இடுகைகள்

ஆப்போ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீப்பான சீனக்கம்பெனிகள் ஜெயித்தது எப்படி?

படம்
www.scmp.com சீனக் கம்பெனிகள் சாதித்தது எப்படி? இந்தியாவில் மொபைல் கம்பெனிகளுக்கு குறைவில்லை. ஆனால் தரம் என்று பார்த்தால், ஒனிடா, வீடியோகான், மைக்ரோமேக்ஸ் ஆகிய கம்பெனிகள் மேட் இன் இந்தியா என பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் இப்போன்களை வாங்கியவர்கள் சந்தோஷப்பட ஏதுமில்லை. அப்படியே மலிவான கொரிய போன்களுக்கு பெயரை மட்டும் லாவா, ஒனிடா, வீடியோகான் என வைத்து பரபரப்பான விற்றனர். இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, மைக்ரோமேக்ஸ் போன்ற கம்பெனிகள் போன்களை வேகமாக விற்க முயற்சித்தனரே தவிர அதில் தரத்தையோ தனித்துவத்தையோ பராமரிக்க முயற்சிக்கவில்லை. இந்த நேரத்தில் இந்தியச் சந்தையில் சாம்சங் கோலோச்சிக் கொண்டிருந்தது. நோக்கியா சரிவில் இருந்தது. பிளாஸ்டிக் போன்களை அதிக விலை வைத்து விற்ற எல்ஜியின் சுவடையே காணோம். அப்போது பீக்கில் கிராக்கி காட்டியது கொரியா செட்டுகள்தான். திருவிழா செட்டு போல முத்துக்கொட்டை பல்லழகி என எங்கு பார்த்தாலும் சத்தம். அந்த நேரத்தில்தான் சீன போன்களாக ஹூவெய், ஆப்போ, விவோ களமிறங்கின. குறைந்த விலையில் ஐபோன் வசதிகளோடு போன் விற்றால் வாங்க மாட்டார்களா? தூள் கிளப்பிய