வங்கி, நீதிமன்றம், பொழுதுபோக்கு, மருத்துவத்தில் அசத்தும் பெண்கள்! - ஜெயஶ்ரீ வியாஸ், மோனிகா ஷெர்ஜில், மீனா கணேஷ், கருணா நந்தி
பெண்களின் வங்கி!
ஜெயஶ்ரீ வியாஸ்
மேலாண் இயக்குநர், ஶ்ரீமகிளா சேவா சகாகரி வங்கி
பெரும்பாலான வங்கிகள் நகரங்களை குறிவைத்து தொடங்கப்படுகின்றன. அவற்றின் சேவையும் கூட பெருநிறுவனங்களை மையமாக கொண்டதே. ஆனால் நாம் இங்கே பேசப்போகும் வங்கி ஏழைப்பெண்களின் வாழ்வை மாற்றுதவற்காக நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியின் பெயர்தான், ஶ்ரீ மகிளா சேவா சகாகரி.
வங்கிகளில் கடன் பெறுவது என்பதைத் தாண்டி, வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு சேமிப்பு காப்பீடு, ஓய்வூதியம், பொருளாதார அறிவு ஆகியவை தேவைப்படுகின்றன. என்றார் குஜராத் கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநரான ஜெயஶ்ரீ வியாஸ். வங்கியில் தற்போது 300 கோடி இருப்புத்தொகையாக உள்ளது. இருநூறு கோடியை கடனாக வழங்கியுள்ளனர். ஆறு லட்சம் பயனர்கள் உள்ளனர். 1.5 லட்சம் கடன் பெறுபவர்கள் உள்ளனர்.
தற்போது இந்த வங்கி அனைத்து விஷயங்களையும் டிஜிட்டல் வழியில் செய்ய முனைகிறது. விர்ச்சுவல் வடிவில் பயிற்சிகளை வழங்குவதோடு, பொருளாதார அறிவு பற்றியும் பெண்களுக்கு கற்றுத்தருகின்றனர். இந்தவகையில் 5 ஆயிரம் பெண்களுக்கு பயிற்சி தந்துள்ளது மகிளா வங்கி. இவர்களுடைய கடன் கொடுக்கும் காலம் என்பது குறைவானது . பணம் வங்கிக்கு வரும் அளவு அதிகமாக உள்ளது. கிராமங்களில் உள்ள பெண்களுக்கு போன் மூலமே பல்வேறு விஷயங்கள் சென்று சேரும்படி அமைக்கப்பட்டுள்ளது.
சாதனை
கடந்த பதினைந்து மாதங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பொருளாதார அறிவை கடத்தியுள்ளார்.
மனித உரிமைகளைப் பேசும் வழக்குரைஞர்
கருணா நந்தி
அரசியலமைப்புச்சட்டம், மனித உரிமைகள் மற்றும் வணிகரீதியான சட்ட வழக்குகள் என இரண்டையும் வெற்றிகரமாக சமாளித்து சாதனை செய்து வருகிறார,் கருணா நந்தி. அண்மையில் பேடிஎம் நிறுவனத்திற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனர் விவரங்களை நூதனமான மோசடி மூலம் பெறுவது பற்றிய வழக்கில் பங்கேற்றார்.
டெல்லியிலுள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதார்ப் பட்டம் பெற்றார். பின்னர், கேம்பிரிட்ஜ் சென்று சட்டம் படித்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எல்எல்எம் படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.
2012ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்று குழு வல்லுறவு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு வல்லுறவுக்கு எதிரான சட்டம் உருவாக காரணமாக இருந்தார். 66ஏ எனும் ஐடி சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருக்க நீதிமன்றத்தில் முறையிட்டு வென்றார். ஸ்பைஸ் ஜெட்டில் பணியாற்றிய மாற்றுத்திறனாளி ஜீஜா கோஷ் என்ற பெண்ணுக்கான இழப்பீட்டுத்தொகையை வாதிட்டு பெற்றுக்கொடுத்தார். மேலும் போபால் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, யூனியன் கார்பைடு காரணமாக நச்சாகிப் போன நீர்நிலைகளை மூடுவதற்கான உத்தரவு என நிறைய வழக்குகளை சிறப்பாக நடத்தி வென்றிருக்கிறார். இருபது ஆண்டுகளாக வழக்குரைஞராக பயிற்சி செய்து வருகிறார்.
ஆட்டோமொபைல் ராணி
லக்ஷ்மி வேணு
கூடுதல் இயக்குநர், சுந்தரம் கிளேடன்
சுந்தரம் கிளேடன் நிறுவனத்தில் பத்து ஆண்டுகளாக வருமானத்தை மூன்று மடங்காக உயர்த்தி காட்டிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.
ஆட்டோமொபைல் துறையில் சில பெண்களை சாதித்திருக்கிறார்கள். அதில் லஷ்மி குறிப்பிடத்தக்கவர். ஹர்ஸ்பீனா ஸவேரி, லஷ்மி வேணு ஆகியோர் இதில் குறிப்பிடத்தவர்கள். 2014ஆம் ஆண்டு முதல் சுந்தரம் கிளேடன் நிறுவனத்தில் தலைவராக உள்ளார். பல்வேறு வணிக அழுத்தங்கள் இருந்தாலும் கூட அதனை வெற்றிகரமாக சமாளித்து வந்துள்ளார். புதிய கண்டுபிடிப்புகளும், புதிய திட்டங்களும்தான் இதற்கு காரணம். 2003ஆம் ஆண்டிலிருந்து சுந்தரம் கிளேடனில் பணியாற்றி வருகிறார் லஷ்மி. இவர் கூடுதலாக பல்வேறு நிறுவனங்களின் போர்டு உறுப்பினராக இருப்பதோடு, டாபே மோட்டார்ஸ் நிறுவனத்தில் கூடுதல் இயக்குநராக உள்ளார்.
மருத்துவத்துறையில் புதுமை!
மீனா கணேஷ்
துணை நிறுவனர், இயக்குநர் போர்ஷியா மெடிக்கல்
மீனாவைப் பொறுத்தவரை பிக்பேஸ்கட், டியூட்டர்விஸ்டா, ப்ளூஸ்டோன், க்ரௌத்ஸ்டோரி, டெஸ்கோ ஆகிய நிறுவனங்களை துணை நிறுவனராக தொடங்கி மேலும் சிலவற்றில் முதலீடு செய்து என வணிகம் செய்துவருகிறார். இது இவரது சிறப்பம்சம் கிடையாது. போர்ஷியா மெடிக்கல் என்ற வீட்டுக்கு வந்து மருத்துவசேவை அளிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் 16 நகரங்களில் செயல்பட்டுவருகிறது. 4500 ஊழியர்கள் இதில் பணியாற்றுகின்றனர். கொரோனா காலத்தில் இவர்கள் உருவாக்கிய கிட் ஒன்று மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இவரது கணவர் கணேஷ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றியவர். பின்னர் இணைய வழியில் செயல்படும் டியூட்டர் விஸ்டா என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தை பியர்சன் நிறு்வனம் 213 மில்லியன் டாலர்கள் விலைக்கு வாங்கிக்கொண்டது.
வெற்றிக்கதைகள்
மோனிகா ஷெர்ஜில்
துணை தலைவர், நெட்பிளிக்ஸ் இந்தியா
கதைகளை பிறருக்கு சுவாரசியமாக சொல்வது ஒரு கலை. அதனைத்தான் தனது பத்தாண்டுகள் அனுபவத்தின் மூலம் மோனிகா செய்துவருகிறார். இந்தியாவை மையமாக கொண்ட 22 கதைகளை நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ளது. இதில் பத்து கடந்த ஓராண்டில் வெளியாகியுள்ளது. மீதியுள்ளவை அடுத்து வரும் ஆண்டுகளில் வெளியாகும். மோனிகாவைப் பொறுத்தவரை படத்தை பல்வேறு பாகமாக சொல்வதும் அதனை சுவாரசியமாக சொல்லுவதும் முக்கியம். திரைப்படங்கள், வெப் தொடர்கள், ஆவணப்படங்கள் என மோனிகாவின் ஆர்வம் வேறுபட்டது.. இந்த அலைவரிசையில்தான் கதைகளை தேர்ந்தெடுக்கிறார். இதனால் நெட்பிளிக்ஸின் தொடர்கள், படங்கள் போட்டியாளர்களை விட நம்பிக்கை அளிக்கும்படி சிறப்பாக அமைகின்றன. இந்த வகையில் மசாபா, ஜம்தாரா, கில்டி, ராட் அகேலி ஹை, புல்புல் ஆகிய வெளியீடுகளை சொல்லலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக