இடுகைகள்

குளோனிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டாலி என்ற செம்மறி ஆட்டிற்கு ஏன் இத்தனை புகழ்?

படம்
  பல ஆண்டுகளாக குளோனிங் செய்வது என்பதை, அனைவரும் திரைப்படங்களில் தான் பார்த்து வந்தார்கள். டாலி என்ற ஆடு இந்த முறையில் உருவாக்கப்படும் வரை. இந்த செம்மறி ஆடுதான் முதன்முதலில் செம்மறி ஆட்டின் ஸ்டெம்மில் இருந்து உருவாக்கப்பட்டது.  இந்த குளோனிங் ஆட்டிற்கு மூன்று அம்மாக்கள் உண்டு. ஒரு ஆட்டில் டிஎன்ஏ, மற்றொன்றில் கருமுட்டை, மூன்றாவது ஆட்டை வாடகைத்தாயாக பயன்படுத்தினார்கள். இப்படித்தான் டாலி என்ற குளோனிங் ஆடு உருவாக்கப்பட்டது.  1996ஆம் ஆண்டு ஜூலை 5 அன்று, டாலி என்ற ஆடு உருவாக்கப்பட்டது. இந்த ஆடு பிறந்து ஆறரை ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தது. பொதுவாக ஒரு செம்மறி ஆட்டின் ஆயுள் காலம் பனிரெண்டு ஆண்டுகள் ஆகும். இந்த ஆடு குறுகிய காலமே வாழ்ந்ததற்கு குளோனிங் செய்தது காரணமாக என்று தெரியவில்லை.  டாலியை உருவாக்கும்போது பெறப்பட்ட ஸ்டெம் செல் கொண்ட ஆட்டிற்கு ஆறுவயதாகியிருந்தது. எனவே பிறக்கும்போது, டாலியின் வயது ஆறு என்று நாம் கொள்ளலாம்.  டாலி ஆடு வெற்றிகரமான ஆறு குட்டிகளை ஈன்றது. இதனை தானாகவே செய்தது. இக்குட்டிகளுக்கு போனி, சாலி, ரோஸி, லூசி, டார்சி, காட்டன் என்று பெயர் வைக்கப்பட்டது. இன்று நடைபெறும் குளோனிங் ஆரா

செல்லப்பிராணிகளை குளோனிங் செய்யும் நிறுவனங்கள் வந்துவிட்டன! அடுத்து என்ன - குளோனிங்கில் அடுத்த கட்டம்?

படம்
                  பெருகும் குளோனிங் செயல்முறைகள் குளோனிங் செய்யும் செயல்முறை முன்னர் வேகமாக தொடங்கினாலும் பல்வேறு தடைகள் , விதிகள் காரணமாக தொடர்ச்சியாக நடைபெறவில்லை . ஆனால் தற்போது செல்லப்பிராணிகளை , போலீஸ் நாய்களை , அழியும் நிலையுள்ள விலங்குகளை குளோனிங் செய்து வருகிறார்கள் . முதன்முதலில் டாலி என்ற ஆட்டை குளோனிங் செய்து பிறக்க வைத்தனர் . இப்போது அந்த நிகழ்ச்சி நடைபெற்று 25 ஆண்டுகள் ஆகின்றன . முதலில் இம்முறையை எப்படி பயன்படுத்துவது என தடுமாற்றம் இருந்தது . ஆனால் தற்போது உருவாகியுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் பூனை , ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை வணிகரீதியில் குளோனிங் செய்து தருகின்றன . அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் கர்ட் என்ற குதிரையை குளோனிங் முறையில் உருவாக்கினார்கள் . இந்த இனத்தில் 2 ஆயிரம் குதிரைகள் இருந்தாலும் கூட குளோனிங் செய்வதற்கான தரம் குறிப்பிட்ட இன குதிரை ஒன்றிடம் மட்டுமே இருந்தது . இப்படி நாற்பது ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட செல்களை வைத்து குளோனிங் செய்யப்பட்டது . இந்த கர்ட் குதிரை வளர்ந்து பெரியதாகி இனத்தை பெருக்கும்போது இழந்த மூதாதையர்களின் குணநலன