இடுகைகள்

நடனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு சென்ற ஆசிரியர், விடுதலையாகி தனது மகன், மகளைத் தேடி அலையும் கதை!

படம்
   சீக்ரெட் ஆப் பியர்ல்ஸ் துருக்கி டிவி தொடர் யூட்யூப் 36 அத்தியாயங்களை தாண்டிப்போனாலும் நாயகனது பிளாஷ்பேக் கதையை சொல்லாமல் இழு இழுவென இழுத்துவிட்டார்கள். அதெல்லாம் கடந்து தொடர் கொஞ்சமேனும் பார்க்கும்படி இருக்கிறதென்றால் அதற்கு துருக்கி மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக வரும் நாயகனின் நடிப்பையே அடையாளமாக சுட்டிக்காட்ட வேண்டும். வயதானவரை நாயகனாக வைத்து டிவி தொடர் எடுத்து அதை எப்படி வெற்றிகரமாக்குவார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அசீம் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் உடல்மொழி, முக உணர்வு, வசனம் என அத்தனையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அசீம், அவரது மனைவி ஹண்டேவைக் கொன்றதாக குற்றம்சாட்டி சிறையில் பல்லாண்டுகள் தள்ளப்படுகிறார். தண்டனை முடிந்து வரும்போது அவரின் ஆண், பெண் என இருபிள்ளைகளும் அரசு விதிகள்படி காப்பகத்தில் இருந்து தத்து கொடுக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அசீம் கண்டுபிடிப்பதே மீதிக்கதை. மேற்சொன்ன கதை மட்டுமே வைத்துக்கொண்டாலே கதையை உணர்ச்சிகரமாக கொண்டு செல்லமுடியும். ஆனால் இயக்குநர், அதோடு சேர்ந்து அசீம் தங்கும் மலிவான குறைந்த விலை விடுதியில் நடனக்...

நடிகர்களின் தொழில்வாழ்க்கை நீட்டிக்கப்பட்டிருக்கிறது! - இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி

படம்
  மிதுன் சக்கரவர்த்தி மிதுன் சக்கரவர்த்தி இந்தி நடிகர்  நீங்கள் 370 திரைப்படங்களுக்கு மேல் நடித்துவிட்டீர்கள். புதிதாக படம் தொடங்கும்போது பதற்றமாக இருக்குமா? பதற்றம் இருக்காது. ஆனால் நடிக்கும் குழு புதிது என்பதால் முடிந்தளவு கவனமாக இருப்பேன். அக்குழுவோடு முழுமையாக இணைய இரண்டு மூன்று நாட்கள் தேவை. ஜோக்குகளை சொல்லி அனைவரிடம் பேசினால்தான் நான் மூத்த நடிகர் என்பதை பலரும் மறப்பார்கள்.  நீங்கள் நடிக்க வந்து 46 ஆண்டுகள் ஆகிறது. அன்றிலிருந்து இன்றுவரை ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன என்று சொல்லுங்கள்.  எண்பது, தொண்ணூறுகளில் ஐந்து பாட்டு, ஐந்து பைட், நிறைய வசனங்கள் என இயங்கினோம். இப்போது முக்கியமான பாத்திரங்களில் பெரிய நடிகர்களே நடித்து வருகிறார்கள். இப்படி நடித்தால் நடிகர்களின் தொழில் வாழ்க்கை இன்னும் நீளும்.  அமேசானின் பெஸ்ட் செல்லர்ஸ் தொடரில் நடிக்கிறீர்கள் அல்லவா? அதில் போலீஸ் பாத்திரம். அவரின் பாத்திரத்தை பிறர் எளிதாக கணிக்கவே முடியாது. தனக்கென தனி யூடியூப் சேனலை வைத்து கொண்டிருக்கும் அதிகாரி. நகரில் எங்கு என்னென்ன உணவு கிடைக்கும் என பேசிக்கொண்டே இருப்பவர். அதேசமயம்...

முக்கியமான தெற்காசிய ஆவணப்படங்கள்!

படம்
  ஷோகேர்ள்ஸ் ஆஃப் பாகிஸ்தான் 2020 கோஸ்ட் ஆப் ஆப்கானிஸ்தான்  லாங் பீரியட் ஆஃப் பர்சிகியூசன் கோஸ்ட் ஆப் ஆப்கானிஸ்தான்  2021 ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தானில், தாலிபன் எப்படி வென்றார்கள், நேட்டோ படை அங்கு தோற்றுப்போனதையும், பெண்கள் பாதிக்கப்பட்டதையும் ஆவணப்படம் விளக்குகிறது.  லாங் பீரியட் ஆஃப் பர்சிகியூசன்  2019 வங்கதேசம் ப்ரோசூன் ரஹ்மான் உருவாக்கியுள்ள ஆவணப்படம் இது. புலம் பெயர்ந்த ரோஹிங்கயா முஸ்லீம்களின் வாழ்க்கையைப் பற்றியது. மியான்மரிலிருந்து விரட்டப்பட்டு இனத்தூய்மை நாடாக அது மாறியதைப் பற்றி பேசுகிறது.  ஷோகேர்ள்ஸ் ஆஃப் பாகிஸ்தான் 2020  பாகிஸ்தான்  சயீத்கான் உருவாக்கியுள்ள ஆவணப்படம் இது. முஜ்ரா எனும் கலாசாரத்தை முக்கியத்துவப்படுத்தியுள்ளது. மூன்று நடனப் பெண்மணிகள் வாழ்க்கையைப் பேசுகிறது. இவர்கள் மதம் சார்ந்த பல்வேறு மிரட்டல்களை சந்தித்தாலும் நடனத்தை தொடர்ந்து வருவதை காட்சிபடுத்துகிறது. 

நடிப்பு, ஓவியம், பாடல், இசைப்பாடல்கள், நடனம் ஆகியவற்றில் சாதித்த கிளாசிக் பெண்கள்

படம்
                திரைப்பட நடிகை மர்லின் டயட்ரிச்   ஜெர்மனி அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் , நடிகராக புகழ்பெற்றவர் மர்லின் டயட்ரிச் . இவர் 1930 ஆம் ஆண்டு தி ப்ளூ ஏஞ்சல் என்ற படத்தில் தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கினார் . இதன்பிறகு ஆங்கிலத் திரைபடங்களில் நடித்தவர் , பாடல் , நடிப்புக்கென உலகமெங்கும் உள்ள தியேட்டர்களுக்கு பயணித்து வெற்றி கண்டார் . உலகப் போரின்போது ஜெர்மனியிலிருந்து வெளியேறிய மக்கள் அமெரிக்காவிற்கு வந்து குடியேற பல்வேறு உதவிகளைச் செய்தார் . மர்லின் மன்றோ திரைப்பட நடிகை   1926 ஆம் ஆண்டு பிறந்தவரின் இயற்பெயர் நார்மா ஜீன் மார்டென்சன் . இவர் காப்பகத்தில் வளர்ந்தவர் . 1950 களுக்குப் பிறகு படங்களில் நடித்து புகழ்பெற்றார் . தனது நடிப்பிற்காக கோல்டன் குளோப் விருது வென்றார் . தனது 36 வயதில் திடீரென இறந்துபோனாலும் சினிமா வரலாற்றில் இவரளவுக்கு கவர்ச்சியான பெண் என்று யாரையும் குறிப்பிட முடியாது . 1944 ஆம் ஆண்டு சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் மன்றோ ஆயுத தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார் . ...

எதிர்காலத்தில் புகழ்பெறவிருக்கும் ட்ரைவ் இன் விழாக்கள்!

படம்
            ட்ரைவ் இன் விழாக்கள் இங்கிலாந்தில் பெருந்தொற்று காரணமாக ட்ரைவ் இன் விழாக்கள் கொண்டாடப்பட தொடங்கியுள்ளன. ட்ரைவ் இன் விழாக்கள் என்றால், கார்களை விழா நடக்கும் இடத்திற்கு கொண்டு சென்று அதிலிருந்தபடியே விழாவை ரசிப்பது, பரிமாறப்படும் உணவை சாப்பிட்டுவிட்டு அப்படியே காருக்குள் இருந்துவிட்டு பாதுகாப்பாக திரும்பி விடுவது. இதன்மூலம் நோய்த்தொற்று பரவாது. பாதுகாப்பாகவும் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் விழா என்றால் மக்கள் ஒன்றுகூடி பேசுவது என்பது இதில் நடைபெற வாய்ப்பு இல்லை. கார்கள் இயங்கிக்கொண்டே இருந்தால் மாசுபாடு அதிகரிக்கும். விழாவில் நடனம் ஆடுவது கடினம். கார் இல்லாதவர்கள் விழாவுக்கு வரமுடியாது ஆகிய சிக்கல்கள் உள்ளன. பிளஸ் என்றால், உங்கள் இஷ்டம் போல இருக்கலாம். டிஜே பாடல் பிடிக்கவில்லை என்றால், உங்கள் காரில் உள்ள பாடலை இயக்கி ரசிக்கலாம். இவை எல்லாம் பெருந்தொற்று கால வரவு என்பதை புரிந்துகொண்டால் சரி. தி வீக் ஜூனியர்  

இந்த வாரத்தில் நடைபெறும் விழாக்கள்!

படம்
இந்த வார விழாக்கள்! தாஜ் மகோத்சவ் பிப்.18 – -27 உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா. இந்தியக் கலாசாரம், கைவினைப் பொருட்கள், உணவுத் திருவிழா, ஒட்டகச் சவாரி என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வெளிநாட்டினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். மாசாட்டு மாமங்கம் பிப்.20 கேரளத்தின் திரிச்சூர் மாவட்டத்தில் திருவானைக்காவு கோவிலில் நடைபெறும் விழா. ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், குதிரகோலம் எனும் குதிரை பொம்மைகளை உருவாக்கி பிரமிக்க வைக்கிறார்கள். மாலையில் இங்கு பாரம்பரிய யானைகளின் அணிவகுப்பு  முக்கிய அம்சமாகும். கஜூராகோ நடனத் திருவிழா  பிப்.20 – -26  1975ஆம் ஆண்டிலிருந்து கஜூராகோவிலுள்ள கோவில்களின்  பின்னணியில் நடைபெறும் நடனத் திருவிழா. மத்தியப் பிரதேசத்திலுள்ள கஜூராகோவின் விஸ்வநாத, சித்ரகுப்தா கோவில்களில் நடனங்கள் நடத்தப்படுகின்றன. அனுமதி இலவசம். மகா சிவராத்திரி பிப்.21 இந்தியாவிலுள்ள சிவபக்தர்கள் கொண்டாடும் விழா. சூரிய உதயத்தில் எழுந்து, விரதமிருந்து கங்கை ஆற்றில் குளித்துவிட்டு சிவனின் கோவில்களு...

இந்த வாரம் முழுக்க நடைபெறும் பிரபல விழாக்கள் - ஒரு பார்வை

படம்
இந்த வாரம் நடைபெறும் விழாக்கள் விழாக்கள் ஆதிவாசி திருவிழா ஜன.26-பிப்.9 வரை ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஷ்வரில் ஆண்டுதோறும் நடைபெறும் பழங்குடியினர் திருவிழா. இதில் 60க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பங்கேற்கின்றனர்.  தம் கலாசார விஷயங்களை பார்வையாளர்களுக்கு கலை, உணவு, இசை, நடனம் ஆகியவற்றின் வழியாக வெளிப்படுத்துகின்றனர். சிலிகா பறவைத் திருவிழா  ஜன.27-28 ஒடிசா மாநிலத்திலுள்ள மங்கலஜோடி சதுப்புநிலம் மற்றும் நலபானா ஆகிய இடங்களில் இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவை, சுற்றுலாத்துறை நடத்துகிறது. புகைப்பட கண்காட்சி, பறவைகளை பார்த்தல், பறவைகளைப் பற்றிய செய்திகளை கூறுவது என நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ரீத் 2020  ஜன.29 -பிப்.2 ராஜஸ்தானின் நடைபெறும் கலைவிழா. கைவினைப்பொருட்கள், இசை, சூஃபி நடனம், இசையோடு தியானம் என களைகட்டும் விழா இது. ராஜஸ்தானிலுள்ள ஜெய்சல்மீரில் உள்ள நச்சானா ஹவேலி, நாராயண நிவாஸ் பேலஸ் ஆகிய இடங்களில் இந்த விழா நடைபெறுகிறது.  இந்தியா கலை விழா ஜன.30 - பிப்.2 2008ஆம் ஆண்டு தொடங்கி நடைபெறும் விழா. டில்லிய...