ஏற்றுமதி, இறக்குமதியில் உள்ள வேறுபாடுகள்!
பாயும் பொருளாதாரம் 10 ஒரு நாட்டில் தயாரிக்கும் பொருளை இன்னொரு நாடு விலைக்கு வாங்கிக்கொண்டால் அது இறக்குமதி. ஒரு பொருளை ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு விற்பது ஏற்றுமதி. நியூசிலாந்தில் பால் வளம் அதிகம். எனவே, அவர்கள் அதை வளம் குன்றிய ஏழை நாடுகளுக்கு விற்கிறார்கள். சில நாடுகளில் இலவசமாக கொடுத்து தங்களுடைய பால் பொருட்களுக்கான சந்தையை உருவாக்கிக்கொள்ள முயல்கிறார்கள். ஏன்? ஏனென்றால் அங்கு பால்வளம் மிகுதி. இதனால் பால், பால் பொருட்கள் விலை மலிவாக கிடைக்கிறது. இப்போது உதாரணத்தைப் பார்ப்போம். நியூசிலாந்து பாலை பால் பொருட்களை மலிவாக விற்கிறது. சீனா, சோலார் பேனல்களை மலிவான விலையில் உற்பத்தி செய்து கொடுக்கிறது என்றால் பரஸ்பரம் இரு நாடுகளும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு பொருட்களை விற்றுக்கொள்ளலாம். இது இருநாடுகளுக்குமே லாபம்தான். தேசப்பாதுகாப்பு என முட்டுக்கொடுத்து தொலைத்தொடர்பு நுட்பங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கலாம். ஆனால், காசு ஏராளமாக செலவாகுமே? பதிலுக்கு சீனாவிடம் குறைந்த விலைக்கு சிறந்த தொழில்நுட்பங்களை ஆசியாவிலேயே பெறலாம். ஆனால் இந்திய அரசை நடத்தும் மதவாத கட்சிக்கு கமிஷன் போய்...