தனது குடும்பத்தை அழித்த டிவி நிருபரை பழிவாங்கப் போராடும் சகோதரர்களின் கதை! பினாக்கியோ - கொரிய தொடர்
பினாக்கியோ
கொரிய தொடர்
10 எபிசோடுகள்
எம்எக்ஸ் பிளேயர்
தீயணைப்பு வீரரின் குடும்பம் எப்படி ஊடகங்களின் தவறான செய்தியால் அழிகிறது. அதில் மிஞ்சிய அண்ணன் அதற்கு காரணமான ஆட்களை கொலை செய்ய திட்டமிட்டு வாழ்ந்து வருகிறான். அவன் தற்கொலை செய்துகொண்டதாக கருத்ப்படும் தம்பி சொய் தொல்போ என்ற பெயரில் வயதான ஒருவரால் தத்து எடுக்க்ப்பட்டு வளர்க்கப்படுகிறான். விதிவசத்தால் அவனை கடலிலிருந்து மீ்ட்டு வளர்க்கும் குடும்பம் வேறு யாருமில்லை. அவனது குடும்பத்தை அவதூறு செய்து அம்மா தற்கொலை செய்துகொள்ள காரணமான செய்தி ஆசிரியர் சாவ் கீ யின் கணவர் குடும்பம்தான். மனைவி தன் பேச்சை கேட்காத காரணத்தால் அவளை விவகாரத்து செய்துவிட்டு தனது தந்தையுடன் வாழ்கிறார் சாவ் கீ கணவர்.
சாவ் கீயின் மகளை இன்கா ஒரு பினாக்கியோ குறைபாடு கொண்ட சிறுமி. இந்த குறைபாடு வந்தவர்கள் யாரும் பொய் சொல்லமுடியாது. சொன்னால் உடனே விக்கல் வந்துவிடும். முதலில் அவளை அவளது அம்மாவுக்காக வெறுக்கும் தால்போ மெல்ல அவளை நேசிக்கத் தொடங்குகிறான். அந்த வீட்டில் சாவ் கீ கணவரின் தம்பியைப் போலவே அவனை ஏற்றுக்கொண்டதால் புத்திசாலித்தனத்தை கூட மறைத்து வைத்து வாழ்கிறான் அந்த சிறுவன்.
சொல்ல மறந்துவிட்டோமே தொல்போவின் தந்தை உயிருடன் இருப்பதாக கூறும் செய்திக்கு பினாக்கியோ கொண்டவன்தான் காரணம். தான் கூறும் செய்தியின் விளைவை தெரியாமல் அப்படி பேசியதால் தொல்போவின் அம்மா தற்கொலை செய்துகொள்கிறாள்.
தொல்போ தனது குடும்பம் பற்றிய உண்மையை மறைத்து வைக்கிறான். பள்ளியில் தனது புத்திசாலித்தனத்தைக் கூட மறைத்துக்கொண்டு அமைதியாக வாழ்கிறான். ஆனாலும் இன்காவிற்காக ஒரே ஒரு முறை தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் சூழல் ஏற்படுகிறது. அப்போதும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன் தன்னை முந்தும் தால்போவை கீழே தள்ளி அவன் வினாதாளை திருடி விட்டான் என வதந்தியைப் பரப்புகிறான். இதை அவனது ஆசிரியர்களும் நம்பிவிட, தன்னை அவன் டிவி நிகழ்ச்சியில் நிரூபிப்பதோடு, தன்னை அவமானப்படுத்திய மாணவனை பகிரங்கமாக நாடே பார்க்கும்படி ஸ்மார்ட்டாக கேவலப்படுத்துகிறான். ஏன் அப்படி செய்தாய் என்று அந்த டிவி சேனல் இயக்குநர் கேட்க, தனது வாழ்க்கையை அளித்த அந்த டிவிகாரர்களை சாக்கடை, அருவெருப்பானவர்கள் என திட்டுகிறான். அந்த சம்பவத்தை நினைவுகூரும் டிவி நிலைய இயக்குநர் அவமானத்திலும் குற்ற உணர்ச்சியிலும் குன்றிப்போகிறார். தொல்போவின் முகத்தைப் பார்க்கவே தவிர்க்கிறார்.
தொல்போவை தத்தெடுத்த குடும்பம் வசதியானது கிடையாது. தொல்போவின் அப்பா, அண்ணன், இன்கா ஆகியோர் பிரியமாகத்தான் இருக்கிறார்கள், இன்கா மேல்படிப்பு படிப்பதற்காக தொல்போ, கல்லூரி படிப்பை தியாகம் செய்கிறான். டாக்சி ஓட்டுகிறான். அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்பத்திற்கு கொடுக்கிறான். இன்காவைப் பொறுத்தவரை தொல்போவை மாமா என கூப்பிட்டாலும் அவன் மீதான காதல் வேகமாக வளர்ந்து வருகிறது. தொல்போவிற்கு ஏதாவது பிரச்னை என்றால் பொறுத்துக்கொள்ள முடியாது முடிந்த களேபரங்களை செ்ய்கிறாள். அவன் வீடு வரத் தாமதமானால் கூட குடையை எடுத்துக்கொண்டுபோய் பேருந்து நிறுத்தத்தில்
காத்திருக்கிறாள்.
ஆனால் இவர்களது உறவை இன்காவின் அப்பா ரசிக்கவில்லை. அவருக்கு பணக்கார பையன்தான் மகளை சிறப்பாக வைத்துக்கொள்ள முடியும். எனவே தொல்போவை அழைத்து உனது தகுதி உனக்கு தெரியும். உனது இடத்தில் உன்னை வைத்துக்கொண்டால் போதும் என எச்சரிக்கிறார். ஆனால் தொல்போவைப் பொறுத்தவரை தனது குடும்பமே அழிந்தது இன்காவின் அம்மாவினால் என்றாலும் கூட அவளை அவளது குறைபாட்டுடனே நேசிக்கிறான். . இந்த நேரத்தில் இன்கா தனது தாய் போலவே டிவியில் நிருபராக நினைக்கிறாள். இதற்கு தொல்போவும் உதவுகிறான். இந்த நேரத்தில் தொல்போவின் அண்ணன், அவனது அப்பாவிற்கு கெட்டபெயர் ஏற்பட காரணமாக குடியிருப்பு ஆட்களை கண்டுபிடித்துவிடுகிறான். அவர்களை கொல்வதற்கு திட்டம் தீட்டுகிறான். அதில் அவன் வென்றானா?, பொய்யே சொல்லமுடியாத இன்கா எப்படி ஊடகத்தில் சேர்ந்தாள், அவளது அம்மாவின் அன்பைப் பெற்றாளா என்பதைத்தான் தொடர் விளக்குகிறது.
டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் தொடரின் நாயன் லீதான் இதிலும் தொல்போவாக அசத்தலாக நடித்திருக்கிறார். இது முழுக்க நாயகிக்கான தொடர். வசனத்தைப் பேசியபடி விக்கியபடியே நடிக்கவேண்டும் தொடர் முழுக்க சவாலான காட்சிகள் இன்காவாக நடித்துள்ள பார்க் சின் ஹை என்ற பெண்ணுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. சீரியசான கதைக்கருதான். தொடர் முழுக்க உற்சாகமான காமெடி காட்சிகள் நிறைய உள்ளன. அதனால் அதிக சலிப்பின்றி தொடரைப் பார்க்கமுடிகிறது.
முதல் பகுதியாக ஐந்து எபிசோடுகளில் தொல்போவின் பள்ளி வாழ்க்கை, அப்பா இறப்பது, குடும்பம் சிதைவது, அவனை வேறொரு குடும்பம் தத்து எடுப்பது, டாக்சி ஓட்டுவது, டிவி நிருபராகும் முயற்சி ஆகியவற்றை சொல்லுகிறது. இரண்டாவது பகுதி ஐந்து எபிசோடுகள் இன்காவிற்கும் தொல்போவிற்குமான பிரிக்கவே முடியாத காதலைப் பேசுகிறது. கூடவே தொல்போவின் அண்ணன் பழிவாங்கும் முயற்சி, ஊடகங்களுக்கு இடையிலான போட்டி, துரோகம், தந்திரம், ஊடகப்பயிற்சி காட்சிகள், செய்தி, விளைவு பற்றியும் விளக்கியிருக்கிறார்கள். தொடரை ஜாலியாக ரசித்துப் பார்க்கலாம்.
செய்தியும் விளைவும்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக