/11/PinocchioKdrama_episode4_z11.jpg
one side lover fumjo

இறுதியில் தொல்போ கொடுக்கும் குறுஞ்செய்தி கோப்புகள், போன் இரண்டையும் கையில் வாங்கியபடி நடந்துகொண்டே கரைந்தழும் காட்சி பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளது. தொடரை பெருமளவு இயக்கும் பாத்திரம் சாவோக்கிதான். இறுதியில் உணவகம் ஒன்றில் தொல்போ, சுவாரசியமான செய்தி, அவசியமான செய்தி பற்றி எடுத்துக்காட்டுடன் விளக்குவது சாவோக்கியின் மனதை முழுமையாக மாற்றி விடுகிறது.

தனது குடும்பமே அரசியல், பணம், பதவி வெறியால் அழிந்துபோனாலும் அவர்கள் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திருந்துவதை மட்டுமே தொல்போ எதிர்பார்க்கிறான். சாவோக்கியிடம் அவர்களது தவறுகள் பற்றி ஆதாரங்களை அதனால்தான் ஒப்படைக்கிறான். பழிவாங்குவதற்கான வாய்ப்பு இருந்தாலும் கூட அதனை ஸ்மார்ட்டான வழியில் ஒருவர் தானே அதற்கான காலம் எடுத்து முடிவெடுத்து செய்வதற்கு வாய்ப்பளிக்கிறான். இந்த அறம்தான் தொல்போவை சிறந்த மனிதனாக்குகிறது. பார்க் ரோசாவிடம் கூட தனிப்பட்ட பகை காரணமாக கேள்வி கேட்காமல் என்ன விஷயம் தேவையோ அதைப்பற்றி மட்டுமே கேள்வி கேட்க வைக்கிறது. தான் யார், என்ன வேலை செய்கிறோம் என்பதை அவன் உணர்ந்ததால் இன்கா, நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என கூறிய பிறகும் தனது கையிலுள்ள ஆயுதத்தை அவளது அம்மா மீது பயன்படுத்தவேயில்லை. இறுதிப்பகுதி நெகிழ்ச்சியாக முடிவுக்கு வருகிறது. தொடரை எம்எக்ஸ்பிளேயரில் பார்க்கலாம். 

குறை என்றால் முதல்பகுதியில் தமிழ் டப்பிங் நன்றாக இருக்கிறது இரண்டாவது பகுதியில் பலரும் மூக்கால் பேசுவது போலவே இருக்கிறது. இன்காவின் டப்பிங் ஆளும் மாறியிருப்பது உச்சரிப்பில் தெரிகிறது. தொல்போவிற்கும் , அவரது அண்ணணிற்குமான டப்பிங் படுமோசம். ஒரு தொடர் என்றால் முடிந்தவரை டப்பிங் பேசுபவர்கள் ஒரே மாதிரி இருப்பது தொடரை இடைவெளி விட்டு பார்த்தாலும் கூட அதனை பாதிக்காது.

செய்தி விளையாட்டு!


கோமாளிமேடை டீம்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்